Monday, February 3, 2025

ARC - 093 - கஷ்டப்படுபவர்களை இன்னும் கஷ்டப்படுத்தும் ஆட்கள் !




அன்று கடுங்குளிர் நிறைந்த ஒரு இரவில் ஒரு மன்னன் தன் அரண்மனைக்கு வந்தான். அரண்மனை வாசலில் மெல்லிய ஆடையுடன் வயது முதிர்ந்த காவலாளியைப் பார்த்தான். "குளிர் கடுமையாக இருக்கிறதே. அதை நீ உணரவில்லையா?" என்று கேட்டான். “ஆம். உணர்கிறேன் மன்னா. ஆனால், குளிரை தடுக்கும் ஆடை என்னிடம் இல்லையே!" என்றான் காவலாளி. அதற்கு மன்னன், "கவலைப்படாதே, நான் அரண்மனை சென்று குளிரை தாங்கும் கம்பளி ஆடையை உனக்கு அனுப்புகிறேன்" என்று கூறி அரண்மனைக்குள் சென்றான். மன்னரின் வார்த்தையை கேட்டு அந்த காவலாளி அகமகிழ்ந்தான். அரண்மனைக்கு சென்ற மன்னன் தான் வாக்களித்தை மறந்து விட்டான். காலையில் அந்த காவலாளி இறந்து கிடந்தான். அவனருகே ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது."மன்னா!! இவ்வளவு நாட்களாக கடும் குளிரை மவுனமாக தாங்கி கொண்டிருந்தேன். ஆனால், குளிரை தாங்கும் ஆடை கிடைக்கும் என்ற என் எதிர்பார்ப்பு இதுவரை இருந்த என்னுடைய மன உறுதியை குலைத்து என்னை கொன்று விட்டது". மற்றவர்களிடம் நீங்கள் கொடுக்கும் வாக்குறுதி மற்றவரிடம் நீங்கள் எண்ணி பார்க்காத அளவு நம்பிக்கையை ஏற்படுத்தலாம். எனவே, அந்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நீங்கள் அறியமாட்டீர்கள்! உங்களின் நிறைவேற்றாத வாக்குறுதி நீங்கள் வாக்களித்தவருக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த மன்னருடைய முட்டாள்தனம் ஒரு இழப்பை உருவாக்குகிறது. அந்த நாட்டில் ஆட்சியாளர்கள் மக்களை கொள்ளையடித்தனர். சட்டத்தாலும் அடக்குமுறைகள் வரிகள் மூலமும் வாட்டி வதைத்தனர். போராட்டம் கலவரமும் உயிர்ப்பலியும் அதிகமானது. அயல்நாடுகள் மக்களுக்காக அனுதாபம் காட்டின. “மக்களைக் கொல்லாதே” என்றன. “இது உள் நாட்டு விவகாரம் இதில் பிற நாடுகள் தலையிடுவது உலக அரசியலுக்கு முரண்பாடானது” அந்த நாடுகள் வாயை மூடிக்கொண்டன. உயிர் போகும் வேளையில் போராடாமல் மடிவதைவிட போராடி மடிவதே மேல் என மக்கள் எண்ணினர். ஆயுதங்களை கையில் எடுத்தனர். அச்சமடைந்த ஆட்சியினர் வெளிநாடுகளுக்கு அவசர செய்தி அனுப்பினர். “புரட்சி வெடித்து விட்டது ஆயுதங்களை அனுப்பி எங்கள் ஆட்சியை காப்பாற்றுங்கள் “ - கேட்டால் அரசியலில் இது எல்லாம் சாதரணமப்பா என்கிறார்கள். கஷ்டப்பட்ட மக்களுக்குதான் உயிர் உட்பட எல்லாமே போகிறது !கஷ்டப்படுபவர்களை இன்னும் கஷ்டப்படுத்தும் ஆட்கள் இவர்கள் என்பதால் கண்டிப்பாக மன்னிக்கவே மனது வருவது இல்லை !

No comments:

ARC-G2-030

  ஒரு நாட்டின் மன்னன் நள்ளிரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை அருகே குட்டிப்...