இந்த படம் நம்ம ஊரு தமிழ் படம் என்ற படத்தை போல அந்த காலத்தின் ஸ்பை படங்கள் மற்றும் ஜேம்ஸ் பாண்ட் போன்ற ஆக்ஷன் படங்களை மொத்தமாக கலாய்க்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்டு உள்ளது. ஒரு வேலைக்காக இராணுவ ஆட்சி நடக்கும் ஒரு நாட்டுக்கு ராக் இசை நட்சத்திரமாக செல்லும் நம்முடைய கதாநாயகர் நிக் எப்படி அங்கே கண்டவுடன் காதலாக மாறும் காதலி ஹிலாரி யை பெரிய லெவல் பிரச்சனையில் இருந்து காப்பாற்றுகிறார் என்பதுதான் ஒரு வரி கதை. சமகாலத்தில் வெளிவந்த ஆக்சன் படங்களை கலாய்த்து விட்டு விளாசி இருக்கிறார்கள் தயாரிப்பு குழுவினர். பிரக்டிகல் நகைச்சுவைக்கு எப்போதுமே ரசிகர் பட்டாளம் அதிகம்தான் இந்த படம் நிறைய ஸ்பை * ஆக்ஷன் படங்களை பார்ப்பவர்களுக்கு ஒரு நைஸ் காம்பினேஷனாக இருக்கும். இந்த படத்தில் இருக்கும் சண்டைக்காட்சிகளில் சம்பந்தமே இல்லாமல் மியூஸிக்கல் படங்களின் விஷூவல் ஸ்டைல் காமைடியை கொடுத்து வித விதமாக ரக ரகமாக கலாய்க்க வேண்டும் என்றே கலாய்த்து வைத்து இருக்கிறார்கள். கண்டு ரசிக்க ஒரு கலகலப்பான பெரியவர்களுக்கான ஒரு அடல்ட் காமேடி படம் இந்த படம். உங்களுக்கு டைம் பாஸ் ஆகவில்லை என்றால் பழைய காலத்து ஹாலிவுட் படங்களில் ரசனை உள்ளது என்றால் இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள் !
No comments:
Post a Comment