Wednesday, October 26, 2022

OREY NAALIL PANAM SAMPATHIPPATHU EPPADI ? - SEMMA DETAIL ARTICLE - :) - [REGULATION 2024 - 00083]


1. முன்னதாக "ஒரே நாளில் பணக்காரன் ஆவது எப்படி ?" - இப்படி ஒரு கட்டுரையை நான் எதுக்கு எழுதணும் ? இப்போ என்ன பண்ணணும்னு நான் சொல்லறேன் பணக்காரன் ஆக முடியலாம் . இல்லைன்னா முடியாமல் கூட போகலாம் ஆனால் கண்டிஷன் போடாம உலகம் சொல்லற எல்லா வேலைகளையும் செய்ய முடியுமா ? அதுதான் என்னோட கேள்வி ?  முடியாதுன்னா இப்பவே பின்னாடி போகனும். முடியும்னா மட்டும் கொஞ்சம் கூட யோசிக்காம இந்த கட்டுரையை கவனிக்கவும் ! இந்த விஷயத்தை நான் எதுக்கு சொல்லறேன்னா  இந்த அட்வைஸ் கொடுக்கறேன் ! இந்த அட்வைஸ் யாருமே ஃப்ரீயாக கொடுக்க மாட்டாங்க !! பணம் சம்பாதிக்கறதுல இருக்கற பெரிய பிரச்சனை DARK PATTERNING

2. என்ன படிச்சு இருக்க ? நீதி  , நேர்மை , நியாயம் ! அப்போ சத்தியம் தர்மம் எல்லாம் அரியர்ஸ் வெச்சு இருக்கியா ? 

"ஃபர்ஸ்ட் பேட்ச் ! படிச்சவங்க , பணக்கார ஆடியன்ஸ் , செகண்ட் பேட்ச் , படிப்பு ஒரு அளவுக்குதான் , ஏழை ஆடியன்ஸ் . நான் இந்த கட்டுரையில் இருக்கும் அட்வைஸ்களை இரண்டு தனித்தனி பாகமாக பிரிக்கிறேன் . இந்த இரண்டு ஆடியன்ஸ்ஸும் என்கிட்ட சண்டைக்கு  வரக்கூடாது. பொதுவாக எக்கனாமிக் பேலன்ஸ்ன்னு ஒரு விஷயம் இருக்கு. எங்கேயோ ஒரு இடத்துல தங்க துகள்களும் , வைர கட்டிகளையும் மண்ணுக்குள்ள இருந்து எடுத்து ஒருவர் பணக்காரனாக மாறிவிட்டால் ஒரு விவசாய அமைப்பின் நூறு வருட விளைச்சலை தனி ஒரு ஆளாக வாங்கிவிடாலாம் , அப்போ பவர் எங்க இருக்கு ? பவர் என்ற விஷயம் பொருட்களில் பெரும்பான்மையாகவும் , அறிவுப்பூர்வமான செயல்பாட்டில் கொஞ்சமும் இருக்கிறது. உன்னிடம் பொருட்கள் இருந்தால் மதிப்பார்கள் , பணமாக இருந்தாலும் மதிப்பார்கள் ! இப்போ நான் உன்கிட்ட ஒரே நாளில் பணக்காரன் ஆவது எப்படின்னு சொல்லறேன்னு இந்த கட்டுரையில் சொல்லி இருக்கிறேன். [முக்கியமான குறிப்பு ! என்னை விட வயதானவர்கள் , இல்லையென்றால் உயர் பதவியில் இருப்பவர்கள் நான் ஒருமையில் பேசுவதை தப்பாக நினைக்க வேண்டாம் !! நான் என்னுடைய வயதை விட சின்னவங்களுக்காகதான் இந்த போஸ்ட் எழுதுகிறேன் ! பெரியவர்கள் இந்த போஸ்ட் படித்து தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். [நான் 30+ வயது உள்ளவன்] 

3. முடியுமா ? முடியாதா ?

