ஒரு தொழிலதிபரை பார்க்க அவருடைய நண்பர் வந்திருந்தார். தொழிலதிபருக்கு இரண்டு மகன்கள். தொழிலதிபர் தன்னுடைய தொழிற்சாலைக்கு எம்.டி யாக அவரது இளைய மகனை நியமித்ததுவிட்டார். “மூத்த மகன் இருக்க எப்படி உங்கள் இளைய மகனுக்கு நிர்வாக பொறுப்பை கொடுத்திர்கள்?” என நண்பர் உரிமையோடு கேட்டார். தொழிலதிபர் தன் இரு மகன்களையும் அழைத்தார். “ஆறு மாதத்துக்கு முன்பு உங்கள் இருவர்க்கும் கொஞ்சம் தங்கம் தந்து பத்திரமாக வைத்திருங்கள் என்று சொன்னேனே? என்ன செய்தீர்கள்?” என கேட்டார். இருவரும் பேங்கில் பத்திரமாக உள்ளது என கூறினார். நண்பர் தொழிலதிபரை மேலும் கீழும் பார்த்து பார்வையாலேயே கேட்டார். இரண்டு பேரும் ஒரே வேலையே தானே செய்துளார்கள் தொழிலதிபர் இப்போது பாருங்கள் என பார்வையாலையே சொல்லிவிட்டு மூத்த மகனிடம் “எப்படி பத்திரமாக வைத்திருகிறாய்?” ” வெரி சிம்பிள்பா!! லாக்கர்லே வச்சுட்டேன். வருசத்துக்கு 12,000 ரூபாதான் வாடகை.” இளைய மகனிடம் திரும்பினார். அவன் சொன்னான்.” நான் அத அதே பேங்க்ல அடமானம் வச்சுட்டேன். அதனால தங்கத்தோட மதிப்புலே 80% பணம் திரும்ப கிடைச்சுடுச்சு. அத நம்ம பிசினச்சுலே போட்டு அதுலே நல்ல ரோட்டேசனும் ஏகப்பட்ட லாபமும் பண்ணிகிட்டேன். அந்த பணத்தால நமக்கு வருசத்துக்கு 1 லட்சம் லாபம் வருது. வருசதுதுக்கு 8000 ரூபாத்தான் வட்டியா போகுது. இப்போ நம்ம நகைகள் நம்மை பொறுத்தவரை இலவசமா பாதுகாக்கப்படுது. இது மட்டும் இல்லாமல் நகைகளில் போட்ட பணம் நகையில் முடங்காம பார்த்துகிட்டேன். நகைய பாதுகாக்க சொந்த காசு போகாம வச்சுகிடேன்.” என்றான்/ ஒரு விஷயத்தை நாம் தொழில் முறையில் செய்ய வேண்டும் எனும்போது நாம்தான் நிறைய விஷயங்களை அனுபவத்தை கொண்டு சிறப்பாக முடிக்க வேண்டும். இது தொழில் செய்பவர்களுக்கு என்றால் ஒரு நிறுவனத்தை உருவாக்க முயற்சிப்பவர்கள் எப்போதும் ஜெயித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் வேற லெவல்லில் திறன்களை வைத்து இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகிறது.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இ...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக