Tuesday, February 4, 2025

ARC - 115 - மேனேஜ்மென்ட் போட்டிகள் வேற லெவல்லில் இருக்கிறது !



ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர். மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு, “உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்” என்கிறது. மூவருக்கும் ஆச்சரியம்! உடனே கேஷியர் முந்திக்கொண்டு, “நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்” என்கிறார். பூதமும் “அவ்வாறே நடக்கட்டும்” என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார். அடுத்து சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்…“அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்” என்றார். அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது. கடைசியாக மேனேஜர், “நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?” என்றது பூதம். அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர், “ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!” - இந்த உலகத்தில் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான ஒரு கான்ஸேப்ட் என்னவென்றால் தனியார் துறைகளில் வேலை பார்க்கும்போது எப்போதுமே ஏதோ ஒரு காரணத்துக்காக மேலிடத்தில் இருப்பவர்கள் அடுத்தவர்களை மேலே செல்ல அனுமதிப்பதே இல்லை ! ஒரு ஊரில் ஒரு புலவர் இருந்தார். அவருக்குப் பணம் தேவைப்பட்டது. பக்கத்து ஊரில் ஒரு பணக்காரனைப் புகழ்ந்து பாடி பரிசு பெற்று வரலாம் என்று எண்ணினார். அவன் ஒரு பெரிய கஞ்சன் என்பது அவருக்குத் தெரியாது. புலவர் பணக்காரனை புகழ்ந்து சில பாடல்கள் பாடினார். பணக்காரன் 'நூறு ரூபாய் தருகிறேன்" என்றான். புலவர் இன்னும் சில பாடல்கள் பாடினார். அவன் இரு நூறு ரூபாய் தருகிறேன் என்றான். புலவர் மேலும் பாடினார். அவன் 'முன்னூறு ரூபாய் தருகிறேன்" என்றான். புலவர் மேலும் உற்சாகத்துடன் பாடினார். அவன் 'நானூறு ரூபாய் தருகிறேன்" என்றான். புலவர் மேலும் உற்சாகத்துடன் பாடினார். அவன் 'எழுநூறு ரூபாய் தருகிறேன்" என்றான். புலவர் பாடுவதை நிறுத்திக் கொண்டார். இறுதியாக பணக்காரன் புலவருக்கு நூறு ரூபாய் மட்டுமே கொடுத்தான். புலவருக்கோ ஒன்றும் புரியவில்லை. புலவர் பணக்காரனிடம் 'ஐயா, நீங்கள் 700 ரூபாய் தருவதாகச் கூறினீர்களே" என்றார். அதற்கு அவன் 'புலவரே, நான் திரும்பத் திரும்ப நூறு ரூபாய் தருகிறேன் என்று தானே கூறினேன். முதலில் 'நூறு ரூபாய் தருகிறேன்" என்றேன். பிறகு, 'இரு. நூறு ரூபாய் தருகிறேன்" என்றேன். பிறகு, 'முன் நூறு ரூபாய் தருகிறேன்" என்றேன். பிறகு, 'நான் நூறு ரூபாய் தருகிறேன்" என்றேன். பிறகு, 'எழு, நூறு ரூபாய் தருகிறேன்" என்றேன். நீங்கள் தான் தவறாக புரிந்துகொண்டீர்கள் என்றான். புலவர் வெறும் நூறு ரூபாயோடு ஏமாற்றத்துடன் புலவர் திரும்பிச் சென்றார். நீதி : 1) ஏமாற்றுபவர்கள் எப்போதும் ஏமாற்றத்தான் செய்வார்கள் 2) புகழ்ச்சி செய்பவர்களிடம் மயங்க கூடாது

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...