Sunday, February 2, 2025

ARC - 091 - கடைசியாக நமது உயர்வுதான் முக்கியமானது !






ஒருமுறை நாடாளுமன்றத்தில் பேசும் போது உறுப்பினர் ஒருவர் ஒரு கதை சொன்னாராம். “ஒரு மனிதன் இருந்தான். அவன் தன் மூன்று மகன்களிடம் ஒவ்வொருவருக்கும் ரூ. 100 கொடுத்து ஒரு அறை முழுதும் நிறைக்குமாறு பொருள் வாங்கச் சொன்னானாம். ஒரு மகன் வைக்கோல் வாங்கி அறையில் வைத்தான், அறை நிறையவில்லை. அடுத்தவன் பஞ்சு வாங்கி வைத்தான், அறை நிறையவில்லை. மூன்றாமவன் ஒரு ரூபாய்க்கு மெழுகுவர்த்தி வாங்கி அறையில் ஏற்றி வைத்தான். அறை முழுவதும் ஒளி நிறைந்தது” அந்த உறுப்பினர் பின் சொன்னாராம். ”அந்த மூன்றாமவன் போலத்தான் நம் தலைவர். அவர் பொறுப்பேற்றதும் நாட்டில் இருந்த இருள் நீங்கி ஒளி பரவி விட்டது” பின் வரிசையிலிருந்து ஒரு குரல் எழுந்தது. "மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு? - இங்கே விளக்கு புடித்தால் நோய் போய்விடும் என்ற ஐடியா வன்மையாக தாக்கப்பட்டது. ஒரு கோட்டை அழிக்காமலே அதை சிறிதாக்க முடியுமா என்று கேட்டார் ஆசிரியர். அறிவு மிக்க மாணவன் ஒருவன் அச்சிறு கோட்டின் அருகே ஒரு பெரிய கோட்டை வரைந்தான். ஆசிரியர் மாணவர்களிடம் சொன்னார், ”இதோ பாருங்கள், இந்தப் பெரிய கோடு நமக்கு என்ன அறிவிக்கிறது? வாழ்க்கையில் ஒருவன் பெரியவனாக விரும்பினால் அவன் மற்றவரை வதைக்கவோ அழிக்கவோ தேவையில்லை என்பதைத்தான். பெரியவன் ஆக விரும்புகிறவன் பெரிய காரியங்களைச்செய்தே மேல் நிலையை அடைய வேண்டும்”. - கம்பெரிஸன் எல்லா இடங்களிலும் உள்ளது. இரண்டு பேர் ஒரு குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் தூண்டிலில் சிக்கும் சின்னச் சின்ன மீன்களை மட்டும் பிடித்து தனது கூடைக்குள் வைத்துக்கொண்டான். நல்ல பெரிய மீன்கள் சிக்கும்போது அதை எடுத்து, மீண்டும் குளத்துக்குள்ளேயே விட்டுவிடுவான். பக்கத்திலிருந்தவனுக்கு ஆச்சரியம்! எல்லோரும் பெரிய மீன்களைத்தான் விரும்பிப் பிடிப்பார்கள், இவன் இப்படி இருக்கிறானே என்று. பொறுக்க முடியாமல் அவனிடமே கேட்டுவிட்டான். “ஏம்பா! நல்ல பெரிய பெரிய மீன்கள் மாட்டுது. அதெல்லாம் விட்டுட்டு சின்னச் சின்ன மீனா பிடிச்சிக்கிட்டு இருக்கியே. பெரிய மீனைப் பிடிச்சு வியாபாரம் செஞ்சா நிறைய லாபம் வருமே…” என்றான் அதற்கு அடுத்தவன் சொன்ன பதில் என்ன தெரியுமா? “என்கிட்ட சின்னக் கூடைதானே இருக்கு. அதுக்குள் வைக்கிற மாதிரி சின்ன மீன்களைப் பிடிச்சுக்கிட்டு இருக்கேன். ” - நமக்கு இலாபமாக கிடைக்கும் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத நபராக இருந்தால் எப்போதுமே முன்னேற முடியாது உயரமுடியாது.

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...