புதன், 5 பிப்ரவரி, 2025

GENERAL TALKS - என்னுடைய எண்ணங்களின் பகிர்வு - 1


இந்த உலகத்தில் இன்றைய காலத்து நிலவும் போட்டி தங்களுடைய வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் மேலும் அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி போராடுவதில் தான் மக்களுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறது. இந்த கலாச்சாரம் மேலோட்டமாக பார்ப்பதற்கு சரியான ஒரு கலாச்சாரம் போல இருந்தாலும் அடிப்படையில் தவறான கலாச்சாரம். பொதுவாக ஒரு கௌரவமான மிகவும் சிறந்த அனைத்து விஷயயங்களை விடவும் மேலான ஒரு நிர்வாகம் அனைத்து மக்களுக்கும் தேவைப்படுகிறது. இந்த நிர்வாகத்தின் அடிப்படையில் ரேஷன் கொடுக்கப்பட்டது தான் இந்த உலகத்தின் உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும். எல்லோருக்கும் என்ன வேண்டுமோ அது அவர்களுக்கு கிடைக்க வேண்டும். குறிப்பாக சட்டம் ஒழுங்கு மிகவும் சரியாக இருக்க வேண்டும். ஒரு பணக்காரன் என்பதால் அவனுடைய செய்யும் தவறுகள் துச்சமாக கருதி மன்னிக்கப்படக்கூடாது. ஒரு ஏழை என்பதால் அவர்கள் செய்யக்கூடிய தவறுகளுக்கு பரிதாபம் காட்டப்படக்கூடாது. அதே சமயம் தவறே செய்யாத ஒரு மனிதரை தவறு செய்தார் என்று போலியான குற்றங்களை சுமத்த அனுமதிக்க கூடாது. 

இந்த உலகம் நிறைய உயிர்களை உருவாக்கி அந்த உயிர்களுக்கு தேவையான சுதந்திரத்தை அவர்களுக்கு கொடுத்துள்ளது. இந்த மொத்த உயிர்களில் எந்தெந்த உயிர் தனக்கான பலத்தை அதிகரித்துக் கொண்டு இருக்கிறதோ அந்தந்த உயிர் மட்டும்தான் தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள இருக்கும் போராட்டத்தில் கடைசி வரையில் நின்று ஜெயித்துக் காட்டுகிறது. இதுதானே இந்த உலகத்தின் அடிப்படையான விதியாகும். உயிரோடு இருக்கும் எல்லா உயிர்களுக்கும் நடந்து கொண்டிருக்கும் இந்த மிகப்பெரிய யுத்தத்தில் எந்த விதமான நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் கிடையாது எந்தவிதமான நெறிகளையும் இந்த யுத்தம் கடைபிடிக்க வேண்டும் என்று அவசியப்படுத்துவது கிடையாது. நான் எப்போதுமே வாழ்க்கை எதனால் இப்படி இருக்கிறது என்று ஒரு கேள்வியை எனக்குள்ளே கேட்டுக் கொண்டே இருப்பேன் ஆனால் இந்த கேள்வி அர்த்தமற்றது. 

இந்த உலகத்தில் நாளும் ஒரு மாற்றம் வந்து கொண்டே தான் இருக்கிறது நீங்கள் ஒருவேளை இந்த கேள்விக்கு பதிலை கண்டுபிடித்தாலும் இந்த கேள்விக்கான பதில் இன்னும் ஒரு வருடத்தில் மாறிவிடும். அப்படி என்றால் கடந்த வருடத்தில் இந்த கேள்விக்கான பதிலை நீங்கள் கண்டுபிடித்து இருந்தால் அந்த பதில் எந்த வருடத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு சுத்தமாக பொருந்தாததாக தான் இருக்கும். இப்படி எல்லாம் முட்டாள்தமான கேள்விகளை கேட்டுக்கொண்டு வாழ்க்கையை வீணாக்க வேண்டாம். இந்த உலகத்துடைய போராட்டத்தில் உங்களுக்கு எதிர்ப்பவர்களை அடித்து சாத்துங்கள். உங்களுக்கான இடத்தை உங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டே கடைசி வரையில் உங்களுக்கு இடத்துக்காக உங்களுடைய சந்தோஷத்துக்காக நீங்கள் போராடிக் கொண்டே இருங்கள். 


கருத்துகள் இல்லை:

CINEMA TALKS - 2005 - ல் வெளிவந்த தமிழ் படங்கள் !

  Dancer Aayudham Ayya Devathaiyai Kanden Thirupaachi Iyer IPS Ayodhya Kannamma Ji Kannadi Pookal Sukran ...