Wednesday, June 25, 2025

இன்றைக்கு தேதிக்கு ஆர்ட்டிஃப்பிஷியல் இன்டெல்லிஜென்ஸ் எழுதும் விஷயங்கள் - 1 E

கல்யாண வாழ்க்கை இனிக்க இருபது வழிகள் என்று குமுதத்தில் ஒருத்தர் எழுதினார்.  படிக்கும்போதே.... எழுதியவர் யார் என்பதை உங்களால் ஊகிக்கவா முடியாது? 

அந்த இருபதும் பின்வருமாறு..

1 கணவனோ மனைவியோ பரஸ்பரம் மற்றவரின் நண்பர்களையோ உறவினர்களையோ கிண்டல் செய்யக்கூடாது.
2 கணவன், மனைவியின் உறவினர்கள் பெயர்களைக் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
3 கணவன். மனைவியை மற்றவர்கள் முன்னால் கிண்டல் செய்யக்கூடாது.
4 எப்பவுமே ஆண்களே இப்படித்தான் என்று மனைவியும், பெண்களே இப்படித்தான் என்று கணவனும் பொதுப்படையாக பேசக்கூடாது.
5 கணவன் எதாவது முக்கியமானதைச் சொல்லும்போது மனைவி பராக்குப் பார்ப்பதோ, அடிக்கடி மணி பார்ப்பதோ, நடுநடுவே கொசு அடிப்பதோ கூடாது.
6 வீட்டில் டீத்தூள், சர்க்கரை, பனியன் போன்ற அத்யாவசியப் பொருட்கள் எங்கெங்கே இருக்கின்றன என கணவன் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
7 மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது கணவன் கவனிக்காமல் தலையாட்டிவிட்டு பின் மாட்டிக்கொள்ளக் கூடாது.
8 கணவன் மனைவியை கண்ணே, கன்னுக்குட்டி, குட்டிநாயி, செல்லப்பாப்பு என்றும் டா போட்டுக் கூப்பிடுவதையும் முதல் வருடத்துடன் நிறுத்திவிட்டால் அவன் சுயநிலைக்கு வந்துவிட்டான் என்பதை மனைவி புரிந்துகொள்ள வேண்டும்.
9 கணவன் இளவயசுக்காரர்களுடன் கிரிக்கெட் ஓட்டப்பந்தயம் போன்றவற்றை மனைவி முன்னிலையில் விளையாடக்கூடாது.
10 கணவன், மனைவியின் பர்ஸையோ, பேக்கையோ ட்ரஸிங் டேபிளையோ சோதிக்கக் கூடாது.
11 இருவரும் ஒரே சமயத்தில் கோபப்படக்கூடாது .
12 வீடு பற்றி எரிந்தால் ஒழிய கத்தக்கூடாது.
13 வாக்குவாதத்தில் இருவரில் ஒருவர் வெற்றி பெற்றே ஆகவேண்டும் எனில், வெல்வது உங்கள் துணையாக இருக்கட்டும்.
14 அன்போடு உங்கள் கருத்துக்களையோ, விமர்சனங் களையோ துணையிடம் கூறவேண்டும்.
15 கடந்தகால தப்புகளை சொல்லிக் காட்டக் கூடாது.
16 மற்றவர் முன்னிலையில் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்துப் பேசவே கூடாது.
17 தூங்கப்போகும் முன் சண்டைகளை முடித்துவிட வேண்டும். மெகா சீரியல் ரேஞ்சுக்கு இழுக்கக் கூடாது.
18 தினம் ஒருமுறை இருவரும் எதற்காகவாவது பாராட்டிக்கொள்ள வேண்டும். (இன்னைக்கு குழம்பு சூப்பர் என்பது போல).
19 தப்பு செய்துவிட்டால் அதை ஒப்புக்கொள்ளவும், மன்னிப்புக் கேட்கவும் தயாராக இருக்க வேண்டும். சமாளிக்க முயற்சிக்கக் கூடாது.
20 சண்டையில் உங்கள் இரண்டு பேரில் யார் அதிகம் பேசுகிறார்களோ அவர்கள் பேரில்தான் தப்பு இருக்கும். 

இந்த விஷயங்களை எழுதியவர் - சுஜாதா ரங்கராஜன் !


No comments:

இன்றைக்கு தேதிக்கு ஆர்ட்டிஃப்பிஷியல் இன்டெல்லிஜென்ஸ் எழுதும் விஷயங்கள் - 1 E

கல்யாண வாழ்க்கை இனிக்க இருபது வழிகள் என்று குமுதத்தில் ஒருத்தர் எழுதினார்.  படிக்கும்போதே.... எழுதியவர் யார் என்பதை உங்களால் ஊகிக்கவா முடியா...