Thursday, April 11, 2019

AVENGERS ENDGAME : IRON MAN TAMIL VOICE ISSUE [REGULATION-2024-00041]





அவென்ஜ்ர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படத்தை தொடர்ந்து APRIL 26 ல் வெளிவரவிருக்கும் சூப்பர்ஹீரோ திரைப்படம் அவென்ஜர்ஸ் எண்ட் கேம் , இந்த திரைப்படத்தின் தமிழ் மொழி பதிப்பில் முக்கிய கதாபாத்திரங்களான அயன் மேன் மற்றும் நடாஷா என்ற கதாபாத்திரங்களின் பழைய பின்னணி குரல் நிச்சயமாக மாற்றப்பட கூடாது என்றும் மேலும் ORGINAL ஆன DUBBING TEAM  வேண்டும் என்றும் எதிர்பார்ப்பதற்கான காரணம் :  MCU எனப்படும் மார்வெல் திரைப்படங்களின் வரிசையில் அவென்ஜர்ஸ் எண்ட் கேம் 22 வது திரைப்படம் ஆகும் , அயன் மேன் (2008) திரைப்படம் முதல் அவென்ஜ்ர்ஸ் இன்பினிட்டி வார் (2018) திரைப்படம் வரை இந்த திரைப்படங்கள் எல்லாமே MARVEL SUPERHERO FANS ன் மிகவும் எதிர்பார்ப்பு உள்ள திரைப்படங்களாக இருந்துள்ளது , மாற்றங்கள் இல்லாத பட்சத்தில் இந்த கதைக்களத்தின் அசலான தன்மை வசனங்களில் இருக்கும் .அவென்ஜர்ஸ் திரைப்படங்களின் வரிசையில் இந்த திரைப்படம் கடைசி திரைப்படம் ஆகும் , மேலும் இன்பினிட்டி வார் திரைப்படத்தை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது , இந்த திரைப்படத்தின் கதாபாத்திரங்களின் தன்மை புதிய வசனங்கள் மாற்றப்படுவதால் நிச்சயமாக நன்றாக இருக்காது , மேலும்  புதிய VOICE மற்றும் DIALOGUES இந்த கடந்த 21 திரைப்படங்களின் ஸ்டைல்-க்கு பொருத்தமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும் . அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படத்தில் அயன்மேனின்  "பூமிக்கு இன்னைக்கு HOLIDAY .. " என்று சொல்லும் அந்த அளவுக்கு  COOL-ஆன வசனங்களை விட்டுக்கொடுக்க  வேண்டியது இருக்கும் . ஆனால் காலத்தின் கட்டாயம் இதுதான் என்றால் யாராலும் மாற்ற முடியாது , இருந்தாலும் இந்த திரைப்படம் அவென்ஜர்ஸ் ன் கதைக்களத்தின் முடிவாக இருக்கப்போகும் CONCLUSION அல்லது  கடைசி பாகம் . HARRY POTTER திரைப்படத்தின் கடைசி பாகத்தில்  கதாபாத்திரங்களின் VOICE-க்கு கொஞ்சம் கூட பொருந்தாத VOICE ACTORS க்கு மாற்றப்பட்டால் எந்த அளவுக்கு UNORGINAL ஆக இருந்திருக்குமோ அந்த அளவுக்கு இந்த அவென்ஜர்ஸ் திரைப்படம் UNORGINAL ஆக இருக்கும் .

Tags :iron man tamil voice , avengers endgame tamil dubbed , avengers endgame tamil voice , avengers endgame iron man voice , vijaysethupathi voice .





No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...