Wednesday, October 26, 2022

THIS IS LIFE !! I THINK !!! - இதுதான் வாழ்க்கை !! [REGULATION 2024 - 00082]

ஒரு மாலை நேரம், செப்டெம்பர் மாதத்தின் மழைப்பொழிவு முடிந்து கொஞ்சம் தூறல் விட்டுக்கொண்டு இருந்தது. பேருந்தில் இருந்து இறங்கியதும் ஒரு கடையில் தேநீர் சாப்பிடும்போது கிரிக்கெட்- சாலை நெரிசல்- இன்றைய வானிலை நிலவரம் என்று எக்கச்சக்கமான தகவல்கள் அந்த வானொலியில் கேட்டுக்கொண்டு இருக்கும். அந்த ரேடியோவில் ஒரு பாட்டு கேட்கும். "இரு விழி உனது.. இமைகளும் உனது.. கனவுகள் மட்டும் எனதே எனது.. நாட்கள் நீளுதே.. நீ எங்கோ போனதும். ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்.. ஓஹோ ஹோ ஒரே ஞாபகம்.. ஓஹோ ஹோ.. உந்தன் ஞாபகம்.. காதல் காயம் நேரும்போது தூக்கம் இங்கு ஏது ? ஒரே ஞாபகம்.. ஒரே ஞாபகம். இங்கதான் ஒரு அன்பான கணவர் வேலை விஷயமாக வெளியூர் போக்கும்போதும் அங்கே தங்கும்போதும் மனைவியையும் குடும்பத்தையும் பிரிந்து வாழும் அந்த வாழ்க்கையின் நேசம் புரியும்..போதுமான அளவு பணம் இருந்தால் சொந்த ஊரில் ஒரு மளிகை கடையாவது வைத்து வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கலாம். குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவதை ரசிக்கலாம். தீபாவளியும் பொங்கலும் வரும்போது திரைப்படங்கள் பார்க்கலாம். பலகாரம் செய்து சாப்பிடலாம். இது எல்லாமே கொஞ்சம் அதிக சம்பளத்துக்காக முயற்சி செய்யும்போது உருவாக்கக்கூடிய பிரிவு.. இந்த பிரிவு ஒன்றும் அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல.. தொலை தூரத்தில் வேலை செய்யும்போதுதான் இந்த வாழ்க்கையில் ஒரு இனம் புரியாத உணர்வு உருவாகும்.. மழையில் ரைன் கோர்ட் போட்டுட்டு பைக்ல் இருந்து வீட்டுக்கு வந்தாலும் அந்த குளிரை தாங்கிக்கொள்ள முடியாதது போல ஒரு உணர்வு. இரவும் பகலும் வெயிலும் மழையும் என்னை ஒன்றும் செய்யாது என்ற உணர்வு. உடல் நிலை சரியில்லாதபோதெல்லாம் மாத்திரைகளும் மருந்துகளும் மட்டுமே இருக்கும்போது ஒரு தனிமையான உணர்வு. மனதுக்கு பட்டதை எல்லாம் பேச முடியாத ஒரு இடத்தில் மனம் விட்டு எல்லாமே சொல்லிவிட முடியாத மனிதர்களிடம் ஒரு ஸ்டிரேஞ்சான உணர்வு. பணம் இருந்தால் சிவாஜி படத்தில் இடம்பெற்ற சஹானா பாடல் அளவுக்கு ஒரு வாழ்க்கையை யாருமே விரும்ப மாட்டார்கள். ஒரு எளிமையான வாழ்க்கை.. ஒரு வீடு.. ஒரு பைக்..பக்கத்தில் ஒரு மளிகை கடை..தள்ளுபடி கொடுக்கும் ஒரு துணிக்கடை , கொஞ்சம் தூரத்தில் ஒரு பள்ளிக்கூடம், இன்னும் கொஞ்சம் தூரத்தில் ஒரு நல்ல ஹாஸ்பிடல் , முடிந்தால் ஒரு பஸ் ஸ்டாப் என்று அவ்வளவுதான் வாழ்க்கையில் இது இருந்தால் போதுமே.. இந்த வார்த்தைகளை படிக்கும் யாராக இருந்தாலும் குடும்பத்தை விட்டுவிட்டு வெளியூரில் தங்கியிருந்து வேலை பார்க்கும்போது இருக்கும் நினைவுகள் இருந்தால் அப்படி யாரேனும் இருந்தால் அவர்களுடைய அனுபவங்களை கேட்டுப் பாருங்கள். அனைவரும் நலமாக இருக்க இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள். உங்களால் இந்த உணர்வை புரிந்துகொள்ள முடிகிறதா? நேசிபபவர்களிடம் இருந்து தொலைவில் வாழ்வது கடினமானது மட்டுமல்ல மோசமானது. இங்கே என்னுடைய இத்தனை வருடங்களின் வாழ்க்கையில் இதுபோன்ற சின்ன சின்ன உணர்வுகளும் சம்பவங்களும்  மட்டுமே வாழ்க்கைக்கு ஒரு அருமையான நினைவுகளின் களஞ்சியத்தை கொடுக்கிறது. !!

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...