Wednesday, January 1, 2025

ARC - 023 - மலிவாக நடந்துகொள்ளும் மனிதர்கள் !



 

ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி என்று ஒருவர் சென்று இருந்தார்! கணவன் மனைவியிடம் காபி போட்டு கொண்டுவருமாறு சொன்னான். இங்கே காபி பொடியும் இல்லை சர்க்கரையும் இல்லை அடுப்பங்கரையிலிருந்து சத்தமிட்டார். எப்போதும் உனக்கு பஞ்ச பாட்டுதான் என்று கணவன் சத்தமிட வாய் பேச்சு முற்றி மனைவியை கன்னத்தில் அறைந்துவிடுகிறான். இந்த அநியாயத்தை கேட்க ஆள் இல்லையா என்று அழ ஆரம்பித்தாள். இந்த அமளி துமளியை கண்டு சொல்லிக்கொள்ளாமல் வெளியேறினார் விருந்தாளி. அவர் வெளியேறிவிட்டதும் கணவரும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சத்தம் போட்டு சிரித்தனர், கணவனும் மனைவியும் எப்படி இருந்தது என் நடிப்பு. அடிப்பது போல் அடித்தேனே. என்றான் கணவன். ஆஹா. அழுவது போல் அழுதேனே. எப்படி இருந்தது. என் நடிப்பு.”என்றாள் மனைவி பிராமாதம் ! என்றான் கணவன். பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது, நானும் போவதுபோல் போய்விட்டு திரும்பி விட்டேன். என்றார் வந்த விருந்தாளி. காசு செலவு பண்ணாமல் கஞ்சமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக கஞ்சமாக இருப்பதில் இருந்து சாகும் வரைக்குமே திருந்த மாட்டார்கள். இவர்கள் இருப்பதே வேஸ்ட் என்றுதான் இருக்கும். இருந்தாலும் கஞ்சமாக இருப்பதையே ஒரு இலட்சியமாக வைத்து இருக்கும் குடும்பங்கள் குறிப்பாக கணவன்-மனைவியை கூட அவ்வப்போது பார்க்க முடிகிறது./   ஒரு முறை கணவனும் மனைவியும் பயங்கர சண்டை போட்டார்கள் அப்புறம் நாள் முழுக்க இருவரும் பேசவே இல்லை. மனைவியால் பொறுக்க முடியல. கணவன் கிட்ட இப்படி பேசாம இருக்கிறது இனிமேலும் சரி இல்லை. ரெண்டு பேரும் விட்டுக் கொடுத்து ஆளுக்கொரு நல்ல காரியம் செஞ்சா சமாதானமாப் போயிடலாம் என்றதும் ரொம்ப நல்லது. என்ன செய்யலாம் சொல்லு என்று கணவர் கேட்கவே மனைவி நீங்க பெரிய மனசு பண்ணி செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேளுங்க. நானும் உங்களை பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்டுடறேன் என்றாளாம். விருப்பு வெறுப்பு இல்லாமல் நாசூக்காக விஷயங்களை பேசும் நுணுக்கம் இத்தகைய தம்பதிகளிடம் இருந்தாலும் இவர்களின் மலிவான நடந்துகொள்ளும் விதம் கடுப்பைதான் வரவைக்கிறது. 

