Tuesday, February 4, 2025

GENERAL TALKS - இது யோசிக்க வேண்டிய கான்ஸப்ட் !




இந்த உலகத்தில் எந்த ஒரு செயலை செய்யும் போதும் இடம் பொருள் ஏவல் என்பது மிகவும் முக்கியமானதாகும். நீங்கள் இந்த உலகத்தின் மிகச்சிறந்த மருத்துவராக இருக்கலாம் உங்களுக்கென்று ஒரு மருத்துவமனை கிடைத்தால் தான் உங்களுடைய வேலைகளை நீங்கள் பார்க்க முடியும் அதேபோல நீங்களும் இந்த உலகத்தின் மிகப்பெரிய பொறியாளராக இருக்கலாம் உங்களுக்கென்று சரியான வேலை அமைந்தால்தான் உங்களுடைய பொறியாளராக இருக்கும் திறமையை உங்களால் காட்ட முடியும். இந்த உலகத்தில் எப்போது நாம் மரணத்தை அடைகிறோமோ அப்போதே இந்த உலகத்தில் நாம் சேர்த்து வைத்த அனைத்து விஷயங்களும் இழக்கிறோம். நாம் நிறைய விஷயங்களை சேர்த்து வைக்கிறோம் ஆனால் சேர்த்த விஷயங்களை எப்படி பயன்படுத்துவது என்பது நமக்கு தெரியாமலே போகிறது. ஒரு மனிதன் அவனுக்கு பணத்தை வைத்துக்கொண்டு உன்னுடைய புதிய வீட்டுக்கு மின்சாதன பொருட்களை வாங்குகிறான் ஆனால் மின்சார கனெக்சனை வாங்கவில்லை. இன்னொரு மனிதன் அவனுக்கு கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு அவனுடைய புதிய வீட்டுக்கு மின்சார கனெக்சனை வாங்கிக் கொண்டு விடுகிறான் ஆனால் மின்சார பயன்பாட்டால் இயங்கும் மின்சாதன பொருட்களை எதையுமே அவன் வாங்குவதே இல்லை. இது போன்ற ஒரு அறியாமையால் மூழ்கியிருக்கும் மக்கள் இருக்கும் ஒரு உலகத்திலே தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதான் உங்களுக்கான இடம் என்னவென்று தெரிந்து அந்த இடத்தில் நீங்கள் செல்ல வேண்டும் உங்களுக்கான பொருள் என்னவென்று தெரிந்து அந்த பொருட்களை நீங்கள் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் உங்களுக்கான ஏவல் முறை என்பதை தெரிந்து கொண்டு மிகவும் சரியாக பேசவும் பழகவும் வேண்டும். இன்றைக்கு தேதிக்கு நீங்கள் இடம் பொருள் எவ்வளவு கற்றுக் கொள்ள நினைத்தாலும் இந்த ஒரு விஷயத்தை மட்டும் கற்றுக் கொள்ள உங்களுக்கு பல ஆண்டுகள் தேவைப்படலாம். இருந்தாலும் இந்த வலைப்பூவில் இருந்து உங்களுக்கு கொடுக்கும் பதிவு எனவென்றால் இன்றைக்கு தேதிக்கு நீங்கள் இடம் பொருள் ஏவல் என்றால் என்ன என்று நீங்கள் உங்களுடைய சொந்த முயற்சிகளில் கவனமாக கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஆபத்தான கட்டங்களில் யார் உதவியாக இல்லை என்றாலும் சரி நீங்கள் கற்றுக் கொண்ட இந்த இடம் பொருள் ஏவல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு கண்டிப்பாக உதவி செய்யும். உங்களுடைய வாழ்க்கையில் உங்களுக்கு தேவையான கருவிகளை கடைசிவரையிலும் கொடுக்காமல் உங்களை ஏமாற்றத் தான் மக்கள் நினைப்பார்கள் ஆனால் இந்த இடம் பொருள் ஏவல் கான்ஸெப்ட்டை நீங்கள் கற்றுக் கொண்டாலும் உங்களுக்கு தேவையான விஷயம் என்னவாக இருந்தாலும் அந்த விஷயத்தை அடைவதற்கான கருவிகளை உங்களுக்கு இலவசமாகவே இந்த விஷயங்கள் கொடுத்து விடுகிறது.  இன்னும் எதனால் காத்திருக்க வேண்டும் ? கவனமாக செயல்படுங்கள் இந்த போராட்டத்தை யாராலும் ஜெயிக்க முடியாது என்றாலும் நீங்கள் ஜெயித்து இந்த உலகத்தின் வரலாற்றை எழுதும் கௌரவத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். இந்த உலகத்தின் வரலாற்றை எழுதும் கௌரவத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். மேற்கொண்டு வேறு என்ன சொல்வது ? இந்த வலைப்பூவுக்கு பெரும் ஆதரவை கொடுத்து இந்த வலைபூவை உலக அளவில் மிகவும் சம்பாதிக்க கூடிய வாய்ப்பு ஆக மாற்ற தங்களால் முடியும் என்பதால் பணிவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...