ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார். அவரிடம் இருந்த ஒரு பெரிய கப்பல் பழுதாகி விட்டது. ஊரில் உள்ள பெரிய பெரிய மெக்கானிக் எல்லாம் வரவழைத்து கப்பலின் இஞ்சினை சரி செய்ய சொன்னார். ஆனால் யாராலும் இஞ்சினில் என்ன பழுது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வயதான மெக்கானிக் தான் அதை பழுது பார்த்து தருவதாக சொன்னார். சரி என்று அவரும் ஒப்புக் கொண்டார். மெக்கானிக் பெரிய பையில் பழுது பார்க்கும் பொருட்கள் எல்லாம் வைத்து இருந்தார். கப்பல் வியாபாரிக்கு இவர் மேல் நம்பிக்கை வந்து விட்டது. அந்த வயதான மெக்கானிக் இஞ்சினை நன்றாக நாலா பக்கமும் சுற்றி வந்து பார்த்தார். பிறகு தன் பையில் இருந்து சுத்தியை எடுத்து ஒரு இடத்தில் ஓங்கி அடித்தார். இஞ்சினை ஸ்டார்ட் பண்ணி பார்த்தார் அதுவும் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. கப்பல் வியாபரியிடம் அந்த மெக்கானிக் நாளை என் கடையில் வேலை செய்யும் பையனிடம் பில் கொடுத்து அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அடுத்தநாள் ஒரு பையன் பில் எடுத்து வந்து நீட்டினான். அதை பார்த்த கப்பல் வியாபாரி அதிர்ச்சி அடைந்தார். அதில் 1 லட்சம் ரூபாய் என்று போட்டு இருந்தது, அவர் அந்த பையனிடம் ஒருமுறை சுத்தியால் அடித்ததற்கு ஒரு லட்சம் ரூபாயா? தெளிவாக பில் போட்டு கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார். அடுத்த நாள் வேறு ஒரு பில்லுடன் வந்து இருந்தான், அதில் 1-சுத்தியலால் அடித்ததற்கு 5 ரூபாய் 2-எங்கு அடிக்க வேண்டும் என்று கண்டுபிடித்தற்கு 99,995 ரூபாய் என்று எழுதி இருந்தது. நமக்கு தேவைப்படும் விஷயத்தை தேடும் ஆர்வம் இல்லாமல் வாழும் மனிதர்களுடைய வாழ்க்கை இப்படித்தான் ஒரு வகையில் மிகுந்த பணவிரயம் மிக்க வாழ்க்கையாக அமைந்துவிடுகிறது !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
DREAMTALKS - EPISODE - 35 - கேள்விகளை கேளுங்கள் மக்களே !
சரித்திரங்கள் பிறந்தது எல்லாம் கேள்விகள் கேட்டதனாலே” என்ற வரி, தமிழின் ஆழமான உண்மையை வெளிப்படுத்துகிறது. மனித சமூகம் முன்னேறியது, மாற்றங்க...
-
என் செல்லம் என் சிணுக்கு என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி என் புஜ்ஜு குட்டி என் பூன குட்டி அரே மியாவ் மியாவ் ஹே… மியாவ் மியாவ்...
-
சுவாமி விவேகானந்தர் 1893 ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலக மத மாநாட்டில் ஆற்றிய புகழ்பெற்ற உரையின் தமிழாக்கம் (சுருக்கமாகவும் விரிவாகவும்) க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக