Tuesday, February 4, 2025

ARC - 111 - காசு பார்க்க கல்யாணாமா ?




ஒரு கிராம பகுதியில் பைத்தியக்கார கோடீஸ்வரன் ஒருவன் முதலைப் பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான். திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டான். அதாவது இந்த முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு ரூபாய் பத்து லட்சம் தருவதாக கூறினான். அப்படி நீந்தும் போது முதலைகள் தாக்கி இறந்து போனால் அவரது மனைவிக்கோ அல்லது உறவினருக்கோ ஐந்து லட்சம் ரூபாய் தந்து விடுவதாகவும் கூறினான். எல்லோரும் திகைத்து போய் வெகுநேரம் அந்த குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென்று ஒரு தைரியசாலி குளத்தில் குதித்து நீந்த தொடங்கினான். முதலைகள் அவனை விரட்ட தொடங்கின. அவன் உயிரை கையில் பிடித்து கொண்டு வேகமாக நீந்தி அக்கரையை அடைந்து விட்டான். அந்த பணக்காரனும் பேசியபடியே பத்து லட்சம் ரூபாயை உடனே தந்து விட்டான். வாயெல்லாம் பல்லாக தானிருந்த இடத்துக்கு திரும்பி வந்த அந்த தைரியசாலி தன் மனைவியிடம் மெதுவாக கேட்டான், "இப்படி வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கும் போது தள்ளி விட்டுட்டியே. நான் செத்திருந்தா?" மனைவி அமைதியாக சொன்னாள், "அப்போதும் எனக்கு உங்களின் இன்சூரன்ஸ் பணம் ஐந்து லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும்”. நம்ம ஆளு 'எப்படி வந்து சிக்கி இருக்கேன் பார்த்தியா ?' என்று மனம் வருந்திக்கொண்டான் , பேராசை பிடித்த பெண்ணையோ அல்லது சல்லித்தனமாக காசு எதிர்பார்க்கும் பெண்ணையோ திருமணம் செய்பவர்களுடைய நிலை இப்படித்தான் இருக்கிறது ! இதனால்தான் திருமண உறவுகளை தேர்ந்தெடுத்து சேர்க்க வேண்டும். நம்ம ஊரில் மட்டும் என்று இல்லை , பொதுவாகவே காசு சேருகிறது என்பதற்காக திருமணம் செய்யும் நிறைய பேருடைய வாழ்க்கை இப்படித்தான் கஷ்டத்தில் இருக்கிறது !



No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...