செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

GENERAL TALKS - செலவுகள் , சம்பளம் , வணிகம் !


ஒரு சிறிய குறிப்பேட்டை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளை மட்டும் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள் அந்த ஒரு நாளில் நீங்கள் செலவு செய்த பணம் என்ன ? அந்த ஒரு நாள் நீங்கள் சம்பாதித்த பணம் என்ன ? அந்த ஒரு நாளில் நீங்கள் செய்த செயல்கள் என்னென்ன ? இந்த மூன்று விஷயங்களை நீங்கள் எழுதினாலே வியாபாரத்தின் கவனிக்க வேண்டிய விஷயங்களை நீங்கள் கற்றுக் கொண்டது போன்றதாகும். பொதுவாக வியாபாரத்தில் நிரந்தரமான வெற்றி அல்லது நிரந்தரமான தோல்வி என்று எதுவுமே கிடையாது ஆனால் ஒரு வியாபாரத்தை தொடங்கும் போது அந்த வியாபாரத்தில் முதல் மூன்று வருடங்கள் என்பது மிகவும் முக்கியமானது ! இந்த விஷயத்தை நான் ஏற்கனவே வேறொரு வலைப்பூவில் பதிவிட்டு இருக்கிறேன். ஒரு வியாபாரம் என்பது முதல் மூன்று வருடத்தில் தான் அந்த முதல் மூன்று வருடத்தில் கிடைக்கும் அனுபவத்தில் தான் மிகவும் அதிகமான விஷயங்களை அந்த வியாபாரத்தை செய்பவர்களுக்கு கற்றுக் கொடுக்கும். தொடர்ந்து மூன்று வருடமாக ஒரு வியாபாரத்தின் அனுபவத்தை நீங்கள் பெற்றுக் கொண்டால் இத்தகைய அனுபவம் பின்னாட்களில் நீங்கள் தொடங்கும் எந்த வகையான வியாபரங்களுக்கும் தங்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. இவைகள் அனைத்துமே சொல்லப்போனால் ஒரு அனுமானம் சார்ந்த கணக்கு தான். இந்த காலத்தில் எல்லாம் படிப்பு விஷயங்களை சுட்டித்தனமாக இருந்து தெளிவாக கற்றுக்கொண்டே முன்னேற வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்கள் அவர்களுடைய சக்திகளை நிச்சயமாக ஒரு வருடத்திற்குள்ளேயே மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய இந்த வேகம் வியாபாரத்தில் அனுபவத்தால் கற்றுக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரத்தை விரிவுபடுத்தும் தொழில் முறை வியாபாரிகளுக்கு கண்டிப்பாக சோகமான விஷயமாகத்தான் இருக்கிறது. தொழில்முறை வியாபாரிகளை விட புதிதாக முளைக்கும் இவர்கள் மிகவும் அதிகமாக சம்பாதித்து உள்ளே இறங்கியவுடன் உடனடியான வெற்றி என்று அடைந்து விடுகிறார்கள். இவர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் இவர்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. எப்போதுமே வியாபாரத்தில் அனுபவம் மிக்க நபர்கள் ஒரு விஷயத்தில் பெரிய அளவிலான தோல்வி வரப்போகிறது என்றால் மிகவும் சாமர்த்தியமாக அந்த விஷயத்தை விட்டு வெளியே வந்து விடுவார்கள். நேற்று பொழிந்த மழையில் இன்றைக்கு முளைத்த காளான்களாக இருக்கும் இந்த இளமை திறன்மிக்க புதிய வியாபாரிகள் இத்தகைய மாபெரும் தோல்விகளை நிறைய நேரங்களில் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் வரும். வியாபார உலகத்தின் இந்த புதிய தலைமுறைக்கும் அனுபவஸ்தர்களுக்கும் நடந்து கொண்டிருக்கும் இந்த போட்டியானது மிகவும் சுவாரசியமானது உங்களுக்கு நேரம் இருந்தால் இந்த போட்டியை இணையதளத்தின் மூலமாக கொஞ்சம் கவனித்து பாருங்களேன். நான் எதனால் இந்த போட்டி சுவாரசியமானது என்று சொல்கிறேனென்று உங்களுக்கு கவனிக்கும்போது தான் புரியும். 


கருத்துகள் இல்லை:

CINEMA TALKS - 2005 - ல் வெளிவந்த தமிழ் படங்கள் !

  Dancer Aayudham Ayya Devathaiyai Kanden Thirupaachi Iyer IPS Ayodhya Kannamma Ji Kannadi Pookal Sukran ...