Monday, February 3, 2025

ARC - 096 - இனி எல்லாம் சுகமே !







ஒரு கடலோர நகரில் ஒரு திறமையான படகோட்டி இருந்தான். தினமும் படகில் மக்களை அருகிலுள்ள தீவுக்கு அழைத்துச் சென்று திரும்பி வருவது அவரது தொழிலாகும். ஒரு நாள் சில இளைஞர்கள் அவரது படகில் பயணம் செய்தனர். படகை கிளப்பும் முன் படகோட்டி கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்தார். கடலும் வானமும் அமைதியாக இருந்த அந்த நேரத்தில் பிரார்த்தனை செய்த அவரை பயணிகள் சிரித்து கிண்டல் செய்தனர். அதை பொருட்படுத்தாமல் படகோட்டி படகை கிளப்பினார். படகு நடு கடலை அடைந்தபோது திடீரென்று புயல் வந்தது. படகு மேலும் கீழும் ஆடி தத்தளித்தது. பயந்து போன பயணிகள் கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்தனர். படகோட்டியையும் பிரார்த்தனை செய்ய அழைத்தனர். அதற்கு படகோட்டி இப்பொழுது படகை சரியாக செலுத்துவதே எனது கடமையாகும். அதை மட்டுமே செய்வேன் என்றார். சிறிது நேரத்திற்கு பிறகு புயல் திசை மாறி சென்றது. கடலும் அமைதியானது. அதுவரை படகு கவிழாமல் திறமையாக அதை ஓட்டிய படகோட்டி, துடுப்பு தள்ளுவதை நிறுத்தி விட்டு கடவுளுக்கு நன்றி கூறி பிரார்த்தனை செய்தார். இப்பொழுது, மற்றவர்களும் அவருடன் சேர்ந்து பிரார்த்தனை செய்தனர். நிறைய நேரங்களில் நம்முடைய வேலைகள் தவிர்க்க முடியாதது. இன்னொருவருடைய வாழ்க்கை சம்மந்தப்பட்டது என்றால் யோசிக்காமல் வேலைகளை முடிக்கவேண்டும் என்று கவனமாக கடமைகளை செய்வதுதான் சரியான விஷயமாக கருதப்படுகிறது. ஒருவன் அதிகாலை எழுந்து காலைக்கடன்களை முடித்து ஆற்றில் குளித்து அருகில் உள்ள கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தான். கோவிலில் இறைவன் முன்பு ஏதாவது கோரிக்கைகள் சொல்லியே வழிபடுவது வழக்கமாக இருந்தான். பலநாட்கள் இதைப்பார்த்த ஒரு பெரியவர் அவனை அழைத்து அவனிடம் ஒரு கதை சொன்னார். ஓர் தத்துவ ஞானி செருப்புக்கூட அணியாதவர். தினமும் கடைவீதி செல்வார். ஒவ்வொரு கடையிலும் சிறிது நேரம் நின்று பார்த்து விட்டு அடுத்த கடைக்கு செல்வார். எல்லாம் பார்ப்பதுடன் சரி. எதையும் வாங்கியதே இல்லை. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வெறுமனே திரும்பி வந்து விடுவார். அவருடைய நண்பர் நீ ஏன் தினமும் கடைவீதி செல்கின்றீர் எனக் ஞானியிடம் கேட்க, அங்கு என்னென்ன பொருள்கள் விற்கின்றன என்பதைப் பார்க்க என்றார். நீங்கள் அந்த பொருள்களிலிருந்து எதையும் வாங்கி வந்ததாக இதுவரை தெரியவில்லையே என்பதற்கு ஞானி, “அங்கு விற்கப்படும் பொருட்கள் இல்லாமல் நான் எவ்வளவு நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்பதைப் புரிந்து கொள்வதற்காக எனச் சொன்னார்.” இந்தக் கதையை கேட்ட இளைஞன் இதை ஏன் என்னிடம் கூறுகின்றீர்கள் என்றான். அதற்கு பெரியவர் பக்தி என்பது உனக்கு என்ன தேவை என்பதை சொல்லிக் கொண்டிருக்க அல்ல. பக்தியின் மூலம் உனக்கு தேவையற்றதை தெரிந்து ஒதுக்குவதற்குத்தான் என்ற உண்மை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்றார். உண்மையில் தெளிவான மனிதர்களின் வாழ்க்கையை பற்றிய புரிதல்கள் மிகவும் ஆச்சரியமாக உள்ளது. 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...