Wednesday, February 5, 2025

GENERAL TALKS - பேராசைகளும் பணம் சம்பாதிக்கும் திறனும் !


பேராசைக்கு எப்போதுமே குறைவான நேரத்தில் மனதை மொத்தமாக கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் ஒரு அமானுஷ்யமான சக்தி இருக்கிறது. பேராசை மட்டும் நம்முடைய மனதுக்குள் வந்து விட்டால் 

நம்முடைய புத்தியை மொத்தமாக இருளுக்குள் தள்ளிவிட்டு நம்முடைய அறிவின் கூர்மையை கடைசிவரையில் பயன்படுத்த முடியாத அளவுக்கு செய்து விடும். இந்த பேராசை நிறைந்த நாட்களில் நீங்கள் எடுக்கக்கூடிய அனைத்து முடிவுகளும் 100% சரியானது என்று உங்களுடைய மனதுக்கு தோன்றுகிறது. இந்த அதிசயத்தக்க நிகழ்வு உங்களுடைய மனதை கட்டுப்பாடுகள் எடுத்துக் கொள்ள விடாதீர்கள். 

நூறு சதவீதம் தவறான ஒரு முடிவை கூட பேராசை நூறு சதவீதம் சரியான ஒரு முடிவு என்றுதான் உங்களுடைய மனதை வற்புறுத்த பார்க்கும். இப்படியெல்லாம் பேராசையில் மாட்டிக் கொண்டு மனிதனுடைய ஆணவத்தின் உச்சகட்டத்திற்கு சென்று ஆடிக் கொண்டு இருந்தால் உங்களுக்கு கஷ்டம் என்று வரும்போது யாருமே உங்களை உதவ மாட்டார்கள். உங்களை பேராசை எனும் மொத்தமான ஒரு உருவமாகவே பார்க்க முடியுமே தவிர உங்களுக்குள் இருக்கும் அனைத்து நல்ல விஷயங்களும் கடலுக்குள் கரைந்து போன நாட்டு சர்க்கரை போல கரைந்து விடும்‌. அஸ்காவை குறிப்பிட விரும்பவில்லை அது உடல் நலத்துக்கு கெடுதல் நிறைந்தது. அதனால்தான் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் உங்களுடைய பேராசை மிகவும் அதிகமாகி உங்களுடைய மனதை அது ஆட்கொண்டால் உங்களால் அந்த பேராசை இருக்கக்கூடிய விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற ஒரு சோகமும் உங்களுடைய மனதுக்குள் இருக்கும். என்னிடம் கோடி கணக்கில் பணம் இல்லையே என்று நிறைய பேர் வருத்தப்படுவார்கள். 

உண்மை என்னவென்றால் அவர்கள் கண்டிப்பாக மனதையும் உடலையும் பயன்படுத்தி தொடர்ந்து ஐந்து வருடம் கஷ்டப்பட்டால் ஒரு கோடி ரூபாய் மொத்தமாக சம்பாதிக்க முடியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் அவர்களால் 10 முதல் 15 லட்சம் வரையிலான தொகையை அவர்கள் சம்பாதிக்க முடியும். நிறைய பேரால் இந்த அளவுக்கு பணத்தை கூட சம்பாதிக்க முடியாது. இருந்தாலும் தங்கள் பேராசை பட்ட விஷயம் தங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற சோகத்தை தங்களுடைய மனதுக்குள் வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு குறைந்தது சுமாராக ஒரு நூறு ரூபாயாவது சம்பாதிக்காமல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். இந்த பேராசை ஒரு விதமான பாவம் என்று சொல்லப்படுகிறது. நமக்கு நாமே செய்து கொள்ளக் கூடிய ஒரு வகையான பாவம் தான் இந்த பேராசை. இது கண்டிப்பாக சயின்ஸ் அடிப்படையில் ஆராய்ச்சி பண்ணவேண்டிய ஒரு டாபிக் என்றே சொல்லலாம். இந்த விஷயங்களைப் பற்றி இன்னும் நிறைய விஷயங்களை இந்த வலையில் பேசலாம். இந்த பதிவை இவ்வாறே நான் முடித்துக் கொள்கிறேன். பேராசை பெருநஷ்டம் என்பதை விட பேராசை லாபமற்ற வாழ்க்கை என்று சொல்வது தான் மிகவும் சரியான செயல். மற்றபடி இந்த வலைப்பூவுக்கு நீங்கள் பேராதரவு கொடுத்து இந்த வலைப்பூவை நீங்கள் இணையதள உலகில் வெற்றியடைய செய்யுமாறு பணிவுடன் கம்பெனி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது‌. 


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...