ARC - 022 - தேவையற்ற சவால்களை விடக்கூடாது


ஒரு பெரிய இசை வித்தகர் இருந்தார். அவர் வயலினை எடுத்து வாசித்தால். பாலைவனத்தில்கூட மழை பெய்யும். ஒரு முறை அவர் ஒரு சர்க்கஸ் கூடாரத்துக்குப் போயிருந்தார். அங்கே ஒரு சர்க்கஸ் கலைஞர் வயலின் வாசிக்க, கரடி டான்ஸ் ஆடியது, சர்க்கஸ் பார்க்க வந்திருந்தவர்கள் ஒட்டு மொத்தமாக எழுப்பிய கரகோக்ஷம் கூடாரத்தையே அதிர வைத்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த நமது வயலின் வித்தகர். அந்த சர்க்கஸ் கலைஞரை அணுகி. நன்கு பழக்கப்பட்ட கரடியை மட்டும்தான் உன் வயலின் இசைக்கு ஏற்ப உன்னால் டான்ஸ் ஆட வைக்க முடியும். ஆனால், என் வயலின் இசை. எந்த மிருகத்தையும் நடனமாட வைக்கும் என்று கூறினார். சர்க்கஸ் கலைஞர் அதைப் பேத்தல் என்று மறுக்க இருவருக்கும் இடையே பேச்சு வளர்ந்து, அங்கே ஒரு போட்டியே ஆரம்பமானது. வயலின் வித்வானின் எதிரில் சர்க்கஸ் கலைஞர், முதலில் ஒரு சிங்கத்தை அனுப்பினார். வித்வானின் வயலின் இசை கேட்டுச் சிங்கம் சுற்றிச் சுழன்று ஆடத் தொடங்கியது. சர்க்கஸ் கலைஞர், அடுத்த ஒரு சிறுத்தையை அனுப்பினார். அதுவும் வித்வானின் வயலின் இசைக்குத் தன்னை மறந்து ஆடியது. சர்க்கஸ் கலைஞர் அடுத்து ஒரு புலியை அனுப்பினார் வயலின் வித்வான் சற்றும் பதறhமல் வயலினை வாசிக்கத் தொடங்கினார். ஆனால், அந்தப் பாழும் புலி, வயலின் இசைக்கு மயங்கவில்லை, மாறாக அது வித்வானை நோக்கி ரத்த வெறியோடு நாலு கால் பாய்ச்சலில் ஓடி வந்தது, பதறிப்போன பார்வையாளர்கள் கூட்டம் சிதறி ஓடியது. நமது வித்வானும் தனது வயலினைக் காற்றிலே வீசிவிட்டு கடைசி நிமிடத்தில் தலைதெறிக்க ஓடி, அதிர்ஷ்டவசமாக அந்தப் புலியிடம் இருந்து தப்பித்துக் கொண்டார். புலி, பயிற்சியாளர்களால் சாமார்த்தியமாக மீண்டும் கூண்டில் அடைக்கப்பட்டது, மரண பயத்திலிருந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட வயலின் வித்வான், சர்க்கஸ் கலைஞரிடம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார் என்றாலும், தனது இசை அந்தப் புலியைக் கட்டுப் படுத்தாது தனக்குப் பெரிய புதிராகவே இருப்பதாக அவர் சொல்ல சர்க்கஸ் கலைஞர் சிரித்தபடியே கூறினார். காரணம் ரொம்ப எளிமையானது, அது செவிட்டுப் புலி அதுமட்டுமல்ல, பிறவியிலேயே அதற்குக் காது துவாரமும். ஏன், காது மடல்களே கூடக் கிடையாது. வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் கூட புலிக்குக் காது இல்லை என்பதைச் சில விநாடிகளுக்குள் கவனித்து தப்பிக்க முயன்று ஓடியது. ஆனால், உங்கள் வாசிப்பின் மீது வைத்த அபார நம்பிக்கையால், நீங்கள் கடைசி நிமிடம் வரை கண் திறந்து புலியைச் சரியாகப் பார்க்கத் தவறிவிட்டீர்கள் என்றார். தேவையே இல்லாமல் சவால்களை சந்திக்க முற்பட கூடாது. 


ARC - 021 - இவர்களிடம் தெளிவாக பேச நினைப்பதும் தப்பானது


அந்த சலவைத் தொழிலாளியிடம் இரண்டு கழுதைகள் இருந்தன. அவை இரண்டும் ஒரு நாள் மிகவும் வருத்தத்துடன் பேசிக் கொண்டன. “நாம் சுமந்து வரும் அழுக்கு துணிகள் மட்டும் சலவை செய்ததும் அழுக்கெல்லாம் போய் வெண்மையாக தெரிகின்றதே! ஆனால், நாம் மட்டும் ஏன் அந்த துணிகளைப் போன்று வெண்மையாக மாற முடியவில்லை?” என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டன . அந்தப் பக்கமாக வந்த ஆடு கழுதைகளின் பேச்சை ஒட்டுக் கேட்டுவிட்டது. கழுதைகளின் முட்டாள்தனமான பேச்சை கேட்டு அந்த ஆட்டிற்கு சிரிப்பே வந்துவிட்டது. “கழுதைகளே! நலம்தானா? நீங்கள் இருவரும் உங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசுவதுபோல் தெரிகின்றதே…” என்று அவர்கள் வாயை கிளறியது. “ஆடே! ஆடே நலம்தானே? எங்கள் சந்தேகத்தை தீர்க்க யாரும் வரவில்லையே என்று நினைத்தோம். நல்ல வேளை நீ வந்திருக்கிறாய்! ” என்றவாறு கழுதைகள் இரண்டும் ஆட்டை நோக்கின. கழுதைகளே! நீங்கள் பேசிக் கொண்டிருந்ததை நானும் அறிவேன். உங்கள் சந்தேகம் என்னவென்று எனக்குப் புரிந்துவிட்டது. முட்டாள்தனமான உங்கள் சந்தேகத்தை எப்படிப் போக்குவதென்று எனக்குத் தெரியவில்லை…” என்று கூறியது ஆடு. இதைக் கேட்ட கழுதைகளுக்கு கோபம் வந்துவிட்டது. “ஆடே எங்களைப் பார்த்து முட்டாள்கள் என்று கூறுகிறாயா? எங்கள் சந்தேகத்திற்கு உன்னால் விடை கூற முடிந்தால் கூறு… இல்லையேல் இந்த இடத்தை விட்டு ஓடு… அதை விட்டு விட்டு முட்டாள்தனமான சந்தேகம் எனக் கூறி எங்களை இன்சல்ட் பண்ணாதே, ” என்று கோபமாக கூறின “கழுதைகளே! நீங்கள் என் மீது ஏன் இப்படி கோபப்படுகிறீர்கள்? துணிகளும் நீங்களும் ஒன்றா? அப்படியிருக்க முட்டாள்தனமான உங்கள் கேள்விக்கு என்னால் எப்படி பதில் கூற முடியும்? அப்படியே நான் பதில் கூறினால் நானும் உங்களோடு சேர்ந்து முட்டாளாகி விடுவேன், ” என்று கூறியது. கழுதைகள் இரண்டும் பொறுமை இழந்தன. தங்களின் ஆத்திரத்தை எல்லாம் ஒன்று திரட்டி தங்கள் கால்களால் ஆட்டை எட்டி உதைத்தன. கழுதைகள் இரண்டும் உதைத்த வேகத்தில் ஆடு எங்கோ சென்று விழுந்தது. வலி தாங்காமல் நொண்டி நொண்டி நடந்து சென்றது.

