இப்படி ஒரு சைக்கோலாஜிக்கல் திரைப்படம் நீங்கள் பார்த்திருக்க முடியாத, பக்கத்து பக்கத்து வீட்டில் விளையாடிக்கொண்டு இருக்கும்போது தொலைந்து போன அல்லது கடத்தப்பட்ட இரண்டு காணாமல் போன சிறுமிகளை தொலைத்த குடும்பத்தினர் கண்டுபிடிக்க போராடும் கதையை மையமாகக் கொண்டது இந்த படம். இந்தக் கதை, தன் மகளும் அவள் தோழியும் தெருவில் விளையாடும்போது சந்தேகத்துக்கு இடமான குற்றவாளியின் வண்டியில் கடத்தப்பட்டு மாயமாகி விட்டதற்குப் பிறகு காவல் துறை புகாருக்கு உரிய நடவடிக்கையை எடுக்காமல் சம்மந்தப்பட்ட கெட்டவனையும் வெளியே விட்டுவிட்டதால்
சட்டத்தை கையில் எடுக்க வேண்டும் என்று கோபமாக பழிவாங்கும் விசாரணையில் தன்னை ஈடுபடுத்தும் குழந்தைகளின் அப்பாவான கெல்லர் டோவர் என்ற கோபம் நிறைந்த மனிதரை சுற்றியிருக்கிறது. போலீசார் வழக்கைத் தீர்க்க பாடுபடும்போது, கேல்லர் காவல் துறையால் சந்தேகிக்கப்படும் குற்றவாளி ஒருவரை கடுமையாக கடத்தி அடித்து உண்மையை வாங்க ஆரம்பிக்கிறார். இதற்கிடையில், வழக்கைத் தீர்க்கவும் குழந்தைகளை கண்டுபிடிக்கவும் நியமிக்கப்பட்ட டிடெக்டிவ் லோகி உண்மையை கண்டுபிடித்து குற்றவாளியை வெளிச்சம் போட்டு காட்ட முயற்சிக்கிறார். இந்த திரைப்படம் கண்ணியமும் நீதியும் அடிப்படையாக வாழும் வாழ்க்கையில் சராசரி மனிதர் ஒருவரின் அன்பான குடும்பத்தை பாதுகாக்க எவ்வளவு தூரம் செல்வது என்று பேசுகிறது. இது பரபரப்பான திருப்பங்களும் ஆழ்ந்த காட்சிகளும் நிறைந்த பயணமாகும்
No comments:
Post a Comment