நம்முடைய வாழ்க்கையில் நமக்கு பிடித்த விஷயங்களை செய்வது ஒரு சுகமான சுமை என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் இந்த சுகமான சுமையானது மிகவும் தொந்தரவான ஒரு விஷயமாகும். சுமை என்றாலே அதன் பெயர் கடினத்தன்மை தான் சுமையாக இருக்கக்கூடிய எந்த விஷயங்களிலுமே சுகம் என்பது அவ்வளவாக இருப்பதில்லை. சுகமான சுமை என்ற வார்த்தைகளை எழுதிய கவிஞரை மண்டையில் நறுக்கி என்ற கொட்ட வேண்டும். இந்தக் காலத்தில் நான் ஒரு நிறுவனத்தை உருவாக்க மிகவும் அதிகமாக போராடினேன் இந்த நிறுவனத்தை உருவாக்கக்கூடிய விஷயம் எனக்குப் பிடித்த விஷயம் தான் இதனால் இந்த விஷயம் சுமாராக மற்றவர்களுடைய கருத்துக்களை போல சுகமான சுமையாக மாறியதா என்று கேட்டால் அதுதான் இல்லை. ஒரு ஒரு நாளும் மனதுக்குள் சலிப்பையும் மனதுக்குள் சோர்வையும் தான் உருவாக்குகிறது. நாம் முயற்சி பண்ணும் போதே கிடைக்கும் விஷயங்கள் நமக்கு கிடைக்காமல் இருப்பதை பார்த்து எச்சக விஷயங்களுக்காக கஷ்டமே படாதவர்களுக்கு சும்மா கிடைப்பதை பார்த்து நடக்கக் கூடிய விஷயங்களில் இருக்கும் பெரிய தவறு நாம் கண்கூடாக புரிந்து கொள்ள முடிகிறது நமக்கு பிடித்த விஷயங்களை செய்தாலும் சரி பிடிக்காத விஷயங்களை செய்தாலும் சரி தொடர்ந்து ஒரு விஷயத்தை அதிக கவனத்துக்கு செய்து கொண்டே இருந்தால் அந்த விஷயம் நிச்சயமாக சளிப்பு தட்டும். சலிப்பு தட்டாத விஷயமாக இருக்க வேண்டும் என்றால் கணினியில் விளையாடுவது என்பது போன்ற விஷயத்தைக்கூட நீங்கள் சொல்லலாம் ஆனால் அவைகளை எல்லாம் நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் பொதுவாக பணம் சம்பாதிக்க கூடிய விஷயங்களாக மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் பணம் சம்பாதிக்க கூடிய அன்றே விஷயங்களை செய்தாலும் ஒரு கட்டத்தில் உங்களுக்கு அந்த விஷயங்கள் சலிப்பை உருவாக்கி விடும். இதனை நான் கண்டிப்பாக ஒரு கருத்தாக பதிவிட வேண்டும் என்று நினைத்தேன் இந்த நிறுவனத்தை உருவாக்க நான் என்னதான் அதிகபட்சமாக போராடினாலும் இந்த போராட்டம் எனக்கு சுகமான சுமையாக அமையவில்லை மாறாக கடினமான போராட்டம் அமைகிறது எனக்கு எதிராக இருக்கக்கூடிய விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துக் கொண்டே இருக்கிறேன் இவ்வாறு மொத்தமாக உடைத்து நொறுக்கி விட்டால் எனக்கு எதிராக எந்த விஷயம் இல்லை என்றால் வெற்றியை நானே நேருக்கு நேராக சென்று என்னுடைய வலது கையில் தூக்கி எடுத்துக் கொண்டு சென்று விடுவேன் என்ற அதீதமான ஒரு நம்பிக்கை பொருத்துதான் மிகவும் தீவிரமாக இந்த விஷயத்தில் இறங்கியுள்ளேன். இந்த சொந்த நிறுவனத்தை உருவாக்க கூடியது என்ற லட்சியம் பல வருடங்களை சார்ந்தது என்றதால் இந்த வாழைப்பூவின் நிறைய கருத்துக்கள் இருக்கலாம். இந்த வலைப்பூவின் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் எதிர்காலத்தில் எவ்வளவு வேண்டுமென்றாலும் வரலாம் இருந்தாலும் நான் சொல்ல வர கூடிய விஷயம் என்னவென்றால் இந்த வளர்ப்பு என்பது ஒரு நாள் குறிப்பு புத்தகமானது ஒரு கட்டத்தில் திறக்கப்பட்டு பப்ளிக்காக படிக்கப்பட்டால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை தான் மக்களுக்கு கொடுக்கிறது இந்த வலைப்பூவில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கான கம்பேட்டன்ஸ் என்னிடம் இருக்குமா என்று கேட்டால் மிகவும் சத்தியமாக இருக்காது. இருந்தாலும் எது கம்ப்யூட்டன்ஸ் பற்றிய விஷயம் அல்ல இந்த விஷயம் மெமரிகளை பற்றியது என்னுடைய நினைவுகளுக்கு தெரிந்து நான் எந்தெந்த முடிவை சரியானதாக எடுக்கிறேனோ அந்தந்த முடிவை தான் இந்த வலைப் பூவில் எழுதுகிறேன். இது ஒரு தனிப்பட்ட சுதந்திரமான எழுத்தாகும் மேலும் இந்த வகையில் நான் எழுதக்கூடிய கருத்துக்களுக்கு எப்படிப்பட்ட மாற்று கருத்துக்கள் இருந்தாலும் தயவுசெய்து கமெண்டில் பதிவு பண்ணுங்கள் அந்த கருத்துக்களை மாற்றிக் கொள்கிறேன் என்பதுதான் என்னுடைய ஆதரவான கருத்து.
No comments:
Post a Comment