Tuesday, April 30, 2019

AVENGERS TAMIL - WHAT FANS EXPECTED .. WHAT THEY GET ? - என்னடா பண்ணி வெச்சு இருக்கீங்க !! - [REGULATION-2024-00042]






 


அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படம் தமிழ் மொழியில் வெளிவந்துள்ளது . ஆனால் அயன் மேன் மற்றும் நடாஷா போன்ற முக்கிய கதாபாத்திரங்களின் குரல் மாற்றப்பட்டு இருப்பது இப்போது கன்னத்தில் கைவைத்து வருத்தப்படும் வகையில் நாங்கள் எதிர்பார்த்தது போலவே கொஞ்சமுமே ORIGINALITY இல்லாமல்தான் இருக்கிறது . இந்த படம் நம்ம ஃபேன்ஸ்களுக்கு 12 வருட கனவாக இருந்த ஒரு படம் . கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்தாலும் இந்த திரைப்படம் வெளிவந்த பிறகுதான் இதுதான் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் கடைசி பாகம் என்றும் அயர்ன் மேன் கதை இந்த படத்தில் இருந்தே முடிந்துவிடும் என்றும் ஒரு வருத்தமான தகவல் கிடைத்துள்ளது .நானே விஜய் சேதுபதி வாய்ஸ் கேட்டு கடுப்பில் இருக்கிறேன். ஆனால் ரகுமான் பாட்டு போட்டுவிட்டார் என்பதற்காக இப்போது எல்லாம் இந்த திரைப்படத்தை MARVEL என்றால் என்னவென்றே தெரியாத மனிதர்கள் போய் பார்த்துவிட்டு கடைசிவரைக்கும் கதையே புரியாமல் இருக்கிறதே என்று குறை கூறுவதும் , விஜய் சேதுபதி என்ற புதிதாக மாற்றப்பட்ட குரலுக்கு சொந்தக்காரரின் உயிர் ரசிகர்கள் எல்லோரும் இப்போது நானும் AVENGERS FAN என பொய்யாக சொல்லிக்கொண்டு இருப்பதும். நடிகர்கள் மற்ற படங்கள் எதையும் பார்க்காமல் இந்த அவெஞ்சர்ஸ் படத்தை பார்த்து " எனக்கு கொஞ்சம் கூட புரியவில்லை" என்று எதிர்மறை விமர்சனங்களை தெளிப்பதும் இன்னும் கொடுமையானது ,ஒரு திரைப்பட வரிசையில் 22 வது திரைப்படத்தை பார்த்துவிட்டு அவர்கள் SIMPLE ஆக புரியவில்லை என்று சொல்லிவிட்டு போவதுதான் MARVEL நேசிப்பவர்களுக்கு இன்னும் வருத்தத்தை கொடுக்கிறது , தனிப்பட்ட அளவில் நானும் MARVEL FAN தான் . இந்த விஷயம் எனக்கும் வருத்தமாகவே இருக்கிறது . இது எல்லாமே என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் மட்டுமே , இந்த கருத்துகளுக்கு நான் மட்டுமேதான் பொறுப்பு. விஜய் சேதுபதி கௌரவமான மனிதர். மேலும் புரஃபஷனல்லாக குரல் கொடுக்கும் டப்பிங் அனுமதிகளை பெற்று இருக்கிறார். இங்கே அவருடைய மிஸ்டேக் என்று எதுவுமே இல்லை. MCU வில் முன்னால் வெளிவந்த இருபத்துக்கும் மேற்பட்ட படங்களை பார்த்துவிட்டு IRON MAN  DUBBING கொடுங்கள் என்று அவரை கட்டாயப்படுத்துவது அவருக்கு சிரமமானது ஆனால் MARVEL புரிந்துகொள்ளவே இல்லை. ஃபேன்ஸ் களை ரசனை கெட்ட ஜென்மங்கள் என்று நம்ம ஊரு மார்வல் வெளியீடு R & D துறை நினைத்துவிட்டது. இந்த மாதிரி CINEMA என்று வரும்போது மிஸ்டேக் நடப்பது சாதாரணம் ஆனால் ஒரு 15 வருடத்தின் LEGACY - யை MARVEL - ன் படங்கள் எல்லாம் கட்டி காப்பாத்திய கௌரவத்தை சம்மந்தமே இல்லாமல் விஜய் செதுபதி , முருகதாஸ் மற்றும் ரகுமான்னின் நேரங்களை எல்லாம் வேஸ்ட் பண்ண வைத்துவிட்டு ஆடியன்ஸ்ஸின் எதிர்பார்ப்புகளை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு உங்களின் சுயநலத்துக்காக பணத்தாசைக்காக இப்படி பண்ணிவிட்டீர்களே ? முடிந்தால் DISNEY + வெளியீட்டில் மறுபடியும் ஒருமுறை DUB பண்ணி போடுங்கள். காசுக்கு ஆசைப்பட்டு அதுவுமே பண்ணாமல் விட்டுவிடாதீர்கள். கோபத்தின் அதிக பட்சத்தில் இப்போது இருக்கிறோம், விமர்சனங்களை கமெண்டில் பதிவு செய்யவும். #TONYSTARKOLDVOICE #IRONMANVOICEISSUE #CHANGEOLDDUBBINGTEAM #BRINGBACKOLDDUBBINGTEAM #TONYSTARKTAMILVOICE

No comments:

JUST TALKS - ஆஸ்கார் அவார்டு வாங்கிய ஷார்ட் பிலிம்கள் !

2000 : My Mother Dreams the Satan's Disciples in New York 2001 : Quiero Ser (I Want to Be) 2002 : The Accountant 2003 : This Charming Ma...