Sunday, February 2, 2025

CINEMA TALKS - INIME IPPADITHTHAAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



சந்தானம் ஒரு நல்ல நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் ஒரு நல்ல கதாநாயகர் என்றும் நிரூபித்த சில படங்களில் இதுவும் ஒன்று. நம்முடைய கதாநாயகன் எப்படியாவது காதலித்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு ஒரு பெண்ணை காதலித்ததால் நடக்க இருக்கும் திருமண ஏற்பாடுகளை தடுத்தாவது காதலில் சேர நினைக்கிறார். இருந்தாலும் அதுதான் இப்போது சிக்கலாக உருவாகிறது. தொடர்ந்து காதலித்தாலும் ஒரு ஒரு முறையும் அவரது காதலி மறுக்கவே வீட்டில் பார்த்து நிச்சயதார்த்தத்தில் முடிவு செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுக்கும் போது காதலி காதலுக்கு பச்சை கொடி காட்டவே இருவரையும் விட்டு கொடுக்காமல் எப்படி இந்த பிரச்சனைகளை சமாளிப்பது என்று மாட்டிக் கொண்டு குழம்பிப் போய் தவிக்கும் காட்சிகளும் சப்போர்டிங் ஆக்டர் தம்பி ராமையா அவர்களின் எதார்த்தமான காமெடி டயலாக் டெலிவரி போன்ற ஒரு ஹிட் அடிக்க வேண்டிய ஒரு முழு நீள படத்துக்கு தேவையான அம்சங்கள் அனைத்தும் இந்த வெளியீட்டில் இருக்கிறது. இந்த படத்துடைய கிளைமாக்ஸ் காட்சிகளும் ஏற்றுக்கொள்ளும்படியாக உள்ளது. 

No comments:

GENERAL TALKS - இனிமேல்தான் கவனமாக இருக்க வேண்டும்

1. ஒரு விஷயம் உன்னுடைய சாப்பாடு பற்றியது என்றால் அதற்காக நீ EXTREME-க்கு வேண்டுமென்றாலும் செல்லலாம் ! 2. இந்த உலகத்தில் எப்பொழுதும் மூளையை ப...