ARC - 020 - மனசாட்சியற்ற மனிதர்களும் இருக்கிறார்கள் !

 



ஒரு ஆட்டுக்குட்டி ஓடிவரும் ஆற்றின் சரிவுப் பகுதியில் நீர் அருந்திக் கொண்டிருந்தது. மேல் பகுதியில் நீர் குடிக்க வந்தது ஒரு ஓநாய். ஓநாயை, ஆட்டுக்குட்டி பார்க்கவில்லை. அதைத்தான் இரையாக்கிக் கொள்ளத் தீர்மானித்தது ஓநாய். "ஏன் இப்படித் தண்ணீரைக் கலக்குகிறாய்?” என்று கேட்டது ஓநாய். அப்போது தான் ஓநாயைப் பார்த்த ஆட்டுக்குட்டி பயத்துடன் தண்ணீர் குடிப்பதை நிறுத்தியது. "நான் எப்படி நீரைக் கலக்க முடியும்? தாங்கள் குடித்த மீதி தானே கீழ்ப்புறம் வரும்! ” என்று மெல்லிய குரலில் கேட்டது. "கேள்விக்கு பதில் பேசுமளவுக்குத் திமிராகி விட்டதா? நீ கலக்காவிடில் உங்கப்பன் கலக்கியிருப்பான்! உங்கப்பன் கலக்கா விட்டால், உன் பாட்டன் கலக்கியிருப்பான். உங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது! ” என்றபடி ஓட முயன்ற ஆட்டுக்குட்டி மேல் பாய்ந்து அதை இரையாக்கிக் கொண்டது. இந்த மாதிரியாக பாவம் பண்ணும் துஷ்டர்களிடம் எந்த நியாயமும் எடுபடாது. மவுனமாக ஒதுங்கிச் செல்வதே நன்மை தரும். காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எப்படியும் பேசுவர். அவர்களிடம் எல்லாம் வாய் பேசாமல் செல்வதே நலம். இப்போது இந்த சம்பவத்தை கவனித்தால் மனதுக்கு மிகவும் தெளிவாக தோன்றுவது கேஸ்ட் வகையில் பிரிவினைதான். உயர் பிறப்புகள் கஷ்டப்படும் மக்களை இன்னுமே கஷ்டப்படுத்ததான் பார்க்கிறார்கள். இந்த விஷயங்கள் எப்போது மாறப்போகிறது. மனிதத்தன்மை எப்போது துளிர்க்கப்போகிறது ? செருப்பு போட கூடாது என்று சொல்லும் தப்பான கிராமத்து ஆட்கள் எல்லாம் இன்னுமே இருக்கிறார்கள். சின்ன வயதில் இருந்து இந்த விஷம் இவர்களுக்குள்ளே ஊறிவிட்டது. இவர்களை சரிபண்ண முடியாது. புதிய தலைமுறைதான் அடுத்தவர்களை கஷ்டப்படுத்தி சொகுசு வாழ்க்கையை வாழ நினைக்கும் இவர்களுடைய மாற்ற வேண்டும். இல்லையென்றால் இந்த கோபத்துக்கு கண்டிப்பாக ஒரு விடியல் இருக்கும். 

ARC - 019 - மனதுதான் ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம்


ஒரு மடாலயம். அந்த மடாலயத்தின் தலைமை துறவியாக இருந்தவர், மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவரிடம் பலரும் துன்பங்களை கடக்கும் வழி உள்ளிட்ட பலவற்றை அறிந்துகொள்வதற்காக வருவார்கள். அன்றும் அவரைப் பார்க்க ஒரு வியாபாரி வந்திருந்தார். அவர் அந்த துறவியிடம், “சுவாமி. என்னுடைய மனம் என்னுடைய பேச்சைக் கேட்பதே இல்லை. அதை நான் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் அதற்கு பலன் கிடைப்பதில்லை” என்று கூறி அங்கலாய்த்துக் கொண்டார். அப்போது துறவியின் அருகில் அவர் வளர்த்து வந்த குரங்கு ஒன்று வந்தது. வியாபாரிக்கு உணவளிக்க விரும்பிய துறவி, தன் காலடியில் இருந்த ஒரு கம்பை எடுத்து, குரங்கின் தலையில் ஒரு அடி அடித்து விட்டு, “வந்திருப்பவர்களுக்கு இலை போடு” என்றார். குரங்கு வாழை இலையை எடுத்து வந்து போட்டது. துறவி மீண்டும் தன் கையில் இருந்த கம்பால் குரங்கின் தலையில் அடித்து விட்டு “சாப்பாடு எடுத்து பரிமாறு” என்றார். குரங்கு சாப்பாடு எடுத்து வந்து பரிமாறியது. அதன்பிறகும் அந்த குரங்கின் தலையில் ஒரு அடி வைத்தார், துறவி. இப்போது வியாபாரிக்கு வருத்தமாக இருந்தது. துறவியிடம், “சுவாமி. நீங்கள் சொல்வதை எல்லாம் அந்தக் குரங்கு செய்துகொண்டுதானே இருக்கிறது. பிறகு எதற்காக அதை அடித்துக்கொண்டே இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். ஆனால் அதற்கு துறவி எந்த பதிலும் சொல்லவில்லை. சற்றே புன்னகைத்துவிட்டு, தன் கையில் இருந்த சிறிய கம்பை, தான் அமர்ந்திருந்த இருக்கையின் கீழ் ஒளித்து வைத்தார். சற்று நேரம் அமைதியாக இருந்த குரங்கு, இப்போது அங்கும் இங்கும் தாவியது, வியாபாரி சாப்பிட்டுக் கொண்டிருந்த இலையில், தன்னுடைய வாலை விட்டு ஆட்டியது. வியாபாரியின் தோளில் அமர்ந்து கொண்டு அவரது காதைப் பிடித்து திருகியது. சாப்பிட்டுக் கொண்டிருந்த இலையை இரண்டாக கிழித்துப் போட்டது. அதன் சேட்டையைப் பொறுக்க முடியாத வியாபாரி, “சுவாமி. இந்தக் குரங்கின் தொல்லை தாங்க முடியவில்லை. அடி போடுங்கள்” என்றார். உடனே துறவி, தான் மறைத்து வைத்திருந்த கம்பை எடுத்து குரங்கின் தலையில் அடித்தார். அதுபோய் ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்து கொண்டது. இப்போது துறவி சொன்னார். “இந்தக் குரங்கைப் போலத்தான் மனித மனங்களும். “நாம் சொன்னதை எல்லாம் மனம் கேட்டு நடக்கின்றதே” என்று விட்டு விடக் கூடாது. ஆன்மிகம் எனும் ஆயுதத்தை வைத்து மனதை அடக்க வேண்டும். சற்று ஓய்வு கொடுத்தாலும் மனிதனின் மனம் தாவத் தொடங்கி விடும்” என்றார் துறவி. அதைக்கேட்டு வியாபாரி மனம் தெளிந்து புறப்பட்டார். பொதுவாக உடல் ஒரு லேப்டாப் என்றால் மனது ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று புரிந்துகொள்ளுங்கள். ஆப்பரேட்டிங் சிஸ்டம்மை கஷ்டப்படுத்த வேண்டாம் என்றால் லேப்டாப்பை எதுக்காக வாங்க வேண்டும் ! கப்பல் என்று இருந்தால் கடலில் இறக்கிதான் ஆகவேண்டும். மனது என்று இருந்தால் கஷ்டப்படுத்திதான் ஆகவேண்டும். மனதை வருத்திக்கொள்ள முடியவில்லை என்றால் ஒரு சென்டிமீட்டர் கூட முன்னேற முடியாது இல்லையா ?

ARC - 018 - கடினமான வார்த்தைகள் எப்போதுமே பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது.

 


கடினமான வார்த்தைகள் தப்பான விஷயம் கிடையாது. ஒரு நாள் பசியோடு ஓட்டலுக்குள் நுழைந்தேன். “இதோ பார்… நாளையிலிருந்து இந்த அழுக்கு பேன்ட்டெல்லாம் போட்டுட்டு வரக்கூடாது… பளிச்னு சுத்தமா இருக்கணும்” என்று இளம் வயது சர்வரை எச்சரித்துக்கொண்டு இருந்தார் முதலாளி. தலையாட்டிவிட்டு என்னிடம் வந்தவன், “என்ன சாப்பிடறீங்க?” என்றான். பின்னாலேயே வந்த முதலாளி, “வர்றவங்களுக்கு முதல்ல வணக்கம் சொல்லுடா” என்று கோபப்பட்டார். இட்லி, சாம்பார் கொண்டுவரச் சொன்னேன். வரும் வழியில் இன்னொரு சர்வர் மேல் மோதி, சாம்பார் கிண்ணம் கீழே விழுந்தது. “கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு… இப்படி மேலும் கீழுமா கொட்டினா, லாபம் எங்கிருந்து வரும்?” மறுபடி முதலாளி எரிந்து விழுந்தார். இட்லி சாப்பிட்டதும், “அவ்வளவுதானே சார்?” என்றான் சர்வர். “டேய்… அறிவு கெட்டவனே! இன்னும் என்ன சாப்பிடறீங்கன்னு கேளுடா! ” என்று அவன் தலையில் குட்டினார். எனக்குப் பரிதாபமாய் இருந்தது. சாப்பிட்டு முடித்து பில்லுக்குப் பணம் தரும்போது முதலாளியிடம் கேட்டேன். “ஏங்க… வறுமை தாங்க முடியாம பொழைக்க வந்தவன்கிட்ட இப்படியா கடுமையா நடந்துக்கறது?” முதலாளி சிரித்தபடி சொன்னார்… “சார்! இவன் என் பையன். தனியா ஓட்டல் ஆரம்பிக்கணும்னு ஆசைப்பட்டான். அதான் நெளிவு சுளிவை எல்லாம் கத்துக்கொடுக்கறேன்…” பையனும் சிரித்தான். பொதுவாக வேலை என்பது வேறு தொழில் என்பது வேறானது. தொழிலில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கும். உங்களுடைய கம்ஃபோர்ட் ஜோனை 100 சதவீதம் தாரை வார்த்தால் மட்டும்தான் உங்களால் தொழிலில் ஜெயிக்க முடியும். உங்களுடைய நேரத்தை உங்களுடைய செயல்களை  புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும். 

ARC - 017 - மனித தன்மை எப்போதும் மேலானது !

 



ஒரு குடும்பத்தில் தந்தை இறந்து போனார். வயதுக்கு வந்த மகன் குடும்பப் பொறுப்பு ஏற்றான். கொஞ்சம் மாதங்களில் வேலைக்கு செல்லவும் சம்பாதிக்கவும் தொடங்கினான். ஒரு நாள் அப்பா இறந்த பிறகு அவரது டைரியில் இருந்த குறிப்பு ஒன்று சற்றே அதிர்ச்சி தந்தது. அதில் நெருக்கமான நண்பரிடம் ஒரு லட்சம் கடனாக வாங்கியிருப்பதைத் தந்தை குறிப்பிட்டிருந்தார். அவர் கடன் வாங்கிய விபரம் குடுபத்தில் யாருக்கும் தெரியவில்லை.  இறப்பின் போதும், இறப்புக்கு  பிறகும் கடன் கொடுத்த அந்த அப்பாவின் நண்பரை வேறு வேறு இடங்களில் சந்தித்து விட்டான். அவரும் இவனிடம் நலம் விசாரித்ததோடு சரி. அவனது அப்பாவிடம் வழங்கியிருந்த கடன் குறித்து பேசாதது ஆச்சரியம் தந்தது. எனவே தந்தையின் நண்பரைத் தேடிச்சென்றான், சந்தித்தான், விவரம் சொன்னான். அவர் மெதுவாகச் சொன்னார்,"உங்க அப்பா எனக்குப் பல நேரங்களில் உதவியிருக்கிறார். அவர் ஒரு சமயத்துல உங்க அம்மா உடல் நலம் பாதிக்கப்பட்டபோது கேட்டார். கொடுத்தேன். அதுக்கு எந்த ஆதாரமும் என்னிடம் இல்லை. திடீர்னு உங்கப்பா இறந்துட்டார். இந்த நிலையில் எந்த ஆதாரமும் இல்லாம, உங்கப்பா எங்கிட்ட கடன் வாங்கியிருக்காருன்னு கேட்குற மனம் எனக்கு வரல. அதுக்கு முக்கிய காரணம், கடன் வாங்கும்போதே இது வீட்டிற்குத் தெரிய வேண்டாம்ன்னு சொன்னார். அவர் இறந்த பிறகும் அவர் வார்த்தைக்கு மதிப்பளிப்பதுதான் நியாயம்னு பட்டது. அதனால நானும் அதை விட்டுட்டேன்" என்றார். "எங்கப்பா கையெழுத்துப் போட்டு கடன் வாங்கலேனாலும் அதைத் திரும்பக் கொடுக்குறது தான் அவரோட மகனுக்கு அடையாளமாக இருக்கும் என்ற மகன், கையோடு கொண்டு சென்றிருந்த பணத்தைத் திரும்பக் கொடுத்தான் நண்பர் நெகிழ்ந்தார். பண்பும் செயலும்தான் ஒருவனை உயர்த்தும். மதமோ சாதியோ, வசதியோ அல்ல. இந்தச் சம்பவத்தில் இரண்டு நல்லவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்.  நல்லவர்களுக்கு எழுத்து தேவையில்லை. கெட்டவர்களுக்கு எழுதியும் பயனில்லை என்று. கண்ணுக்கு தெரியாமல் இன்னொருவருக்கு சொல்லப்படாமல் உதவி பண்ணும் நல்ல மனங்கள் இந்த உலகத்தில் இருப்பதால்தான் இந்த உலகத்தில் மனித தன்மை இன்னும் நிலைக்கிறது.  மனித தன்மை எப்போதும் மேலானது !

ARC - 016 - பொதுவாக ஆதரவு கேட்பது பலவீனம் அல்ல !



அது ஒரு காடு. ஒரு தந்தையும் அவரது மகனும் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். மகனுக்கு பள்ளி விடுமுறைக் காலம். அதோடு அவன் ஒரு சாகச விரும்பி என்பதால், காட்டுக்குள் ஒரு வன வலம் போய் வரலாம் என்று அப்பா அவனை அழைத்து வந்திருந்தார். மரங்கள், பூச்சிகள், விலங்குகள், பறவைகள். எனப் பார்க்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் அவன் கேள்வி கேட்டான். அப்பா, பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு வந்தார். சில கேள்விகளுக்குப் பதில் தெரியாதபோது, தெரியாது” என்று உண்மையை ஒப்புக்கொண்டார். காடு அந்தச் சிறுவனுக்கு அதிசயமாக இருந்தது. சதா வீட்டிலும் பள்ளியிலும் மைதானத்திலும் நகர்ந்துகொண்டிருந்த வாழ்க்கை, இந்தக் காட்டுக்கு முன்னால் ஒன்றுமே இல்லை என்று தோன்றியது. இதைச் சொன்னபோது, தந்தை சிரித்தார். நாம நகரத்துலதானே வாழவேண்டியிருக்கு கண்ணு! ” என்று சொன்னார். இருவரும் நடந்தார்கள். வழியில் ஒரு பெரிய மரக்கட்டை கிடந்தது. அப்பா, மகனைப் பார்த்தார். அவனும் அவரைப் பார்த்தான். “ஏம்ப்பா. இந்த மரக்கட்டை போற வர்றவங்களுக்கு இடைஞ்சல்தானே?” என்று கேட்டான். “நடந்து போறவங்களுக்கு பிரச்சனையில்லை. இதைச் சுத்திக்கிட்டு போயிடலாம். வாகனங்கள் ஏதாவது வந்தால்தான் கஷ்டம். ” “வாகனங்கள் இந்தப் பக்கம் வருமா என்ன?” “வருமே. வனத்துறையைச் சேர்ந்தவங்களோட ஜீப், டிரக்கெல்லாம் வரும். ” “சரிப்பா. அப்படின்னா, நான் வேணும்னா இந்த மரக்கட்டையை நகர்த்திப் போடட்டுமா?” “ம். முயற்சி செய்யேன். ” “என்னால இந்தக் கட்டையை நகர்த்திட முடியும்னு நீங்க நினைக்கிறீங்களாப்பா?” “உன்னுடைய எல்லா ஆற்றலையும் பயன்படுத்தினா உன்னால முடியும். ” சிறுவன் தன்னுடைய தோள் பையைக் கீழே வைத்தான். அந்தக் கட்டையைக் கையைக் கொடுத்து மெள்ள அசைத்துப் பார்த்தான். பிறகு தன் பலத்தையெல்லாம் திரட்டி அதை நகர்த்த முயன்றான். அதை அசைக்கவே அவனால் முடியவில்லை. ஏமாற்றத்தோடு அவன் சொன்னான். “அப்பா நீங்க சொன்னது தப்பு. என்னால இதை அசைக்கவே முடியலை. ” “மறுபடியும் முயற்சி செஞ்சு பாரேன். ” என்று பதிலுக்குச் சொன்னார் தந்தை. மறுபடியும் அந்தச் சிறுவன் மரக்கட்டையை நகர்த்தப் பார்த்தான். எவ்வளவு முயன்றும் அவனால் அதை நகர்த்த முடியவில்லை. ”என்னால முடியலைப்பா” என்று பலவீனமான குரலில் சொன்னான். அப்பா கடைசியாகச் சொன்னார். “மகனே நான் உன்கிட்ட என்ன சொன்னேன்? “உன்னுடைய எல்லா ஆற்றலையும் பயன்படுத்து”னு சொன்னேன் இல்லையா? நீ அதைச் செய்யலை. நீ என்னை உதவிக்குக் கூப்பிடவே இல்லை.  நமக்குத் தேவைப்படும்போது பிறரின் உதவியையோ, ஆதரவையோ கேட்பது பலவீனத்தின் அடையாளமல்ல. ஞானத்தின் அடையாளம். ஒருவரையொருவர் சார்ந்து வாழும் இந்தக் கூட்டு வாழ்க்கையில் மிகப் பெரிய ஆற்றலைப் பெறுவதற்கான அழைப்பு அது. அது எந்த வேலையாகவும் இருக்கட்டும். அதை உங்களால் மட்டும் முடிக்க முடியவில்லையா. உங்களுடைய எல்லா ஆற்றலையும் பயன்படுத்துங்கள். திரும்பிப் பார்த்து, சத்தமாக ஆதரவு, உதவி கேளுங்கள்

ARC - 015 - கண்மூடித்தனமாக விதிகளை பின்பற்றும் முட்டாள்கள்


ஒரு அரண்மனையில் அரசியின் நகை ஒன்று காணாமல் போனது. குறிப்பிட்ட நாட்களுக்குள் கண்டு பிடித்துக் கொடுத்தால்தக்க பரிசு வழங்கப்படும் என்றும் அதன்பின் யாரிடமாவது இருப்பது தெரிய வந்தால் மரண தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்றும் மன்னனால் அறிவிக்கப்பட்டது. ஞானி ஒருவர் அந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். வழியில் ஒரு நகை கிடை ப்பதைப் பார்த்து எடுத்தார். அது பற்றி விசாரித்தபோது அது அரசியின் நகை என்பதும் அது குறித்த அறிவிப்பு பற்றியும் அறிந்தார். மன்னன் பரிசு கொடுக்க தீர்மானித்த நாளுக்கு முன்னரே ஞானியின் கையில் நகை கிடைத்து விட்டது. ஆனால் அவர் உடனே கொண்டு போய் கொடுக்காமல் அந்த நாள் கடந்ததும் மன்னனிடம் கொண்டு போய்க் கொடுத்தார். இந்த மன்னன் முழு விபரமும் கேட்டுத் தெரிந்து கொண்டு,”நீங்கள் கிடைத்த உடனே கொடுத்திருந்தால் பரிசு கிடைத்திருக்கும். இப்போது உங்களுக்கு மரண தண்டனை அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை,” என்றான். தாமதத்திற்குக் காரணமும் கேட்டான். ஞானி சொன்னார்,”நகை கிடைத்ததும் நான் வந்து கொடுத்திருந்தால் நான் பரிசுக்கு ஆசைப்பட்டவன் என்று பொருள். உண்மையில் எனக்கு எந்தப் பரிசின் மீதும் நாட்டமில்லை. மரண தண்டனை கிடைக்கும் என்று அஞ்சி நான் கொடுக்காமலே வைத்திருந்தால் நான் சாவுக்கு அஞ்சுவதாகப் பொருள். எனக்கு மரணம் பற்றிய அச்சம் இல்லை. நகையை அப்படியே வைத்துக் கொண்டால் அடுத்தவர் உடைமைக்கு நான் ஆசைப்பட்டவன் என்று பொருள். எனக்கு எந்தப் பொருளின் மீதும் ஆசை இல்லை. அதனால் இப்போது கொண்டு வந்து கொடுத்தேன். மன்னன், “இப்போது உங்களுக்கு மரண தண்டனை கிடைக்குமே?”என்று கேட்டான். ஞானி,”தர்ம வழியில் நடக்கும் ஒருவனை தண்டிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை,”என்று சொல்லியவாறு கம்பீரமாக அங்கிருந்து நடந்தார். மன்னன் வணங்கி விடை கொடுத்தான். சரியான விஷயத்தை செய்யும்போது மனதுக்குள்ளே பயமே இருக்க கூடாது. இன்னொரு முக்கியமான விஷயம் குறைந்தபட்ச மனித தன்மை கூட பார்க்காமல் லூசுத்தனமாக ஒரு உதவி பண்ணும் மனிதனின் உயிரையே எடுக்கும் இந்த அரசன் போன்ற ஆட்களுக்கு , தனக்கான விதிகளை நிறைவேற்ற தங்களுடைய சுய நலத்துக்காக இப்படி தண்டனை கொடுத்து வேலை பார்க்கும் ஆட்களுக்கு உதவி பண்ணுவதே பெரிய தவறாக கருதப்படுகிறது. புரிந்துகொள்ளுங்கள் ! - இது முக்கியமான கான்செப்ட் !


