Tuesday, February 4, 2025

ARC - 105 - தேவையற்ற விஷயங்களை செய்தல் !



ஒரு காட்டில் ஒரு சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது! வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது. நாய்கள் ஓட ஆரம்பித்தன. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். “என்ன நடந்தது? ஏன் சிறுத்தை ஓடவில்லை?” என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன விடை “சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”. சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும். அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம். தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம். நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம். அது ஒரு அழகிய ஏரி. அந்த ஏரியில் அழகிய ஆமை ஒன்று தனது இரண்டு வாத்து நண்பர்களுடன் வாழ்ந்து வந்தது. தினமும் அந்த இரு வாத்துகளை ஆமை சந்திப்பது வழக்கம். ஒருநாள் அந்த இரண்டு வாத்துகளும் வருத்தத்துடன் காணப்பட்டன. இதைக்கண்ட ஆமை, “ஏன் இருவரும் வருத்தத்துடன் உள்ளீர்கள்”, என்று கேட்டது. “பல வருடங்களாக மழை பெய்யாத காரணத்தால் இந்த ஏறி வறண்டு வருகிறது. இன்னும் சில காலத்திற்கு பிறகு இங்கு முற்றிலும் நீர் வறண்டுவிடும். எனவே நாங்கள் இருவரும் பக்கத்துக்கு ஊரில் உள்ள ஏரிக்குச் செல்ல இருக்கிறோம்”, என்று வாத்துகள் கூறியது. “என்னை விட்டு செல்வதற்கு உங்களுக்கு எப்படி மனம் வந்தது. நீர் குறைந்தால் உங்களுக்கு உணவு தான் குறையும், எனக்கோ உயிரே போய்விடும். என்மீது உங்களுக்கு அன்பு இருக்குமானால் என்னையும் அழைத்துச் செல்லுங்கள்”, என்றது ஆமை. “உனக்கு தான் இறக்கைகள் கிடையாதே! உன்னை அழைத்துப்போக எங்களால் எப்படி முடியும்?” என்றது வாத்து. அதற்கு ஆமை ஒர் உபாயம் செய்யலாம், “ஒரு நீண்ட குச்சியை எடுத்து வாருங்கள். நான் நடுவில் என்னுடைய பற்களால் கொட்டியாய் பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் இருபக்கமும் பிடித்து தூக்கிக் கொண்டு பறந்து செல்லுங்கள்”, என்றது ஆமை “நாங்கள் உயரப்பறக்கும்போது நீ வாயைத்திறந்தால் கீழே விழுந்து இறந்து விடுவாய்” என்று வாத்துகள் கூறியது. அப்படியானால் “பறக்கும்போது நான் வாய் போசாமல் இருக்கின்றேன்” என்று ஆமை கூறியது. இரு வாத்துகளும் இருபக்கமும் குச்சியை பிடித்து பறக்க நடுவில் ஆமை வாயில் பற்றிக்கொண்டு பறந்தன. சிறிது தூரம் பறந்தவுடன் ஆமை சந்தோஷத்தில் துள்ளிகுதிக்க ஆரம்பித்தது. இரு வாத்துகளும் ஆமையிடம் “சிறிது நேரம் அமைதியாய் இரு. இல்லாவிடில் நீ கீழே விழுந்து விடுவாய்”, என்று கூறியது. செல்லும் வழியில் வாத்துகள் ஆமையுடன் பறந்து சொல்வதப்பார்த்த மக்கள் வாத்துகள் எதையோ தூக்கிக்கொண்டு கொண்டு போகின்றன என கூச்சலிட்டனர். ஆமையின் கெட்ட நேரம் அந்த வார்த்தைகள் அதன் காதில் விழுந்தது. இந்த மக்கள் ஏன் இப்படி கூச்சலிடுகின்றனர் என வாய்திறந்து பேச அது பிடித்திருந்த பிடி விட்டுவிட கீழே விழத்தொடங்கியது. கீழே விழுந்த ஆமை உடல் சிதறி இறந்தது. இதுபோன்ற குட்டி கதைகள்தான் கால காலமாகவே வாழ்க்கையில் ஒரு சில நேரங்களில் மட்டும் பொறுமையாக இருந்தால்தான் வெற்றியடைய முடியும் என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றன !



No comments:

இணைய காவியம் - #3

Step 1: Understand YouTube Automation YouTube automation involves creating and managing a YouTube channel with minimal human involvement. Th...