தனிமையில் வாழும் ஒரு துறவி ஒருவரிடம் கேட்டாள் ஒரு பெண். " என் கணவர் நிறைய குறைகளோடு இருக்கிறார். அவரோடு என்னால் இனி என்னால் வாழமுடியாது. எனவே நான் அவரைவிட்டு விலகி விடட்டுமா?". அவளுக்கு நேரடியாக பதில் சொல்லாத துறவி. "அம்மணி! இங்குள்ள செடிகளில் ஏதாவது ஒன்றை உனக்கு தர விரும்புகிறேன். எது வேண்டும். கேள்?" என்றார். அப்பெண் ரோஜா செடியைக் கேட்டாள். "அதைப் பராமரிப்பது மிகவும் கடினம். அதோடு அதில் நெறைய முட்கள் வேறு இருக்கிறதே? இதுவா வேண்டும்?" இது துறவி. "எனக்கு ரோஜாவை மிகவும் பிடிக்கும். அதனால் அதனிடம் உள்ள குறைகள் பெரிதாகத் தெரியாது. " என்றாள். புன்னகைத்த துறவி சொன்னார்:" வாழ்கையும் அப்படிதான்! பிறரை நேசிக்கக் கற்றுக் கொண்டால், அவர்களது குறை பெரிதாகத் தெரியாது".- இங்கே குறைகள் இல்லாத மனிதன் என்று யாருமே இல்லை. ஒரு சில பேருடைய குறைகளை பணம் வந்தால் மறைத்துவிடுகிறார்கள் ஆனால் வாழ்க்கையின் எந்த ஒரு புள்ளியிலும் இவர்களுடைய குறைகள் வெளிப்பட்டே ஆகிறது. ஒருவரை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் குறைகளையும் சேர்த்தே ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போது எங்கிருந்தோ அதிவேகமாக வந்த பென்ஸ் கார் ஒன்று கிரீச்சிட்டு நின்றது. ஆட்டுக்காரன் ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தான். அமெரிக்க பாணியில் கோட்டும் சூட்டுமாக இறங்கிய மிடுக்கான வாலிபன் ஆட்டுக்காரனிடம் வந்து "உன் மந்தையிலிருக்கும் ஆடுகளின் எண்ணிக்கையை நான் சரிவரக் கூறினால் நீ எனக்கு நான் கேட்கும் ஆட்டைப் பரிசாகத் தருவாயா? " எனக் கேட்டான். ஆட்டுக்காரன் செய்வதறியாமல் “சரி” எனத் தலை அசைத்து வைத்தான். உடனே, அவ்வாலிபன் தன் வாகனத்துக்குத் திரும்பி அதிலிருந்த லாப் டாப்பை எடுத்தான். தன் செல்பேசியையும் வேறு சில கருவிகளையும் அத்துடன் பொருத்தினான். அதிலிருந்த கருவி ஒன்றை எடுத்து திறந்த வெளியைப் படமெடுத்து ஏதேதோ கணித்தான். பிறகு தன்னிடமிருந்த சிறிய அச்சுப் பொறியை எடுத்து அதிலிருந்து நூற்றிருபது பக்க அறிக்கையை அச்செடுத்தான். பின்னர் நேரே ஆட்டுக்காரனிடம் வந்து " உன் மந்தையில் 1346 ஆடுகள் உள்ளன. சரியா? “ என்றான். ஆட்டுக்காரன் ஆச்சரியமும் புன்னகையும் கலந்த முகத்துடன் " நீ சரியாகக் கூறினாய். ஆகவே, உனக்குப் பிடித்த ஆட்டை நீ எடுத்துக் கொள் " என்றான். அவ்வாலிபனும் மந்தைக்குள் தேடி தனக்குப் பிடித்த பிராணியைப் பிடித்து தன் வாகனத்தின் பின்னால் திணித்துக் கொண்டான். அந்த நேரத்தில் அவனருகில் வந்த ஆட்டுக்காரன், " சரி, இப்போது நான், நீ செய்யும் தொழில் எது என்பதைச் சரியாகக் கூறினால் நீ என்னிடம் பெற்ற பிராணியை எனக்குத் திருப்பித் தருவாயா? “ எனக் கேட்டான். அவ்வாலிபனும் சம்மதித்தான். ஆட்டுக்காரன் கேட்டான், " நீ தகவல் தொழில்நுட்ப ஆலோசகன் தானே? " அவ்வாலிபன் கேட்டான், " உனக்கு எப்படித் தெரிந்தது? " ஆட்டுக்காரன் சொன்னான், அதுவா? மிக எளிது! முதலாவதாக நீ எவருடைய அழைப்புமின்றி இங்கு வந்தாய். அடுத்ததாக நீ எனக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றுக்காக என்னிடமே கட்டணமாக ஒரு பிராணியைக் கேட்டாய். மூன்றாவதாக, உனக்கு என்னுடைய தொழிலைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆகவே, இப்போது நான் என்னுடைய நாயை திரும்ப எடுத்துக் கொள்ளலாமா? " என்றான். “உருவத்தைப் பார்த்து எவரையும் எடைபோடாதே” என்று அப்பா சொன்னது நினைவுக்கு வர, வாலிபன் தனது காரை முடுக்கினான். குறிப்பிட்ட சில நேரங்களில் நமக்கு குறை உள்ளவர்களாக இருப்பவர்களை போல மற்றவர்கள் தெரிந்தாலும் அவர்களுடைய லெவல்லே வேறாக இருக்கும் இதனையும் புரிந்துகொள்ள வேண்டும்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
MUSIC TALKS - MANIYE MANIKUYILE - MAALAI ILAM KATHIR AZHAGE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !
மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே கொடியே கொடிமலரே கொடி இடையின் நடையழகே தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க்கரமோ தொட இனிக்கும் பூமரப் பாவை ந...
-
என் செல்லம் என் சிணுக்கு என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி என் புஜ்ஜு குட்டி என் பூன குட்டி அரே மியாவ் மியாவ் ஹே… மியாவ் மியாவ்...
-
அமெரிக்காவில் 'சாட்டர்டே நைட் லைவ்' என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நண்பர்களே, அந்த நிகழ்ச்சியைப் பற்றிய பெரும்பாலான தகவல்களை இ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக