ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

CINEMA TALKS - ZHAGARAM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



மிக குறைந்த படஜெட்டில் குறைந்தபட்சமாக காமெரா வொர்க் செய்து ஓரு நல்ல மேக்கிங் இந்த படம் என்றே சொல்லலாம். ஒரு சில காட்சிகளில் மொபைல் போன் கேமரா கொண்டு எடுத்து இருக்கிறார்கள். மக்களுக்கு ஒரு நல்ல சினிமா படத்தை கொடுக்க முயற்சித்து கண்டிப்பாக ஒரு கவனிக்க தகுந்த முன்னோட்டம் இந்த படம் என்று சொல்லலாம். இந்த படம் பழங்காலத்தில் இருந்தே தேடப்படும் இலக்கிய பொருள் அட்சய பாத்திரத்தை ஒரு புதையல் போல தேடுவதாக இருக்கிறது. கதை வலுவாக இல்லாமல் க்ளூ க்ளூ வாக சிறுவர் சிறுமியர் சொப்பு விளையாட்டு போல விடுமுறை சுற்றுலா போல இந்த படம் நகர்கிறது. சினிமா ஒரு ஆர்ட் என்பதால் அதனை கருத்து சொல்லும் மீடியம் என்று பயன்படுத்த முடியும் என்று ஒரு கம்மி பட்ஜெட் கலைப்படைப்பு என்றாலும் ஒரு டுவிஸ்ட் என்றால் ஒரு மிஸ்டரி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று அகதா கிறிஸ்டி - ஷெர்லாக் ஹோம்ஸ் - தி டாவின்சி கோட் போன்ற புத்தக கதைகளில் இருந்து இன்ஸ்பிரேசன் எடுத்துக்கொள்ள வலைப்பூ சார்பில் தெரிவித்து கொள்ள இங்கே கடமைப்பட்டு இருக்கிறோம். சரியாக 1 மணி நேரத்தில் முடிந்துவிடும் படத்தை 2 மணி நேரமாக இழுக்க முயற்சிக்காமல் படத்தை நிறுத்தி நிதானமாக கிரியேட்டிவ் பாய்ண்ட் டில் யோசித்து புது புது திரைக்கதை சம்பவங்களை எழுதி ஷாட் எடுத்து இருக்கலாம்  ஃபிளாஷ் பேக் காட்சிகளின் அனிமேஷன் நன்றாக இருக்கிறது. இருந்தாலும் இந்த படத்துக்கு தேவை குள்ளநரி கூட்டம் போன்ற குறைந்தபட்ச பட்ஜெட் படமாக இருந்தாலும் சிறப்பாக எடுக்க வைக்கும் மேக்கிங்-தான். மற்றபடி ஒரு முறை பார்க்கலாம். ஒரு ஷார்ட் பிலிம் ஸ்டான்டர்க்கு எடுக்கப்பட்ட ஒரு ஃபீயூச்சர் லெந்த் பிலிம் இதுவாகும். இந்த படத்தை நேஷனல் ட்ரேஷர் , அன்சார்ட்டர் , தி டாவின்ஸி கோட் படம் அளவுக்கு இன்னும் மேம்பத்தி கதையாக எழுதி இருந்தால் ஹிட் ஆக நிறைய வாய்ப்புகள் உள்ளது !


கருத்துகள் இல்லை:

ஜெட் லீ அவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் !!

  Jet Li Filmography Jet Li Movies List with Years 1982 – The Shaolin Temple 1984 – Kids from Shaolin 1986 ...