\ரொம்பவுமே தரமான ஒரு படம் இந்த வித் அவுட் ரிமார்ஸ் - ஜான் என்ற ஒரு பாதுகாப்பு அதிகாரியின் குழுவில் இருப்பவர்கள் எல்லோருமே கூலிப்படையால் காலி பண்ணப்படுகிறார்கள் , இவருடைய சொந்த குடும்பமும் நேரடியாக தாக்கப்பட்டு மனைவியும் குழந்தையும் இழந்துவிட்டதால் வருத்தத்தில் இருக்கும் இவருடைய வாழ்க்கையில் இதுவரை நடந்தது எல்லாமே ஒரு மிகப்பெரிய சதி என்பதால் இந்த விஷயங்களை தனியாக இன்வெஸ்டிகேஷன் செய்து இந்த அசம்பாவிதம் செய்தவர்களை பழிவாங்க துடிக்கிறார். இப்போதுதான் சொந்த நாட்டு அரசியல் புள்ளிகளுக்காக ஒரு குளோபல் லெவல் சதி நடப்பதை தெரிந்துகொண்டு இந்த கான்ஸ்பைரேஸியை உயிரை கொடுத்து வெளியே கொண்டுவர போராடும் இவரது முயற்சிகள் என்ன ஆகிறது என்பதை இந்த படத்தின் கதை. இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் என்பது கவனமான ஆக்ஷன் நிறைந்த ஸ்கிரீன்பிளே மற்றும் மிகப்பெரிய ப்ரொடக்ஷன் டிசைன் என்று சொல்லவேண்டும். இந்த படத்துடய கிளைமாக்ஸ் ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்தது. குறிப்பாக ஜேக் ரயான் நெடுந்தொடர் பார்த்து டாம் க்ளான்ஸி அவர்களின் எழுத்து திறனை புரிந்துகொண்டவர்களாக இருந்தால் இந்த படம் உங்களுக்கு வேற லெவல் எக்ஸ்பீரியன்ஸை கொடுக்கும் , ஜெனரல் ஆடியன்ஸ்க்கும் இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும். மொத்தத்தில் நீங்கள் சினிமா ஃபேன் என்று இருந்து நிறைய ஆக்ஷன் படங்களை பார்ப்பவராக இருந்தால் உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ஒரு திரைக்கதை இந்த படத்தில் கண்டிப்பாக இருப்பதை நீங்கள் பார்க்கலாம். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் கொரியோக்ராபி வேற லெவல்லில் இருக்கிறது. நடிப்பு திறன் மற்றும் விஷுவல் எஃபக்ட் டெக்னிக்ஸ் எல்லாம் வெகு நேர்த்தியாக சினிமாட்டிக் ஸ்டைல்லில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
1 comment:
வேற லெவல் படம்யா இது !
Post a Comment