புதன், 5 பிப்ரவரி, 2025

GENERAL TALKS - நாம் தேர்ந்தெடுக்கும் பாதை மிகவும் முக்கியமானது !


இந்த உலகத்தில் கொடிய விஷயங்கள் இருப்பதை தடுக்க முடியாது என்றுதான் இந்த உலகம் நமக்கு சொல்லிக் கொடுக்கிறது. இதனை மிகவும் நுட்பமாக கவனித்தால் கொடியவர்கள் எப்போதுமே தங்களுக்குரிய தேவைப்படக்கூடிய விஷயங்களைமுழுமையாக செய்து கொண்டே தான் இருப்பார்கள்.  இந்தக் கொடியவர்களுக்கு இருக்கக்கூடிய சக்திகளை வைத்து உங்களை ஏமாற்றலாம் உங்களுக்கு துரோகம் செய்யலாம் உங்களை நம்பவைத்து முதுகில் குத்தலாம் உங்களை அச்சுறுத்தலாம் உங்களை பயமுறுத்தலாம் உங்களை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். இவர்களுக்கு இப்படி எல்லாம் சக்திகள் எப்படி கிடைக்கிறது ஒரே ஒரு காரணம் என்னவென்றால் சட்டம் ஒழுங்கு சரியில்லை. இப்படி சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் இருப்பதால்தான் எந்த வகையிலும் கெட்டவர்களை தடுக்கவே முடியாது என்று ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலை நம்முடைய சமுதாயத்தில் உருவாகிறது. கெட்டவர்களுடைய வாழ்க்கை எப்போதுமே நல்லவர்களுக்கு அதிகமான பாதிப்பை தான் உருவாக்குகிறது. இங்கே நல்லவர்கள் என்றால் நல்ல விஷயங்களை செய்தால் மட்டும்தான் நல்லவர்கள் என்று அர்த்தம் அல்ல கெட்ட விஷயங்களை முடிந்த வரையில் தவிர்ப்பவர்கள் கூட நல்லவர்கள் தான். இன்றைக்கு தேதி உங்களுக்கு இருக்கும் கஷ்டத்துக்கு கெட்டவர்களோடு சேர்ந்து அவர்களை ஆதரவு கொடுத்து அவர்களோடு சேர்ந்து வெற்றியை அடைந்து விடலாம் என்று உங்களுக்கு தோன்றலாம். எப்போதுமே கெட்டவர்களோடு தற்காலிகமாக பழகுவது தான் சரியான முறையாக இருக்கும். உங்களால் தவிர்க்கவே முடியாமல் கெட்டவர்களோடு இணைந்து வேலை பார்க்க வேண்டும் என்ற ஒரு நிலை வந்தால் தான் இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளும் முறையை நீங்கள் பயன்படுத்த வேண்டும். மற்றபடி இந்த கொடியவர்களுக்கு நிரந்தரமான ஆதரவு கொடுப்பது உங்களுக்கு எப்படி ஆனாலும் சரி ஒரு பெரிய பிரச்சினையை தான் கொண்டு வந்து சேர்க்கும். இது ஒரு வகையான ஒரு வழி பாதை ஆகும் இந்த பாதையில் நீங்கள் ஒரு கட்டத்துக்கு சென்று விட்டால் உங்களுடைய பழைய இடத்தை நீங்கள் கண்டிப்பாக மறந்தே ஆக வேண்டும். காரணம் என்னவென்றால் உங்களால் மறுபடியும் பின் வாங்க முடியாது. கொடிய விஷயங்கள் நிறைய இருக்கும் இந்த உலகத்தில் கெட்டவர்களோடு பழகி வெற்றியடைய செய்வது என்ற கான்செப்ட் ரொம்ப குழப்பமாக இருந்தாலும் சரியான முறையில் இந்த விஷயங்களுடைய நுட்பத்தை நீங்கள் கற்றுக் கொண்டால் உங்களுக்கு இந்த விஷயங்கள் கண்டிப்பாக உங்களுடைய போராட்டத்தில் உங்களுடைய வெற்றியை உறுதிப்படுத்த உதவியானதாக இருக்கும். 


கருத்துகள் இல்லை:

CINEMA TALKS - 2005 - ல் வெளிவந்த தமிழ் படங்கள் !

  Dancer Aayudham Ayya Devathaiyai Kanden Thirupaachi Iyer IPS Ayodhya Kannamma Ji Kannadi Pookal Sukran ...