1-2 வருஷம் , இல்லைன்னா அதுக்கு மேல நீ வேலை பார்க்கணும் , இல்லைன்னா உனக்கு கீழ வேலை செய்யும் மக்கள் உனக்காக சம்பாதித்து போடணும் !!  முடியாது !! ஆமாம் ஒரே நாளில் முடியாது !! ஆனால் வெறும் 100 வருஷம்ன்னு கணக்கு பண்ணா கூட 36500 நாள்தான் வாழப்போறோம் , 50 வயதுக்கு மேல பணம் சேர்த்தும் எந்த பிரயோசனமும் இல்லை. இதனால நான் சொல்ல வரும் பாயிண்ட் என்னவென்றால் நாம் சேர்க்கும் பணத்தை 40 களுக்குள் ஒரு பகுதியை நாம் தரமாக செலவு பண்ணனும், இப்போ ஒரு இயர்க்கு உன்னோட நெட் பிராஃபிட் 36,50,000 என்றால் பேர் டேக்கு 10,000 சம்பளம் பார்த்த மாதிரிதானே !! அதனாலதான் நான் ஆன்லைன்ல மற்றும் ஆஃப்லைன்ல என்னென்ன வேலைகள் கிடைக்குமோ எல்லாத்துக்குமே உனக்கு பிசினஸ் இண்டராடக்ஷன் கட்டுரைகள் போட்டு அதுக்கு இந்த குறிப்பிட்ட போஸ்ட்டில் HYPERLINK கொடுக்கிறேன். இந்த போஸ்ட் 2 வருடத்தில் பணக்காரன் ஆவது எப்படி என்பது பற்றியதுதான் , ஒரே நாளில் பணக்காரன் ஆக முடியாது !! ஆனால் PER DAY வருமானத்தை உன்னால் உயர்த்த முடியும் !! 
 

இங்கே எதனால் நான் மோட்டிவேஷன் புத்தகம் போல எழுதவில்லை என்றால் பின்வரும் மொக்கையான டெக்ஸ்ட் போல கதையாக சொல்லி ஃபில் அப் பண்ண நான் விரும்பவில்லை :


மொக்கையான டெக்ஸ்ட் ஆன்சர்ஸ் இப்படித்தான் இருக்கும் :

