அந்த அண்ணாச்சி மிகவும் நல்லவர். அவருடைய மனைவி இறந்ததில் இருந்து பெரும் குடிகாரராக மாறிவிட்டார். குடிக்கு அடிமையாகவே ஆகிவிட்டார். ஒருநாள் ஒரு பாதிரியார் அவரை குளத்தின் அருகில் சந்தித்தார். அவர் மீது கருணைக் கொண்டு அவருக்கு அவரைத் திருத்த நினைத்தார். எனவே அவரை குளத்து நீரில் மூன்று முறை மூழ்கி எழ சொன்னார். அவரும் அவ்வாறே மூன்று முறை மூழ்கி எழுந்தார். "மகனே இன்று முதல் நீ "அந்தோணி " என அழைக்கப்படுவாய். நீரிலிருந்து நீ வெளியேறும் முன்பு நீ எனக்கு ஒரு சத்யம் செய்து தரவேண்டும். இனி மேல் மதுஅருந்த மாட்டேன்" என்று. குடிகார அண்ணாச்சி என்ற அந்தோனி மறுமொழியாக, "சாமி, சாயா குடிக்கலாமா?" என்று கேட்க, பாதிரியாரும், "ம் டீ குடிப்பதில் பிரச்சனை இல்லை" என்றார். விட்டிற்கு வந்த குடிகார அண்ணாச்சி, "ரம்" பாட்டிலை பக்கெட்டில் இருந்த தண்ணிரில் 3 முறை முக்கி எடுத்து, "ரம்மே, ரம்மே.... இன்று முதல் நீ சாயா அல்லது டீ என்று அழைக்க படுவாய்" என்று சொல்லி தனது வேலையே தொடர்ந்தார். குடி போதையில் சாலையோரத்தில் விழுந்து கிடந்தவனை லத்தியால் தட்டி எழுப்பிய அந்தக் கான்ஸ்டபிள் கோபத்துடன் கேட்டார். "ஏய்! தலைகால் புரியாம விழுந்து கெடக்கிறியே, எவ்வளவு குடிச்சே?" "சார்! ஒரு ஃபுல் பாட்டிலயும் குடிச்சிட்டேன்." “ஏன்யா...... இப்படி நிதானம் தவறும் அளவுக்கா குடிப்பது? ஒரு லிமிட் வேணாம்?” “நெலம அப்படி சார். குடிக்க வேண்டிய கட்டாயம் ஆகிப் போச்சு.!”. சொன்னவன் முகத்தில் தெரிந்த வருத்தத்தைப் பார்த்த கான்ஸ்டபிள் சற்றே தணிந்த குரலில் கேட்டார். “அப்படி என்ன கட்டாயம்?” கான்ஸ்டபிள் கேட்டதும் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவரைப் பார்த்துச் சொன்னான். ”பாட்டில் மூடி தொலஞ்சி போச்சு சார்". ஒரு குறும்புக்கார ஆசாமி ஒரு மகானிடம் சென்று கேட்டான். "நான் திராட்சை சாப்பிடலாமா? மகான் சொன்னார்: "ஓ. தாராளமா” "அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்தலாமா?” "ஓ. பயன்படுத்தலாமே?” "புளிப்புச் சுவைக்காக கொஞ்சம் வினிகர் சேர்த்துக் கொள்ளலாமா?” "அதிலென்ன சந்தேகம்?” "அப்படீன்னா இதுவெல்லாம் சேர்ந்ததுதான் மது. அதைக் குடிப்பது மட்டும் தப்பு என்று சொல்கிறார்களே?” மகான் யோசித்தார். குறும்புக்கார ஆசாமியிடம் கேட்டார்: "இங்க பாருப்பா. உன் தலை மேலே கொஞ்சம் மண் அள்ளிப் போட்டா உனக்குக் காயம் ஏற்படுமா?” "அதெப்படி ஏற்படும்?” "தண்ணீர் ஊற்றினால்?” "தண்ணீர் ஊற்றினால் எப்படி காயம் ஏற்படும்?” "மண்ணையும் தண்ணீரையும் கலந்து சுட்டு செங்கல்லாக்கி உன் தலையில் போட்டால்?” "காயம் ஏற்படும்” "நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்” என்றார் மகான்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இதுவரை ஆக்டிவிஸன் ஸ்டுடியோவால் வெளியிடப்பட்ட கணினி விளையாட்டுக்கள் !
Activision Games 1980 Dragster Fishing Derby Checkers 1981 Kaboom! Freeway Laser Blast...
-
என் செல்லம் என் சிணுக்கு என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி என் புஜ்ஜு குட்டி என் பூன குட்டி அரே மியாவ் மியாவ் ஹே… மியாவ் மியாவ்...
-
அமெரிக்காவில் 'சாட்டர்டே நைட் லைவ்' என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நண்பர்களே, அந்த நிகழ்ச்சியைப் பற்றிய பெரும்பாலான தகவல்களை இ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக