Monday, February 3, 2025

ARC - 099 - இந்த காலத்து சோதனை இதுதான் !




இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கிறது. ஒன்றில் எப்பவுமே ரயில் வராது மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும். ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது. அத்தருணத்தில் ரயில் வருகிறது. தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள். உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது. நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்? இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார். ப்ராக்டிகலாக பதில் சொல்லனும் நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார். உண்மையாக நாம் என்ன செய்வோம்? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றிவிடுவோம். ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார். உண்மை தான் என்றோம் இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது. ரயில் வரும் என்று தெரிந்து தப்பு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது. ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தப்பே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது. இன்றைய சூழலில் நம்முடைய  வாழ்கையும், நம்முடைய நாடும் இப்படிதான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார். இன்றை நிலை "நல்லதையே தனியாக செய்பவன் கடினமாக தண்டிக்கபடுகிறான். தவறையே கூட்டமாக செய்பவர்கள் சந்தோஷமாக தப்பித்துக்கொள்கிறார்கள்"

No comments:

கொஞ்சம் கெமிஸ்ட்ரி ! - EP.019

  Steel Composition : Iron and carbon (plus other elements like manganese, chromium, nickel) Uses : Construction, automotive parts, machiner...