Wednesday, February 5, 2025

GENERAL TALKS - என்னுடைய எண்ணங்களின் பகிர்வு - 2


இந்த உலகத்திற்கு எப்போதுமே போதுமான மனிதர்கள் கொடுக்கும் ஆதரவு கிடைத்து விடாதா ? இப்படிப்பட்ட மனிதர்களுடைய ஆதரவு நமக்கு கிடைத்து இருந்தால் நாமும் வெற்றி அடைந்து விடுவோமே வித்தியாசமான ஒரு எண்ணம் நம்முடைய மனதுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. உண்மை என்னவென்றால் நாம் செய்யக்கூடிய அனைத்து விஷயங்களுக்கும் நிறைய மனிதர்களுடைய ஆதரவு இருக்க வேண்டும் என்று நம்பிக் கொண்டே இருக்கிறோம். குறிப்பாக ஒரு சில விஷயங்களில் மற்றவர்களுடைய ஆதரவு நமக்குத் தேவைதான் நான் இல்லை என்று சொல்லவில்லை. இருந்தாலுமே பெரும்பாலான விஷயங்களில் மற்ற தன்னுடைய ஆதரவு நமக்குத் தேவையில்லை நாம்தான் மற்றவருடைய ஆதரவு கிடைக்க வேண்டும் என்று காத்திருந்து காத்திருந்து காணாமல் நொந்து போகிறோம். ஒரு சில மனிதர்கள் கடைசிவரையில் தனக்கான விஷயங்களை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருப்பார்களே தவிர உங்களுக்கான ஆதரவை உங்களுக்கு கொடுக்கவே மாட்டார்கள். ஒரு சில மனிதர்களுக்கு ஆதரவு கொடுப்பது என்றால் என்னவென்றே தெரியாது. இந்த விஷயத்தாலே அவர்கள் ஆதரவு கொடுக்க வேண்டிய சூழ்நிலைகள் வந்து விட்டால் பதறியடித்துக்கொண்டு ஓடி விடுவார்கள். இந்த வகையில் தான் ஒரு முக்கியமான மனித கூட்டத்தை நாம் கவனிக்கிறோம் இவர்கள் மட்டும் கொஞ்சம் ஸ்பெஷலானவர்கள் இவர்களை நாம் கண்டிஷனல் மனிதர்கள் என்கிறோம். பெரிய மனிதர்கள் தங்களுக்கு என்று கொஞ்சம் நிபந்தனைகளை வைத்திருப்பார்கள் அவர்களுடைய நிபந்தனைகளை பூர்த்தி செய்து அவர்களுக்காக கொஞ்சம் செல்களை செய்து கொடுத்தால் நம்முடைய நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து நமக்கான அந்த அளவுக்கான செயல்களை அவர்கள் செய்து கொடுப்பார்கள். பணத்தால் பரிவர்த்தனை பண்ணுவது போல இவர்கள் செயலால் பரிவர்த்தனையை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். எந்த வகையான கொடுக்காமல் இருப்போம் மக்களுக்கு இவர்கள் எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் உங்களுக்கு தோன்றும். இதனால்தான் இவர்களோடு பழகும் போது நாங்கள் உங்களுக்கு கொடுக்கும் அட்வைஸ் என்னவென்றால் இவர்களோடு பழகும் பழக்கங்களை தற்காலிகமாக வைத்துக் கொள்ளுங்கள் நிரந்தரமாக வைத்துக் கொள்ள வேண்டாம். இவர்களை எப்போதுமே சார்ந்து இருக்க வேண்டாம் உங்களுடைய தேவைகளுக்கு எப்போதும் நீங்கள் உங்களையே சார்ந்து இருங்கள் அடுத்தவர்களை சார்ந்து இருக்க வேண்டாம் குறிப்பாக இவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். இவர்கள் மேலே அதிகமான நம்பிக்கையும் வைத்து விடாதீர்கள்.  நம்பிக்கை என்பது ஒரு அளவுக்கு தான் இவர்களுடன் இருக்க வேண்டும். உங்களுக்கு நிறைய வருடங்களாக இவர்களை தெரியும் என்பதால் இவர்களை நிரந்தரமாக நம்ப வேண்டாம். இவர்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் சரி கண்டிப்பாக மாற மாட்டார்கள்.  உங்களுக்கு காரணம் இல்லாமல் எந்த விதமான கட்டாயமும் இல்லாமல் உங்களுக்கான ஆதரவை கொடுக்கக்கூடிய மனிதர்கள் மிகவும் அதிசயமாக தான் கிடைப்பார்கள் அப்படிப்பட்ட மனிதர்கள் உங்களுக்கு கிடைத்தால் அவர்களை கெட்டியாக உங்களோடு பிடித்துக் கொள்ளுங்கள். இவ்வாறான மனிதர்கள் உங்களுக்கு கிடைப்பது புதையல் கிடைப்பதற்கு சமமாகும். உங்களுடைய வாழ்க்கைக்கு இத்தகைய மனிதர்கள் நன்றாகவே பிரயோஜனமாக இருப்பார்கள். இந்த விஷயங்கள் கவனமாகவே நீங்கள் முடிவெடுங்கள். இந்த வலைப்பூவுக்கு நிறைய ஆதரவை கொடுத்து இந்த வலைப்பூவின் சந்தாதாரராக மாறி இந்த வலைப்பூவை பொருளாதார அளவில் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைத்த வலைப்பூவாக மாற்ற வேண்டும் என்று கம்பெனி சார்பாக பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...