"பெரும்பாலான ஹாலிவுட் படங்கள் குறைந்தபட்ச அடிப்படையாக இருக்கவேண்டிய நிறைய விஷயங்களை கோட்டை விட்டுவிட்டு இது எல்லாம் ஒரு படமா ? என்று யோசிக்க வைக்கும் ஹாலிவுட் படங்களுக்கு மத்தியில் மறுபடியும் இந்த படம் இது எல்லாம் ஒரு படமா என்று யோசிக்க வைத்துவிட்டது. இரண்டு மணி நேரம் டோட்டல் வேஸ்ட் , மொக்கை ரேலேஷியன்ஷிப் ஜேஸ்டிஃப்பிக்கேஷன் , மொட்டை பாலைவனம் , சட்டு சட்டென்று கன் ஃபைட் , இது எல்லாமே இந்த படத்தில் இருக்கிறது. படத்துடைய கதைக்கு வருவோம் , இந்த உலகத்தில் பல வருடங்களாக உயிரோடு இருக்கும் குறிப்பிட்ட 5 பேருக்கு மட்டும் காயங்கள் குணமாகும் சக்தி இருக்கிறது. இவர்கள் இன்டர்நேஷனல் லெவல்லில் எப்போதாவது மிஷன்களை செய்து வாழும்போது ஒரு கார்ப்பரேட் இளம் தொழில் அதிபர் இவர்களை கடத்தி சோதனை பண்ணி மரணம் இல்லாத வாழ்க்கைக்கான மருந்தை உருவாக்க பார்க்கிறார். இந்த வகையில் இந்த ஐவர் குழுவில் புதிதாக ஒரு இளம் பெண் இணையவே , இந்த குழுவின் தலைவருக்கு சக்திகளும் சென்றுவிடவே எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் மீதிக்கதை , இந்த படத்தோடு கம்பெர் பண்ணினால் நிறைய உருப்படியான படங்கள் இருக்கிறது. இவர்களின் இஷ்டத்துக்கு க்ரே ஏரியாவில் எந்த ஆடியன்ஸ்க்கு படத்தை எடுத்தோம் என்று தெரியாமல் படத்தை எடுத்துவிட்டு உலக மக்களுக்கு பிடிக்க வேண்டும் என்று சொல்லி வலுக்கட்டாயம் பண்ணிவிடுகிறார்கள். கதையில் எந்த ட்விஸ்ட்டும் இல்லை. ப்ரொடக்ஷன் பட்ஜெட் முறையாக செலவு பண்ணப்படவில்லை. மொத்தமாக கமிஷன் அடித்து ஒரு பெரிய பட்ஜெட் படத்தை உப்புமா படமாக மாற்றியது போல இருக்கிறது. இது எல்லாம் ஒரு சூப்பர் ஹீரோ படம் என்று சொன்னால் பிளட் ஷாட் படம் ஒரு மாஸ்ட்டர்பீஸ் ! - குறைந்தபட்சம் அந்த படத்திலாவது கதை என்று ஒரு விஷயம் இருந்தது. இந்த படத்தில் எதுவுமே இல்லை. சூப்பர் ஹீரோ படம் பார்க்கிறேன் என்று நேரத்தை வேஸ்ட் செய்ய வேண்டாம்.
No comments:
Post a Comment