Wednesday, February 5, 2025

GENERAL TALKS - வாழ்க்கை இப்போது கருணை காட்டுவதில்லை !


இந்தக் கருத்தையும் இந்த வலைபோவில் நிறைய முறை நான் பதிவு செய்து விட்டேன். ஒரு விவசாய நிலத்தின் விளைச்சல் நன்மைக்காக பூச்சிக்கொல்லி மருந்துகள் அந்த விவசாய நிலத்தின் மீது தெளிக்கப்படுகின்றன. அடிப்படையில் இத்தகைய விஷயங்கள் பாவங்களை பார்க்காமல் பண்ணக்கூடிய செயல்கள் என்று சொல்லலாம். இது போன்ற ஒரு கட்டாயம் உங்களுடைய வாழ்க்கையிலும் நடப்பதற்கு அதிக நாட்கள் தேவைப்படாது. நம்முடைய வாழ்க்கையில் மனதை கஷ்டப்படுத்தக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் செய்யாமல் நம்முடைய வாழ்க்கை சந்தோஷமாக வாழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கை இருந்தால் அந்த நம்பிக்கையை இப்போதே விட்டுவிடுங்கள். அடிப்படையில் சரியான உதவி சரியான நேரத்தில் உங்களுக்கு கிடைத்தல் மட்டும்தான் வெற்றியை அடைய முடியும் இத்தகைய சரியான உதவியை நீங்கள் கிடைக்க எப்போதுமே நேர்மையான வழியைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் வாழ்க்கையில் இல்லை. சரியான உதவியை நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் ஒரு சில நேரங்களில் பெரிய பாவங்களை நீங்கள் செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும். கொஞ்சம் யோசித்து பார்த்துவிட்டு இதுக்கே பாவங்களை நீங்கள் செய்து விடுங்கள் ஏனென்றால் இந்த உலகத்துடைய போட்டி எந்த வகையிலும் உங்களுக்கு கடைசி வரையில் கருணை காட்டப் போவது கிடையாது. மற்றவர்கள் செய்யும் பாவங்கள் அதிகமாக கரையும்போது உங்களுடைய பாவங்களும் கொஞ்சமாக கரைந்து விடத் தான் போகிறது இப்படித்தான் வாழ்க்கை வேலை செய்கிறது. மனிதர்களுடைய மனதில் எப்போது வேண்டுமென்றாலும் மாற்றங்கள் உருவாகலாம். இன்றைக்கு தேதிக்க உங்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களை நீங்கள் நம்பலாம் ஆனால் இவர்களுடைய மனது மட்டும் மாறிவிட்டால் உங்களை கண்டிப்பாக குத்தி போட்டு விடுவார்கள். நிறைய இடங்களில் பணம் போன்ற உயிரற்ற விஷயங்கள் தான் நமக்கு தேவையான ஆதரவை கொடுக்கிறது உயிருள்ள விஷயங்கள் நமக்கு ஆதரவை கொடுக்க மறுக்கிறது. இந்த உலகத்தில் பணம் இல்லாமல் வாழக்கூடிய மக்களுடைய கடினமான வாழ்க்கையை நீங்கள் கவனமாக உற்று நோக்கிப் பாருங்கள் இந்த வாழ்க்கையில் இருந்து நீங்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள் எத்தகைய விஷயங்கள் தான் உங்களுடைய வெற்றியில் உங்களுக்கு தேவைப்பட வேண்டிய அறிவாக இருக்க கூடியது. இத்தகைய விஷயங்கள்தான் உண்மையான உலகத்தில் ஆதரவு என்றால் என்ன என்று உங்களுக்கு புரிந்து கொள்ள உதவியாக இருக்கக்கூடிய விஷயங்கள். இதனை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இன்னொருவருடைய கஷ்டத்தை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் இன்னொருவருடைய சந்தோஷத்தை நீங்கள் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...