பேர்பெக்ட் அடிக்ஷன் - இந்த படம் கண்டிப்பாக ஒரு நல்ல ஸ்போர்ட்ஸ் படமாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருந்திருக்கலாம் இருந்தாலும் படத்துக்கு தேவையே இல்லாத கிளாமர் காட்சிகளோடு முக்கோண காதலை சொல்கிறேன் என்று உப்பு சப்பு இல்லாத முக்கோண சமோசாவை குளிர்சாதன பெட்டியில் வைத்தது போல அனல் பறக்கும் சண்டை காட்சிகளை எதிர்பார்த்தால் சண்டை காட்சிகளின் நேரத்தை குறைத்து கிளாமர் காட்சிகளை மட்டும் கணக்கில் இல்லாத அளவுக்கு அள்ளி அடித்து வைத்து இருக்கிறார்கள். கிளாமர் காட்சிகளை தவிர கதாநாயகியாக நடிக்கும் நடிகை வெற லெவலில் கேரக்ட்டரை உள்வாங்கி நடித்து இருக்கிறார். பிகில் விஜய் போல மேலோட்டமாக தான் எடுத்துக்கொண்ட ஸ்போர்ட்ஸ்ஸை காட்டிவிட்டு நகராமல் களத்தில் இறங்கி சண்டை பயிற்சியை கற்றுக்கொண்டு ஒரு உண்மையான வாழ்க்கை சண்டைப்பயிற்சி வல்லுநராக வாழ்ந்தே இருக்கிறார். இந்த படத்துடைய கதை, நம்முடைய கதாநாயகியை முதலாக காதலித்த காதலன் ஏமாற்றிவிட்டு கைகழுவிட்டு செல்லவே கதாநாயகி தன்னுடைய வாழ்க்கையில் வரும் இன்னொரு காதலனுக்கு எப்படியாவது நுணுக்கமான சண்டை பயிற்சிகளை கற்றுக்கொடுத்து முதல் காதலனை தோற்கடிப்பது படத்தின் கதையாக இருக்கிறது. சம்பந்தமே இல்லாமல் கிளாமர்-ரொமான்ஸ்தான் செம்ம இரி டெட் டிங் மற்றபடி நடிகர்கள் கண்டிப்பாக மொக்கையான கேரக்டர் என்றாலும் மென கெட்டு நடித்து கொடுத்து இருப்பதால் ஒரு முறை தாராளமாக இந்த படத்தை பெரியவர்கள் மட்டுமே பார்க்கவும். மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் முறை சண்டைகள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் பெரிதாக சண்டை காட்சிகள் எதுவும் இல்லை உருகி உருகி ஊடல் பண்ணுவதுதான் படத்தில் அதிகமாக உள்ளது . இதுவே ஒரு பெர்ப்பெக்ட் எம்.எம்.ஏ பாக்ஸிங் படங்களில் இருந்து இந்த படத்தை பின்னுக்கு தள்ளிவிடுகிறது என்பதுதான் நிதர்சனம். கிளாமர் படமாக முடிந்ததால் நடிப்பு நன்றாக இருந்தாலும் ஒரு தாக்கம் இல்லாமல் ஏதோ ஒரு படமாக நகர்கிறது.
No comments:
Post a Comment