இந்த படத்துடைய கதை - ஒரு வசதி வாய்ப்புள்ள குடும்பத்தில் திருமணமாகி இருபது ஆண்டுகள் கழித்து தன்னுடைய மகள் மேல் படிப்பின் முதல் ஆண்டு சேரும்போது கணவர் விவாகரத்து அளிக்க மனைவியை கட்டாயப்படுத்த முற்படும்போது மனைவி மனமே உடைந்து போகிறாள். இருந்தாலும் தன்னுடைய கல்லூரி மேல்படிப்பை விட்டுக்கொடுத்து குடும்ப பெண்ணாக இருபது ஆண்டுகள் வாழ்ந்ததால் எப்படியாவது போராடி உயர் படிப்பு பட்டத்தை வாங்கவேண்டும் என்று மகள் படிக்கும் அதே கல்வி நிறுவனத்தில் ஸ்டூடண்ட்டாக சேர்க்கப்பட்டு எப்படி கல்லூரி படிப்பை முடித்து பட்டப்படிப்பு வாங்குகிறாள் என்பதை நகைச்சுவையாக படத்தில் சொல்லி இருக்கிறார்கள். நடிகை மெலிசா மெக்கார்த்தி இந்த படத்தின் கதாநாயகியாக ஒரு ரியல்லிஸ்ட்டான நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படத்தின் புரொடக்ஷன் டிசைன் வெற லெவலில் பெரிய பட்ஜெட் படம் போல இருந்தாலும் 2007 களின் தொடக்கத்தில் வெளிவந்த காமெடி ஸ்டுடியோ தயாரிப்பு கல்லூரி பருவ நாட்களை சொல்லும் ஒரு எபெக்ட் இந்த படத்தை புதிய படம் என்று இல்லாமல் ஒரு மாதிரியான கிளாசிக் ஹாலிவுட் படங்களின் நினைவுகளை உங்களுக்கு கொண்டு வரலாம். இந்த படத்துடைய காமெரா ஆங்கிள் மற்றும் கலர் பெலட் அமெரிக்க காமெடி நெடுந்தொடர்களை நினைவுக்கு கொண்டுவருகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் கதை என்று பெரிதாக எதையும் எதிர்பார்க்காமல் ஒரு சீனியர் ஆக்டர் என்ற லெவல்லில் திறமை மிக்க நடிகை மெலிசா மேக் கார்த்தி யின் வழக்கமான காமெடியுடன் ஒரு டிவோர்ஸ் ஃபில்ம் பார்க்க வேண்டும் என்றால் இந்த படம் உங்களுக்கான சாய்ஸ்ஸாக இருக்கலாம் ஆனால் ஸ்டார் வேல்யூ பார்த்து வழக்கம்போல சோதப்பிதான் வைத்து இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment