ஆசிரமத்துக்கு அருகே இருந்த ஊர் ஒன்றில் மிகப்பெரிய செல்வந்தன் ஒருவன் இருந்தான். நான்கைந்து வியாபாரங்கள் செய்து வந்தான் அவன். அவனது போதாத காலம். ஒரு வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அதைச் சரி செய்வதற்குள் கவனம் பிசகி, மற்ற தொழில்களிலும் அடுத்தடுத்து சரிவுகளைச் சந்தித்தான். பிரச்னைகளைச் சமாளிக்க வாங்கிய கடன்கள் அவனது நிம்மதியைக் குலைத்தன. தொடர்ந்து கடன் மேல் கடனாக வாங்கிக்கொண்டே போனான். அப்படியும் சமாளிக்க முடியவில்லை. ஒருநாள் மொத்தமாக முடங்கிப்போனான். வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாம் இழந்து நடு வீதிக்கு வந்துவிட்டான். விரக்தியில் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் மோசமான முடிவுக்கும் அவன் வந்திருந்தான். அதற்கு முன்னர். தனக்கு விடிவு காலம் பிறக்குமா என்று தெரிந்துகொள்ளும் ஏக்கத்திலும், நல்ல காலம் பிறக்கும் என்று தெரியவந்தால், தற்கொலை செய்துகொள்ளும் முடிவை தள்ளிப்போடலாம் என்ற எதிர்பார்ப்பிலும் குருநாதரைச் சந்திக்க வந்தான். ஒடுங்கிப்போன மனிதனாக குருவின் முன் நின்றான். குருவை வணங்கினான். “எனக்கு மறுவாழ்வு கிடைக்குமா ஸ்வாமிகளே” என கண்ணீருடன் கைகூப்பிக் கேட்டான். அதற்கு முன்பு பலமுறை செல்வந்தனின் தோரணையிலேயே அவனைப் பார்த்திருந்தான் சிஷ்யன். செயல் இழந்தவனாக அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அவனுக்கு என்ன ஆலோசனை சொல்லப்போகிறார் குருநாதர் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் சிஷ்யனும் தன் காதுகளைத் தீட்டிக்கொண்டு காத்திருந்தான். இப்போது உன் நிதி நிலைமை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார் குரு. மானத்தோடு வாழ்ந்து பழகியவன். அதனால், இருந்த சொத்தையெல்லாம் விற்று கடன்களை அடைத்துவிட்டேன். செல்வமெல்லாம் தொலைந்தது. அதனால் என் மனைவியும் என்னைப் பிரிந்துவிட்டாள். குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவளது பெற்றோரிடம் போய்விட்டாள். உற்றார், உறவினர் யாருமே என்னை மதிப்பதில்லை. கையில் இப்போது நயா பைசா இல்லை. மனதில் தெம்பும் இல்லை. உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்கிறது” என்றான் வந்தவன். இனி இழப்பதற்கு எதுவுமில்லை உன்னிடம். ஆனால், இந்த நிமிடம் உன்னிடம் மிச்சமிருப்பது விலைமதிப்பற்ற இரண்டு பொக்கிஷங்கள். எத்தனை கோடிகள் கொடுத்தாலும் அவற்றை ஒருவனால் விலைக்கு வாங்க முடியாது. உனக்கு ஏற்பட்ட தீமைகளின் நன்மையாக அவை உனக்குக் கிடைத்திருக்கின்றன. அவற்றை நீதான் கவனமாக மீட்டெடுக்க வேண்டும். சரியாகப் பயன்படுத்த வேண்டும். உன் வசம் இருக்கும் அந்த பொக்கிஷங்களை சரியாகப் பயன்படுத்தினால் நிச்சயம் நீ இழந்த அனைத்தையும் திரும்பவும் அடைவாய். இனி, எதைச் செய்தாலும் அதில் நீ வெற்றி பெறுவாய்” என்று கூறினார் குரு. அவர் பேசப்பேச, எதுவும் புரியாமல் திருதிருவென விழித்தான் எதிரே இருந்தவன். குருவின் குரலைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த சிஷ்யனுக்கும் அவரது பேச்சின் பொருள் புரியவில்லை. இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை என்ற நிலையில் இருப்பவனிடம் அப்படியென்ன பொக்கிஷங்கள் மிச்சமிருப்பதாகக் கூறுகிறார் குருநாதர் என தெரிந்து கொள்ளும் ஆவல் அவனுக்கு அதிகமானது. வந்திருந்தவன் அதைக் கேட்கும் முன்னர், சிஷ்யனே குறுக்கிட்டுக் கேட்டுவிட்டான். அப்படி என்ன விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் அவரிடம் மிச்சமிருக்கின்றன குருவே?” என்றான். ஆமாம் ஸ்வாமி. நீங்கள் சொன்னது எனக்கும் விளங்கவில்லை. என்னிடம் அப்படியென்ன மிச்சமிருக்கிறது ஒன்றுக்கும் உதவாத இந்த உயிரைத் தவிர?” என்று கேட்டான் வந்திருந்தவனும். ஓரமாக நின்றுகொண்டிருந்த சிஷ்யனையும் அருகே அழைத்து, எதிரில் அமரச் சொன்னார் குரு. பொறுமையாகவும் தீர்க்கமாகவும் தன் பேச்சைத் தொடர்ந்தார். தற்கொலை செய்துகொள்ளும் முடிவெடுத்த உன்னை இந்த நிமிடம்வரை தடுத்து நிறுத்திவைத்திருப்பது உனக்குள் மிச்சமிருக்கும் உன் தன்னம்பிக்கை. எந்த நம்பிக்கை உன் வெற்றிகள் எல்லாவற்றுக்கும் பக்கபலமாக இருந்ததோ, அதுதான் உன் தோல்விகளால் தொலைந்துபோகாமல் கொஞ்சமேனும் மிச்சமிருக்கிறது. அதுதான் முதல் பொக்கிஷம். துளியாக இருக்கும் அதை நெருப்பாகப் பரவ விடு.” தலையசைத்து ஆமோதித்தான் வந்திருந்தவன். சிலையாகிக் கவனித்துக்கொண்டிருந்தான் சிஷ்யன். குரு தொடர்ந்தார். உன்னிடம் இருக்கும் அந்த இரண்டாவது பொக்கிஷம் எல்லோருக்கும் எளிதில் கிடைத்துவிடாது. தோல்விகளால்தான் அதை அடையமுடியும். கைவசம் இருக்கும் எல்லாமும் நம்மை விட்டுப் போன பிறகு நம்மிடம் மிஞ்சியிருப்பது அதுவேயாகும். தோல்விகளைச் சந்திக்க நேர்ந்த ஒவ்வொரு கணத்தையும் திரும்பத்திரும்ப சிந்தித்துப் பார்த்தால் அறியக் கிடைக்கும் அதுவே அனுபவம் எனப்படும்”. என்றார் குரு. அவர் சொல்லச்சொல்ல உத்வேகம் வந்தது தோற்றுப்போய் வந்திருந்தவனுக்கு. வாழ முடியும் என்ற வைராக்கியம் உருவானது. வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கை வெகுண்டெழுந்தது. அவன் முகரேகைகள் தெரிவித்த பரவசத்தைப் பார்க்கும்போது சிஷ்யனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !
ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இ...

-
அலையே அலையே காட்டுல மழையே அலைலே அல்ல ட்யூட் செதற பதற உடுவன் நான் உதற அல்லல்லே அல்லா நண்பா ஊரும் ரத்தம் 10000 AURA வை கொண்டு அச்சாது ந...
-
நீங்கள் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் இந்த படம் என்று சொல்லலாம், செம்ம எண்டர்டெயின்மெண்ட், இந்த படத்துடைய கதையை பார்க்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக