Monday, December 24, 2018

CINEMATIC WORLD - 022 - HEIDI - TAMIL REVIEW - இன்னைக்கு நம்ம திரை விமர்சனம் !! [REGULATION-2024-00039]


நீ எதுக்கு தேடி புடிச்சு இந்த ஜெர்மன் படத்தை பார்க்கணும் ? உனக்கு பார்க்க வேற படம் இல்லையா ? என்று கேட்கலாம் ! ஆனால் என்னை பொறுத்த வரைக்கும் யாதும் ஊரே , யாவரும் சொந்தக்காரனே (சொத்துல பங்கு கேட்காத வரைக்கும் ) இங்கே டிவி , நெட் , கேம்ஸ் , கம்ப்யூட்டர் இது எல்லாம் இல்லாத காலத்தில் நடக்கும் ஒரு குட்டி பெண்ணின் கதையாக ஒரு காலத்தில் குழந்தைகளுக்கான புத்தகமாக வெளிவந்த ஹைடி என்ற கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஜெர்மனியில் 2015 ல் வெளிவந்தது , இந்த படத்தில் எனக்கு பிடித்த விஷயமாக இருப்பது இந்த திரைப்படம் அவ்வளவு எதார்த்தமான கதையில் ஒரு சின்ன பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன சம்பவங்களை எல்லாம் சேர்த்து ஒரு சினிமா என்ற வகையில் அழகான சினிமா என்ற வகையில் ஆச்சரியமான கதைக்களமும் சேர்த்து நிறைய லொகேஷன்களை காட்டி இயற்கையுடன் இணைந்த ஒரு பயணமாக இந்த அனைவருக்கும் பிடித்த சரித்திர குழந்தை ஹைடி என்ற சிறுமியின் வாழ்க்கையில் நடக்கும் கதையை  சொல்கிறது . இந்த படமும் நிச்சயமாக பார்க்கவேண்டிய திரைப்படம்தான் . CHUTTI TV ல காலையில் 6:00 மணிக்கு HEIDI பார்த்த #தொண்ணூறுகளின் பசங்க !! இங்கே அஸேம்பல் ஆகவும். இன்னைக்கு மோட்டு பட்டுலு என்று முட்டாள்தனமான ஒரு மெச்சூரிட்டியே இல்லாத கதைகளை பார்க்கும் பசங்க எல்லோரும் நம்ம பழைய வாழ்க்கையை நிறையவே மிஸ் பண்ணுகிறார்கள். இந்த 90 களின் நினைவுகள் மட்டுமே தனி போஸ்ட் போடலாம். அணுக் ஸ்டீபன் குட்டி குழந்தையாக உள்ளம் கொள்ளையடித்து செல்கிறாள். ஒரு எளிமையான கிராமத்து பெண்ணாக பணக்கார குடும்பத்தில் வேலை பார்க்க அனுப்பப்பட்டதாலும் திரும்பவுமே வீட்டுக்கு வரும் காட்சிகள் நல்ல ரசனை !! நிறைய விருதுகளை கொடுத்து கௌரவம் பண்ண வேண்டிய படம். OSCAR எல்லாம் இந்த மாதிரி நல்ல படங்களை கண்டுகொள்ளாது போலவும் !!! இந்த படத்தில் அடுத்தடுத்த காட்சிகள் புத்தகங்களின் பக்கங்களை போல நிதானமான வேகத்தில் நகர்வது இந்த படத்தின் காட்சியமைப்புகள் இயற்கையான தன்மையை கொடுக்கிறது என்றே சொல்லலாம். திரைப்பட வரலாற்றில் ரொம்பவுமே முக்கியமான எல்லோருமே பார்க்க வேண்டிய ஒரு அருமையான திரைப்படம். 



CINEMATIC WORLD - 021 - THE AVENGERS 2012 - BEST MOVIE EVER !!! - சிறப்பான தரமான சம்பவங்கள் இந்த படத்தில்தான் பார்க்க முடியும் !! [REGULATION-2024-00038]







இன்னைக்கு தேதிக்கும் நான் என்னுடைய பெஸ்ட் பிலிம் என்னான்னு கேட்டா நான் தி அவெஞ்சர்ஸ் என்றுதான் சொல்கிறேன், பொதுவாக ஒரு சூப்பர்ஹீரோ பிலிம் என்றால் அது ஒரு தனிப்பட்ட ஒருவரின் கதையாகத்தான் இருக்கும் . தி லீக் ஆஃப் எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜேன்டில்மென் படத்துக்கு பின்னால் சூப்பர் பவர்ஸ் இருப்பவர்கள் சேர்ந்து உலகத்தை காப்பாற்றுவது போன்ற படங்கள் அவ்வளவாக இல்லை. பொதுவாக கடனில் எடுத்தாலும் அயர்ன் மேன் படம் கொடுத்த ஹிட்தான் அடுத்து அடுத்து மார்வேல் ஸ்டுடியோஸ்க்கு கேப்டன் அமெரிக்கா , தோர் போன்ற படங்களுக்கு வாய்ப்புகளை கொடுத்தது. ஆனால் அவெஞ்சர்ஸ் படம் மார்வேல் ஸ்டுடியோஸ் எடுத்ததில் பெரிய ரிஸ்க். 

காரணம் என்னன்னா டெக்னிகல் பாயிண்ட் ஆஃப் வியூ , விஷுவல்லாக கொஞ்சம் கூட பிசிறு தட்டாத ஒரு பக்காவான வி ஏப் எக்ஸ் இந்த படத்தில் பார்க்கலாம். இந்த படத்தில் மாயாஜால உலகத்தின் லோகி நிஜமாகவே பூமியின் மேலே ஒரு ஏலியன் படையெடுப்பை நடத்துவார். ஒரு ஒரு காட்சிகளும் கொஞ்சம் கொஞ்சமாக தனித்தனியாக செயல்பட்டுக்கொண்டு இருந்த டோனி ஸ்டார்க் , ஸ்டீவ் ரோஜர்ஸ் , நடாஷா , கிளின்ட் பார்டன் புரூஸ் பேனர் போன்றவர்களை ஒன்றாக சேர்த்தது. பின்னால் மனிதர்கள் இதுவரையில் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு அட்டாக்கை அவர்களிடம் இருக்கும் எல்லா சக்திகளையும் கொடுத்தாவது தடுக்க வேண்டும் என்ற நிலைமை வருகிறது. இப்படித்தான் சூப்பர் ஹீரோக்களாக எல்லோருமே ஒன்று சேர்க்கின்றனர். 

ஹல்க் - கதாப்பத்திரம் தி இன்க்ரேடிபிள் ஹல்க் படத்தில் இருந்தே நேரடியாக கன்டினியூ ஆகிறது, இருந்தாலும் புதிதாக ரீ-கேஸ்ட் பண்ணப்பட்ட புரூஸ் பேனர் நடிகர் மார்க் ராப்பாலோ மிகவும் தெளிவான நடிப்பை கொடுத்துள்ளார். டோனி ஸ்டார்க்காக நடிக்கும் ராபர்ட் டோனி ஜூனியர் அவருடைய அயர்ன் மேன் கதாப்பத்திரத்தை சூப்பர்ராக பண்ணியிருப்பார். மேலும் நடாஷா , ஹாவ்க்கை , போன்ற லேஜெண்ட் சூப்பர் ஹீரோக்களுக்கும் நிறைய கெத்தான மாஸ் சண்டை காட்சிகள் படத்துக்குள் இருக்கிறது. படம் வேறு லெவல்லில் இருக்கிறது. இந்த படம் உங்களை சூப்பர் ஹீரோக்களின் உலகத்துக்கே கொண்டு போகும் : 16/9 ஆஸ்பெக்ட் ரேஷியோ எல்லாம் சினிமா படங்களுக்கு சரியாக வராது ஆனால் இந்த படத்துக்கு ரொம்ப பெரிய பிளஸ் பாயிண்ட்டாக இருக்கிறது. ஒரு ஒரு காட்சியும் செதுக்கபட்டு இருப்பது போல இருக்கிறது. 

இந்த படம் எதனால் பிடிக்கும் என்றால் விஷுவல்லாக அந்த கிளைமாக்ஸ் ஃபைட் ஸீன்களை பிரமாதமாக பண்ணியிருப்பார்கள் . நூறுக்கும் மேற்பட்ட பலமான ஏலியன்களை வெறும் ஆறு சூப்பர் ஹீரோக்கள் அடித்து நொறுக்குவது பொதுவாக எல்லா படங்களிலும் பார்த்துவிட முடியாது. கமர்ஷியல் பாயிண்ட் ஆஃப் வியூ , டெக்னிகல் பாயிண்ட் ஆஃப் வியூ , சினிமாட்டிக் பாயிண்ட் ஆஃப் வியூ என்ற மூன்று விஷயங்களிலும் ஆவேன்ஜெர்ஸ் ஒரு ஸ்ட்ராங்க்கான படம்  என்பதால் இந்த படம் அவதார் அளவுக்கு மக்களை டிஸப்பாயிண்ட்மெண்ட் பண்ணாமல் கமர்ஷியல்லாக ஹிட் கொடுத்து இருக்கிறது. 





CINEMATIC WORLD - 020 - THE PEANUTS MOVIE - TAMIL REVIEW - பள்ளிக்கூட காதல் கதை !! - [REGULATION-2024-00037]








உங்களுக்கு பள்ளிக்கூட காதல் கதைகள் நினைவில் இருக்கா ? அப்படின்னா இந்த படம் பாருங்களேன் ! சார்லி அவன் நேசிக்கும் அந்த ரெட் கேர்ள்ளை இம்ப்ரஸ் பண்ண ரொம்ப ரொம்ப அதிகமா முயற்சி பண்ணுவான் ஆனால் எல்லாமே சொதப்பல்லாக மட்டும்தான் முடியும். அனிமேஷன் ரொம்ப ரொம்ப கியூட்டாக இருக்கும் , எனக்கு தெரிஞ்சு இந்த படத்தில் மட்டும்தான் பெரியவர்களை இல்லாமல் வெறும் ஜூனியர் கத்தாப்பாத்திரங்களை கொண்டு கதையை நகர்த்தி இருக்கிறார்கள் . சார்லஸ் எம் ஸ்கால்ஸ் என்ற கதை ஆசிரியரின் நியூஸ் பேபர் நெடுந்தொடர் (நம்ம ஊரு கன்னித்தீவு மாதிரி ) கதிகாப்பாத்திரங்களின் CGI வெர்ஷன்தான் இந்த படம். அமெரிக்க ஆடியன்ஸ்க்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கலாம். இந்த திரைப்படம் 2016 ல் வெளிவந்தது , இந்த திரைப்படம் ஒரு கலகலப்பான அனிமேஷன் திரைப்படம் , வாழ்க்கை முழுவதும் சின்ன சின்ன தோல்விகள் சந்தித்தாலும் ஒரு நல்ல  காரணத்துக்காக வெற்றியாளராக மாற ஆசைப்படும் குட்டி பையன் சார்லி ப்ரவுன் மேலும்  அவனுடைய நட்பு பெட் ஆக இருக்கும் ஸ்னுபியின் கலகலப்பான குறும்புகள்தான் இந்த படத்தின் திரைக்கதை என்பதால் கதையாக பார்த்தால் இதுவரைக்குமே நீங்க பார்த்த எந்த படத்திலும் இல்லாத ஒரு SCREENWRITING லெவல் இந்த படத்தில் இருப்பதால் இந்த திரைப்படமும் நீங்கள் மிஸ் பண்ணாமல் பார்க்கவேண்டிய திரைப்படம். அப்புறம் எப்போதும் போலத்தான் அந்த ஃபாலோ பட்டன் ப்ரெஸ் பண்ணுங்கள். #AD களை கிளிக் பண்ணினால் உங்களுக்கு புண்ணியமாக போகும் !! உங்களுடைய பள்ளிக்கூட காதல் கதைகளை கமெண்ட்டில் போடுங்கள் பார்க்கலாம் !! இந்த படம் ஒரு நியூஸ் பேபர் காமிக்ஸ் ஸ்ட்ரிப் கதை (நம்ம ஊரு தினத்தந்தியில் இருக்கும் கன்னித்தீவு கதையை போல வெளிநாட்டில் இருக்கும் ஒரு கதை ) தொடரை அடிப்படையாக கொண்டு வந்தது என்பதால் மொத்த படத்தையும் அந்த காமிக் கதைகளை எந்த ஸ்டைல்லில் வரைந்து இருக்கின்றார்களோ அதே ஸ்டைல்லில் வரைந்து இருக்கின்றார்கள். இந்த படத்துக்கு இதுவும் ஒரு பிளஸ் பாய்ண்ட் என்று அமைந்து இருக்கிறது.


Saturday, December 22, 2018

CINEMATIC WORLD - 019 - MEGAMIND (2010) - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00036]










நகரத்தை கலக்கும் சூப்பர் வில்லன் மெகா மைண்ட் அவர்கிட்ட இருந்து எல்லோரையும் காப்பாற்றும் மெட்ரோ மேன் , ஒரு கட்டத்துல மெட்ரோ மேன் இல்லாம போகும்போது புது வில்லன்கிட்ட இருந்து எல்லோரையும் காப்பாத்தக்கூடிய பொறுப்பு சூப்பர் வில்லன் மெகா மைண்ட் கிட்ட வந்தா அடுத்து என்ன நடக்கும் அப்டிங்கறதுதான் இந்த திரைப்படம் ,  இந்த படம் 2010 ல வெளிவந்தது. மெகா மைண்ட் ஒரு ஃபைனஸ்ட் அனிமேஷன் ஃபில்ம் என்று சொல்லலாம். லைஃப்ல ஒரு மனிதன் சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலையால் நல்ல பாதை அல்லது மோசமான பாதையை தேர்ந்து எடுக்கும்போது நடக்கக்கூடிய பிரச்சினையை ரொம்பவே தெளிவாக எக்ஸ்பிளைன் செய்திருப்பார்கள்.. பிக் ஹீரோ 6 திரைப்படத்தின் கதைக்களம் சேர்த்து கம்பரிசன் செய்து பார்த்தால் ஒரு நல்ல சூப்பர் ஹீரோ திரைப்படம் என்றும் மெகா மைண்ட் திரைப்படத்தை சொல்லலாம். இந்த படம் ஒரு ஃபீல் குட் ரொமான்டிக் காமெடி ஆக்சன் மூவி என்பதில் சந்தேகமே இல்லை. இங்கே வாழ்க்கையில் எல்லாமே கிடைச்சா சூப்பர் ஹீரோவாக வாழலாம் ஆனால் வாழ்க்கையில் எதுவுமே கிடைக்க வில்லை என்றால் சூப்பர் வில்லன்னாகத்தான் வாழ முடியும் அதுதான் MEGAMIND படத்துடைய CONCEPT . இந்த படம் நீங்க முதல் முறை பார்த்தால் அப்போதே நன்றாக இருக்கும், படத்தின் ஒரு சூப்பர் வில்லனாக இருந்தாலும் இந்த LOVE - ACTION - DRAMA  - எல்லாமே முடியும்போது MEGAMIND உங்களுக்கு பிடித்த கதாப்பாத்திரமாக மாறுவார். ஒரு சில பேரை மக்கள் காரணமே இல்லாமல் கொண்டாடி கதாநாயகராக மாற்றிவிடுவார்கள் இன்னொரு பக்கம் ஒரு சில பேரை ரிஜெக்ட் பண்ணி ரிஜக்ட் பண்ணி வெறுப்பாகவே நடத்துவார்கள் ஆனால் இந்த மாதிரி ஒரு மட்டமான ஆட்டிட்யூட்டை விட்டுத்தள்ளிவிட்டு எல்லோரையும் ஒரே மாதிரி பார்க்க வேண்டும் , அப்படி பார்த்தால்தான் சக மனிதர்களிடம் எப்படி அன்பாக பழகவேண்டும் என்று ஒரு நல்ல மைண்ட்ஸெட் உங்களுடைய மண்டைக்குள் உருவாகும். இதுதான் நான் புரிந்துகொண்ட கான்செப்ட். இந்த மாதிரி நிறைய கருத்துக்களை கேட்டு வருங்கால சந்ததியினருக்கு கல்வெட்டில் செதுக்கி வைக்க நோட்ஸ் எடுத்த்துக்கொள்ள வேண்டும் என்றால் நம்ம வலைப்பூவுக்கு ஃபாலோ பண்ணிக்கொள்ளுங்கள் !!!

Saturday, December 8, 2018

இது என்ன மாதிரி BGM - பின்னி எடுக்கும் AVENGERS - END GAME முன்னோட்டம் !! - திரை விமர்சனம் ! - [REGULATION-2024-00035]



AVENGERS INFINITY WAR திரைப்படத்தை அடுத்ததாக மார்வேல் சினிமா யுனிவெர்ஸ் ஃபேன்ஸ் எல்லோருமே மிக மிக  அதிகமாக எதிர்பார்த்த அவென்ஜ்ர்ஸ் இன் அடுத்த திரைப்படத்தின் ட்ரைலர் அவென்ஜ்ர்ஸ் END GAME இன்று வெளியானது . இன்னைக்கு 08- DECEMBER -2018 - பொதுவாகவே அவெஞ்சர்ஸ் படங்களின் ஃபேன்ஸ்களுக்கு தெரியும். 

இந்த அளவுக்கு மார்வேல் சினிமா யுனிவெர்ஸ்க்கு ஆதரவு கொடுத்துக்கொண்டு இருக்கிறோம் என்றால் காரணம் அவெஞ்சர்ஸ் படங்கள் நல்ல கதை அம்சத்துடன் DC படங்களை போல இல்லாமல் மிகவும் சிறப்பாக கதைகளை நகர்த்திக்கொண்டு இருக்கிறது. 

இன்பினிட்டி வார் படம் பார்த்தவர்களுக்கு கடைசி கிளைமாக்ஸ்ஸில் சூப்பர் ஹீரோக்கள் மட்டும் இல்லாமல் உலகத்தின் பாதி மக்கள் காற்றோடு காற்றாக கலந்து போகும்படி தானோஸ் மாயாஜாலம் செய்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. ஆனால் முதல் முறையாக தியேட்டர்ரில் ஒரு படம் பார்ப்பவருக்கு இந்த கிளைமாக்ஸ் அல்லது கதைக்களம் புரிய வாய்ப்பே இல்லை. 

இன்பினிட்டி வார் படம் கிளைமாக்ஸ் பார்த்தால் அடுத்து என்ன நடக்கும் , என்ன நடந்து இருக்கும் ? ஸ்பேஸ்க்கு போய் மாட்டிக்கொண்டு இருக்கும் டோனி ஸ்டார்க் உயிரோடு வர முடியுமா ? கேப்டன் அமெரிக்கா என்ன ஆனார் ? தானோஸை தோற்கடிக்க முடியுமா ? என்ற கேள்வி இப்போது இருக்கிறது. 

இந்த டிரெய்லர் பார்த்ததும் எமோஷன் ஆகி கண்களில் கண்ணீர் வந்தால் கூட ஆச்சரியம் இல்லை. அப்படி ஒரு BGM. அப்படி ஒரு CINEMA காட்சிகள். குறிப்பாக இந்த முன்னோட்டம் தானோஸ் பண்ணிய விஷயங்களை மாற்றவே முடியாது என்பது போல இருக்கிறது !! - இன்டர்நெட்டில் செக் பண்ணி பார்க்கும்போது AUDIOMACHINE - SO SAY WE ALL . என்ற இந்த BGM தான் இந்த TRAILER பின்னணியில் பயன்படுத்தி இருக்கிறார்கள். டோனி ஸ்டார்க் கத்திக்குத்து முதல் கேப்டன் கண்கலங்கியது வரைக்கும் எல்லாமே இந்த TRAILER ஐ ரொம்பவுமே எமோஷனல்லாக மாற்றியுள்ளது. !! 

ஒரு சூப்பர் ஹீரோ படத்தின் TRAILER க்கு இவ்வளவு எமோஷனல்லாக நான் FEEL பண்ணியதே இல்லை. ஐ யம் ஜஸ்ட் ஸேயிங் வாவ்  !! 




GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...