ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

CINEMA TALKS - MISSION CHAPTER 1 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



எதிர்பார்ப்புகளை போல பிரதான ஆக்சன் ஹீரோ வாக கம்பேக் கொடுத்த இந்த படம் அருன் விஜய் கேரியரில் கண்டிப்பாக நொடபிள் சாய்ஸ்தான் . ஆப்பரேஷன் தசரா என்று ஒரு பெரிய சதி திட்டம் தீட்டி மக்களை தாக்க நினைக்கும் ஒரு குழுவினருக்கு நேருக்கு நேராக எதிர்த்து இன்வெஸ்டிகேஷன் செய்து இந்த சதியை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கிறார் கோவை மாவட்ட சிறை ச் சாலை ஜெயிலர் குணசேகர். இதனால் இவரை எதிர்த்த இந்த அமைப்பு இவருடைய குடும்பத்தை பழிவாங்கும் விதத்தில் தாக்குதல் நடத்தவே மனைவியை இழந்து குழந்தையை தனியாக வளர்க்க வேண்டும் என்ற கட்டாயத்தில் குழந்தைக்கு மூளை ஆப்ரேஷனுக்காக பிரிட்டன் ஹாஸ்பிடல்லில் சேர்த்துவிட்டு பணத்தை கொண்டுவர முயற்சிக்கும்போது எதிர்பாராமல் உருவாகும் அசம்பாவிதத்தால் இலண்டன் சிறையில் அடைக்கப்படுகிறார். பிரச்சனை இப்போதுதான் ஆரம்பிக்கிறது. பயங்கர கும்பலின் மோசமான சில ஆட்கள் கைதிகளாக இங்கே அடைத்து வைக்க பட்டு இருப்பதால் இவர்களை தப்பிக்க வைக்க சிறையின் கணினிகளை ஹேக் செய்யும் தொழில் நுட்ப வல்லுனர்களால் சிறையை வில்லன்கள் கட்டுப்பட்டுகுள்ளே எடுத்துக்கொள்ள எப்படி இந்த பிரச்சனைகளில் இருந்து வெளியே வந்து குழந்தையை காப்பாற்றுகிறார் என்று படம் விறுவிறுப்பாக நகர்கிறது. பாடல் காட்சிகள் தேவைப்படவில்லை. விசுவல் எஃபெக்ட்ஸ் வெளிப்படையாக தெரிந்தாலும் போதுமான அளவு நன்றாகவே மெருகேற்ற பட்டு உள்ளது. கதையின் போக்கில் வந்தால் ராஜா வாத்தான் வருவேன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் இரயில்வே ஸ்டேஷன் விஷூவல் எஃபெக்ட்ஸ் போன்று சொதப்பலான சாம்பிள் எதுவுமே இல்லை. நடிப்பு பிரமாதம். தயாரிப்பு டிசன்ஸ். திரைக்கதை இன்னும் அதிகமாக வொர்க் பண்ணி இருக்கலாம். படத்தின் கடைசியில் இடம்பெறும் சண்டை காட்சி ஒரே இருட்டாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் பாணியில் ஆரஞ்சு - மஞ்சள் - ப்ரௌன் கலந்த வெளிச்சமான நைட் ஷாட் டாக இந்த காட்சிகளை படமாக்கி இருந்திருக்கலாம். மற்றபடி கண்டிப்பாக புதுமையாக முயற்சி செய்த படம். கவனிக்க வேண்டிய படம்.


கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 13

  நிறைய நேரங்களில் நம்பிக்கை வைப்பார்கள். தான் வாழ்க்கையை மொத்தமாக உடைத்து வைத்திருக்கிறார்கள். நம்மால் எதுவுமே செய்ய முடிவதில்லை. வாழ்க்கைய...