இந்த உலகத்தில் வெற்றியை அடைய வேண்டும் என்றால் நம்முடைய பாதை ஒரு நேரான நேர்க்கோட்டில் செல்லும் அம்பு போல இருக்க வேண்டும். இந்த உலகத்தில் எல்லோருமே நல்லவர்களாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும் ஆனால் இங்கே இருப்பவர்கள் அனைவருமே நல்லவர்கள் என்று சொல்ல முடியாது. மனித வாழ்க்கையின் உண்மை என்னவென்றால் இந்த வாழ்க்கை என்பது துன்பங்களும் துயரங்களும் நிறைந்தது. மனக்கசப்புகளை கடந்து அனைவரிடமும் அன்பை கொடுக்க வேண்டும். தேவைகள் இருப்பவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வாழும் வாழ்க்கையே ஒரு சிறப்பான வாழ்க்கை என்று சொல்லலாம். ஆனால் போதுமான பணம் இல்லாததால்- உடல்நலம் சார்ந்த குறைபாடுகளால்- மோசமான சூழ்நிலைகள் என நிறைய காரணங்கள் இருக்கலாம்‌. இந்த உலகத்தில் வெற்றியாளர்களை மட்டுமே எல்லோருமே கொண்டாடுகிறார்கள்‌. தோல்வி அடைந்த மனிதர்களுக்கு அந்த தோல்விக்கு பின்னால் நிறைய காரணங்கள் இருக்கிறது. ஆனால் அந்த காரணங்களை பற்றி யாருமே கவலைப்படுவது இல்லை. தோல்வி அடைந்தவர்களை கேட்டுப்பாருங்கள். அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கும் குறைகள், பிரச்சனைகள் மற்றும் தனிப்பட்ட நிறைய விஷயங்கள்தான் அந்த தோல்விக்கு காரணமாக இருக்கும். வாழ்க்கை ஒரு போராட்டம்தான் - வாழ்வே ஒரு வியாபரம்தான் என்ற வார்த்தைகளை போல இந்த உலகமே மிகவும் மோசமானது. இதனால் ஒரு ஒரு தனிப்பட்ட மனிதரும் வெற்றியை அடைவதற்காக போராட வேண்டும். ஒரு திரைப்படம் அதனுடைய கதைக்களத்தில் மிகப்பெரிய அளவில் ஒரு கற்பனையான பிரபஞ்சத்தை உருவாக்குகிறது. அதுபோலவே கடவுள் எல்லோருக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை கொடுத்துள்ளார். கடவுள் இருக்கிறார். அவரே எல்லோரையும் காப்பாற்றுவார். இந்த உலகத்தில் எல்லோருமே நல்லவர்கள் கிடையாது. கான்செர் போன்ற உயிரை கொல்லும் நோய்கள் இருக்கும்போது இந்த உலகமே வெறுப்பாக இருக்கும், அடுத்த நாள் காலை கண்கள் விழிக்கும்போது வாழ்க்கை நரகமாக இருக்கும், அடுத்த நாள் உயிரோடு இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம், பணம் இல்லாமல் நோயை குணப்படுத்த முடியாத நிலையில் வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருக்கும். இந்த  கடவுளின் சோதனைக்கூடமா ? எல்லோருமே கடவுளின் சோதனை எலிகளா ? கடவுள் எல்லோருக்கும் இவ்வளவு கஷ்டத்தையும் வலிகளையும் கொடுக்க காரணம் என்ன ? மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது, என்னுடைய மனது பேசக்கூடிய மொழியை இந்த எழுத்துக்களால் மொத்தமாக சொல்லிவிட முடியுமா என்று எனக்கு புரியவில்லை. இல்லை இந்த எழுத்துக்களால் என்னுடைய கடினமான வாழ்க்கையை சொல்ல முடியாது.


இந்த சோதனைகளை எல்லாம் நம்முடைய காலம் எதுக்காக நமக்கு கொடுக்கிறது என்று என்னால் கன்க்ளூஷனுக்கு வரமுடியவில்லை. ஒரு குழந்தை பிறக்கும்போதே அங்க குழந்தைக்கு வாழ்க்கையின் சந்தோஷங்களையும் கஷ்டங்களையும் காலம் கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. சந்தோஷத்தில் வாழ்ந்துகொண்டு இருந்தால் காலத்துக்கு எதிராக போராடவேண்டிய அவசியமே இல்லை. காலத்தின் போக்கில் சென்றுக்கொண்டு சந்தோஷமாக இருந்துவிடலாம் ஆனால் நாம் வாழ்க்கையில் கஷ்டத்தில் வாழ்ந்துகொண்டு இருந்தால் நம்மை ஒரு இயலாமையில் மட்டும் வாழ்க்கை வைத்து இருக்கிறது. நமக்கென்று ஒரு எல்லைக்கொடு போடப்பட்டு நம்முடைய பணவரவு குறைக்கப்பட்டு சக்திகளுமே குறைக்கப்படுகிறது. இப்படி பணவரவு குறைவதால் அடிப்படையில் மூளையின் செயல்திறன் நன்றாக இருந்தாலும் நம்முடைய நல்ல திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சிகளாக நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் கானல் நீராக கரைந்துவிடுகிறது. நம்மிடம் இருக்கும் கொஞ்சம் பணமுமே நம்முடைய வாழ்க்கையில் கரைந்துவிட்டால் நமக்காக எந்த சப்போர்ட்டுமே இல்லாமல் தனித்து மோதவேண்டிய கடினமாக நிலையில் மாட்டிக்கொள்கிறோம். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு பணத்தை கொடுத்தால் பணம் நிறைய விஷயங்களில் அவர்களுடைய வாழ்க்கையை முன்னேற்றம் அடைய வைக்கிறது. 



No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...