ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையனும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அந்த பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது. அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன் நீ வச்சு இருக்கிற இனிப்புகள் எல்லாத்தையும் எனக்கு தர்ரியா என்று கேட்டான். குட்டி பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள். அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான். குட்டி பெண் எல்லா இனிப்புகளையும் கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிகொண்டாள். அன்று இரவு அந்த குட்டி பெண் நிம்மதியாக உறங்கினாள். அந்த பையனுக்கு உறக்கமே வரவில்லை. அவள் எல்லா இனிப்புகளையும் நம்மிடம் தந்திருப்பாளா இல்லை நாம் ஒளித்து வைத்தது போல் அவளும் ஏமாற்றி இருப்பாளா என்று நினைத்துக் கொண்டே உறக்கம் இல்லாமல் அவஸ்த்தைப்பட்டான். நீங்கள் 100 சதவீதம் அடுத்தவர் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றால் அடுத்தவர் உங்களிடம் காட்டும் அன்பின் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். ஒரு ஒரு பெரிய பண்டிதர் ஆன்மீக குரு ஒருவரை தேடி வந்தார். “நீங்கள் நூல்களில் இல்லாத பெரிய விஷயங்களைக்கூடக் காட்டிக் கொடுக்கிறீர்களாமே?” குரு புன்னகைத்தார். பண்டிதர் விடவில்லை. “எனக்கு நீங்கள் கட்டாயமாக ஏதேனும் காட்டிக் கொடுக்க வேண்டும்.” “சரி, இப்போது மழைக் காலமில்லையா? இன்று மழை வரும் போல இருக்கிறது. மழை பெய்யும்போது மைதானத்தில் சென்று கைகளை உயர தூக்கிக் கொண்டு நில். ஏதேனும் புரியலாம்.” அடுத்த நாள் பண்டிதர் வெகு கோபமாக வந்தார். “என்ன ஆயிற்று?” “நீங்கள் சொன்னதுபோல மழையில் நேற்று மாலை நின்றேன். “ம்?” “முழுக்க நனைந்து போனேன். எல்லாரும் சிரித்தார்கள். நான் என்னை ஒரு பெரிய முட்டாளாக உணர்ந்தேன்!” “பரவாயில்லையே? முதல் நாளே பெரிய விஷயம் புரிந்துவிட்டதே!” நம்முடைய வாழ்க்கையும் இப்படித்தான் ஒரு கட்டத்தில் நாம்தான் எல்லாமே என்று நினைக்கும்போது சின்ன சின்ன புரிதல் உருவாகக்கூட கஷ்டப்பட வேண்டியது உள்ளது.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 13
நிறைய நேரங்களில் நம்பிக்கை வைப்பார்கள். தான் வாழ்க்கையை மொத்தமாக உடைத்து வைத்திருக்கிறார்கள். நம்மால் எதுவுமே செய்ய முடிவதில்லை. வாழ்க்கைய...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக