ஷசாம் திரைப்படத்தின் தமிழ் மொழி DUBBING குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
ஷின் சான் , பென் டென் போன்ற அனிமேஷன் தொடர்களை நாம் எப்போதும் விட்டுக்கொடுக்கவே முடியாது , இன்னைக்கு வரைக்கும் ஸ்மார்ட்ஃபோன் காலத்தில் கூட கலகலப்பான SHIN CHAN TAMIL EPISODES ஆக இருக்கட்டும் அல்லது ALIEN களை நொறுக்கும் ACTION HERO BEN 10 -னாக இருக்கட்டும் , இந்த மாதிரியான அனிமேஷன் தொடர்கள் உண்மையில் ஜப்பானிய மற்றும் ஆங்கில மொழியில் இருந்தாலும் நம்ம ஊரு ஆடியன்ஸ்க்காக அந்த மொழிகளின் தடைகளை எல்லாம் கடந்து இன்றைக்கு இந்த அனிமேஷன் தொடர்களை நம்ம தமிழ் மொழியில் எல்லோரும் விரும்பி பார்க்க காரணமாக இருப்பது இது போன்ற அனிமேஷன் தொடர்களுக்கு தமிழ் மொழியில் சிறப்பாக அருமையாக வசங்களை மொழிபெயர்த்து மேலும் தரமாக பின்னணி DUBBING கொடுத்து சின்ன சின்ன காட்சிகளையும் ரசிக்கும்படி செய்யும் நம்ம ஊரு TAMIL DUBBING TEAM மட்டுமே என்று சொன்னால் மிகையாகாது .
ஷசாம் 2019 ல் ரிலீஸ் ஆன ஒரு DC காமிக்ஸ் சூப்பர்ஹீரோ திரைப்படம் ஆகும் , இன்று இந்த படத்தை நான் TAMIL DUBBING ல பார்க்கும்பொது இந்த திரைப்படத்தில் BEN 10 அல்டிமேட் ஏலியன் , மற்றும் சின்சான் போன்ற தொடர்களுக்கு வாய்ஸ் கொடுத்த ரகுவரன் சார்தான் வாய்ஸ் கொடுத்து இருக்கிறார். இந்த படத்துக்கு ரசிக்கும்படியான கியூட்டாக கொடுத்த நம்ம DUBBING ARTIST MR.ரகுவரன் SIR மற்றும் DUBBING ARTISTS குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் .இங்கே சமீபத்திய அவெஞ்சர்ஸ் எண்டுகேம் பிரச்சனைக்கு பின்னால் டப்பிங் என்பது மிகவுமே கவனமாக பண்ண வேண்டிய ஒரு விஷயம். புரஃபஷனல்ஸ்களிடம் வொர்க்ஸ்களை கொடுப்பதே பெஸ்ட் என்று காலகாலமாக ஹாலிவுட் படங்களை டப்பிங் பண்ணும் இடங்களில் இருந்து நிறைய வேண்டுகோள்கள் இருக்கிறது. இங்கே குரல் கொடுக்கும் கலைஞர் நம்ம ரகுவரன் சார் மட்டும் இல்லை நிறைய பேருக்கு இந்த ஒரு டப்பிங் பிரச்சனைக்கான விஷயம் ஒரு கௌரவமான அங்கீகாரம் கொடுத்துள்ளது. ஷசாம் படம் டிரெய்லர் பார்க்க இண்டரெஸ்ட்டிங்காக இருப்பதால் நிச்சயமாக தியேட்டர்ல பார்க்க ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும் என்று நம்புகிறேன். அப்டேட் : நெடிஃப்லிக்ஸ்ல இப்போது எல்லாம் எந்த ஹாலிவுட் படங்கள் நம்ம தமிழ் மொழியில் டப்பிங் பண்ணப்பட்டாலும் நம்ம மொழியில் டப்பிங் பண்ணியவர்கள் மற்றும் பின்னணி குரல் கொடுத்தவர்கள்களுக்கு END CREDITS ல பெயர்களை மென்ஷன் பண்ணுகிறார்கள். இதுவே ஒரு நல்ல விஷயம்தான். DUBBING TEAM க்கு எப்போதுமே அவர்களுடைய திறமைக்கும் கிரியேடிவிட்டிக்கும் நல்ல அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Tuesday, April 30, 2019
AVENGERS TAMIL - WHAT FANS EXPECTED .. WHAT THEY GET ? - என்னடா பண்ணி வெச்சு இருக்கீங்க !! - [REGULATION-2024-00042]
அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படம் தமிழ் மொழியில் வெளிவந்துள்ளது . ஆனால் அயன் மேன் மற்றும் நடாஷா போன்ற முக்கிய கதாபாத்திரங்களின் குரல் மாற்றப்பட்டு இருப்பது இப்போது கன்னத்தில் கைவைத்து வருத்தப்படும் வகையில் நாங்கள் எதிர்பார்த்தது போலவே கொஞ்சமுமே ORIGINALITY இல்லாமல்தான் இருக்கிறது . இந்த படம் நம்ம ஃபேன்ஸ்களுக்கு 12 வருட கனவாக இருந்த ஒரு படம் . கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்தாலும் இந்த திரைப்படம் வெளிவந்த பிறகுதான் இதுதான் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் கடைசி பாகம் என்றும் அயர்ன் மேன் கதை இந்த படத்தில் இருந்தே முடிந்துவிடும் என்றும் ஒரு வருத்தமான தகவல் கிடைத்துள்ளது .நானே விஜய் சேதுபதி வாய்ஸ் கேட்டு கடுப்பில் இருக்கிறேன். ஆனால் ரகுமான் பாட்டு போட்டுவிட்டார் என்பதற்காக இப்போது எல்லாம் இந்த திரைப்படத்தை MARVEL என்றால் என்னவென்றே தெரியாத மனிதர்கள் போய் பார்த்துவிட்டு கடைசிவரைக்கும் கதையே புரியாமல் இருக்கிறதே என்று குறை கூறுவதும் , விஜய் சேதுபதி என்ற புதிதாக மாற்றப்பட்ட குரலுக்கு சொந்தக்காரரின் உயிர் ரசிகர்கள் எல்லோரும் இப்போது நானும் AVENGERS FAN என பொய்யாக சொல்லிக்கொண்டு இருப்பதும். நடிகர்கள் மற்ற படங்கள் எதையும் பார்க்காமல் இந்த அவெஞ்சர்ஸ் படத்தை பார்த்து " எனக்கு கொஞ்சம் கூட புரியவில்லை" என்று எதிர்மறை விமர்சனங்களை தெளிப்பதும் இன்னும் கொடுமையானது ,ஒரு திரைப்பட வரிசையில் 22 வது திரைப்படத்தை பார்த்துவிட்டு அவர்கள் SIMPLE ஆக புரியவில்லை என்று சொல்லிவிட்டு போவதுதான் MARVEL நேசிப்பவர்களுக்கு இன்னும் வருத்தத்தை கொடுக்கிறது , தனிப்பட்ட அளவில் நானும் MARVEL FAN தான் . இந்த விஷயம் எனக்கும் வருத்தமாகவே இருக்கிறது . இது எல்லாமே என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் மட்டுமே , இந்த கருத்துகளுக்கு நான் மட்டுமேதான் பொறுப்பு. விஜய் சேதுபதி கௌரவமான மனிதர். மேலும் புரஃபஷனல்லாக குரல் கொடுக்கும் டப்பிங் அனுமதிகளை பெற்று இருக்கிறார். இங்கே அவருடைய மிஸ்டேக் என்று எதுவுமே இல்லை. MCU வில் முன்னால் வெளிவந்த இருபத்துக்கும் மேற்பட்ட படங்களை பார்த்துவிட்டு IRON MAN DUBBING கொடுங்கள் என்று அவரை கட்டாயப்படுத்துவது அவருக்கு சிரமமானது ஆனால் MARVEL புரிந்துகொள்ளவே இல்லை. ஃபேன்ஸ் களை ரசனை கெட்ட ஜென்மங்கள் என்று நம்ம ஊரு மார்வல் வெளியீடு R & D துறை நினைத்துவிட்டது. இந்த மாதிரி CINEMA என்று வரும்போது மிஸ்டேக் நடப்பது சாதாரணம் ஆனால் ஒரு 15 வருடத்தின் LEGACY - யை MARVEL - ன் படங்கள் எல்லாம் கட்டி காப்பாத்திய கௌரவத்தை சம்மந்தமே இல்லாமல் விஜய் செதுபதி , முருகதாஸ் மற்றும் ரகுமான்னின் நேரங்களை எல்லாம் வேஸ்ட் பண்ண வைத்துவிட்டு ஆடியன்ஸ்ஸின் எதிர்பார்ப்புகளை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு உங்களின் சுயநலத்துக்காக பணத்தாசைக்காக இப்படி பண்ணிவிட்டீர்களே ? முடிந்தால் DISNEY + வெளியீட்டில் மறுபடியும் ஒருமுறை DUB பண்ணி போடுங்கள். காசுக்கு ஆசைப்பட்டு அதுவுமே பண்ணாமல் விட்டுவிடாதீர்கள். கோபத்தின் அதிக பட்சத்தில் இப்போது இருக்கிறோம், விமர்சனங்களை கமெண்டில் பதிவு செய்யவும். #TONYSTARKOLDVOICE #IRONMANVOICEISSUE #CHANGEOLDDUBBINGTEAM #BRINGBACKOLDDUBBINGTEAM #TONYSTARKTAMILVOICE
Thursday, April 11, 2019
AVENGERS ENDGAME : IRON MAN TAMIL VOICE ISSUE [REGULATION-2024-00041]
அவென்ஜ்ர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படத்தை தொடர்ந்து APRIL 26 ல் வெளிவரவிருக்கும் சூப்பர்ஹீரோ திரைப்படம் அவென்ஜர்ஸ் எண்ட் கேம் , இந்த திரைப்படத்தின் தமிழ் மொழி பதிப்பில் முக்கிய கதாபாத்திரங்களான அயன் மேன் மற்றும் நடாஷா என்ற கதாபாத்திரங்களின் பழைய பின்னணி குரல் நிச்சயமாக மாற்றப்பட கூடாது என்றும் மேலும் ORGINAL ஆன DUBBING TEAM வேண்டும் என்றும் எதிர்பார்ப்பதற்கான காரணம் : MCU எனப்படும் மார்வெல் திரைப்படங்களின் வரிசையில் அவென்ஜர்ஸ் எண்ட் கேம் 22 வது திரைப்படம் ஆகும் , அயன் மேன் (2008) திரைப்படம் முதல் அவென்ஜ்ர்ஸ் இன்பினிட்டி வார் (2018) திரைப்படம் வரை இந்த திரைப்படங்கள் எல்லாமே MARVEL SUPERHERO FANS ன் மிகவும் எதிர்பார்ப்பு உள்ள திரைப்படங்களாக இருந்துள்ளது , மாற்றங்கள் இல்லாத பட்சத்தில் இந்த கதைக்களத்தின் அசலான தன்மை வசனங்களில் இருக்கும் .அவென்ஜர்ஸ் திரைப்படங்களின் வரிசையில் இந்த திரைப்படம் கடைசி திரைப்படம் ஆகும் , மேலும் இன்பினிட்டி வார் திரைப்படத்தை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது , இந்த திரைப்படத்தின் கதாபாத்திரங்களின் தன்மை புதிய வசனங்கள் மாற்றப்படுவதால் நிச்சயமாக நன்றாக இருக்காது , மேலும் புதிய VOICE மற்றும் DIALOGUES இந்த கடந்த 21 திரைப்படங்களின் ஸ்டைல்-க்கு பொருத்தமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும் . அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படத்தில் அயன்மேனின் "பூமிக்கு இன்னைக்கு HOLIDAY .. " என்று சொல்லும் அந்த அளவுக்கு COOL-ஆன வசனங்களை விட்டுக்கொடுக்க வேண்டியது இருக்கும் . ஆனால் காலத்தின் கட்டாயம் இதுதான் என்றால் யாராலும் மாற்ற முடியாது , இருந்தாலும் இந்த திரைப்படம் அவென்ஜர்ஸ் ன் கதைக்களத்தின் முடிவாக இருக்கப்போகும் CONCLUSION அல்லது கடைசி பாகம் . HARRY POTTER திரைப்படத்தின் கடைசி பாகத்தில் கதாபாத்திரங்களின் VOICE-க்கு கொஞ்சம் கூட பொருந்தாத VOICE ACTORS க்கு மாற்றப்பட்டால் எந்த அளவுக்கு UNORGINAL ஆக இருந்திருக்குமோ அந்த அளவுக்கு இந்த அவென்ஜர்ஸ் திரைப்படம் UNORGINAL ஆக இருக்கும் .
Tags :iron man tamil voice , avengers endgame tamil dubbed , avengers endgame tamil voice , avengers endgame iron man voice , vijaysethupathi voice .
Subscribe to:
Posts (Atom)
GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !
ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...
-
ஊதா ஊதா ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் சொல்லடி அவனுக்கு நான் ச...
-
பணமும் நம்பிக்கை துரோகங்களும் - இங்கே மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய பொருட்கள் அவனை எப்போழுதுமே கைவிடுவதில்லை. காரணம் என்னவென்றால் அ...