GENERAL TALKS - ஆபத்தான ஆட்களிடம் அளவோடு பழக வேண்டும் !



ஒரு காட்டிலே ஒரு வேடன் மாலை வேளையில் வலை விரித்துச் செல்வான். இரவு அதிலே சிக்கும் விலங்கினை தன் வேட்டைப் பொருளாக மறுநாள் காலையிலே எடுத்துச் செல்வான் அப்படி அவன் ஒரு நாள் விரித்த வலையில் ஒரு பூனை சிக்கியது. காலையிலே அந்தப் பக்கம் வந்த எலி ஒன்று பூனை வலையிலே சிக்கியிருப்பதை பார்த்து ஆனந்தம் கொண்டது. “அப்பாடா பூனை சிக்கிச்சி. வேடன் வந்து இந்தப் பூனையைக் கொண்டு செல்வான். நாம இனிமே சுதந்திரமா இருக்கலாம் “ என நினைத்த எலி சந்தோஷ ஆட்டம் போட்டது. அப்போது அந்த எலியைப் பிடித்துவிடும் நோக்கில் ஒரு கீரி பாய்ந்து வந்த்து. ஒரு கோட்டானும் வானில் இருந்து எலியைக் குறிவைத்துப் பறந்து வந்தது. பூனைத் தொந்தரவு இருக்காது என்ற எலியின் ஆனந்தம் நொடி நேரம் தான் நிலைத்திருந்தது. ஓடி சென்று வளையில் ஒளிந்தது. அங்கிருந்த படி பூனையிடம் பேசியது. ”பூனையாரே! நான் உங்களை இந்த வலையின் பிடியிலிருந்து விடுவிக்க தயார். ஆனால் அதற்காக நான் உங்கள் அருகில் வந்த்தும் நீங்கள் என்னை லபக்கென கடிக்கக் கூடாது” எலியின் இந்த யோசனை அதன் பயத்தின் காரணமானது. அதற்கு, பூனை, கீரி, கோட்டான் என மூன்று விரோதிகளை ஒரே நேரத்தில் எதிர் கொள்ள் சக்தி இல்லை.  எதிரியில் ஒருவர் இப்போது ஆபத்தில் இருக்கிறார். அவருடன் நாம் தற்காலிக நட்பு கொண்டு அவரை விடுவித்து அதன் மூலம் தானும் மற்ற இரண்டு எதிரிகளிடமிருந்து தப்ப ஒரு வாய்ப்பு. இப்படியான சிந்தனை எலியுடையது. எலியின் யோசனையினைப் பூனை ஏற்றது. எலி வேகமாக வலையிலிருந்து ஓடி வந்து பூனையின் மடியில் படுத்தவாறு வலையினை தன் கூர்மையான பல்லால் கடித்து வலையினை அறுக்கத் தொடங்கியது. எலி இப்போது பூனையுடன் நட்பு கொண்டது கண்ட கீரியும், கோட்டானும் அங்கிருந்து விலகின. பூனை எலியிடம், “என்னப்பா இத்தனை மெதுவாக கடிக்கிறாய். வேடன் வருவதற்குள் நான் தப்ப வேண்டாமா“ என்றது “நான் காரணமாகத்தான் மெதுவாக செய்கிறேன். அதோ தெரிகிறதே ஒரு ஒற்றையடிப்பாதை அது வழிதான் வேடன் வருவான். அவன் தொலைவில் வரும் போதே இங்கிருந்து பார்த்துவிடலாம். அவன் வருவதற்கு முன்பே நான் இந்த வலையினை முழுவதும் கடித்து உன்னை விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடமாட்டாய் என்பது என்ன நிச்சயம். வேடன் வந்தபின் அவன் வலையிலே நீ சிக்கியிருப்பதைப் பார்ப்பான். உடனே விரைந்து இந்த இட்த்தை அடைய வேகம் கூட்டுவான். நான் அந்த சமயம் பார்த்து உன்னை முழுவதும் விடுவித்தால் உன் கவனம் அவனிடமிருந்து எப்படியாவது தப்ப வேண்டும் என்பதில் இருக்கும். என்னைக் கடித்து விழுங்க வேண்டும் என்ற எண்ணம் உனக்கு அப்போது வராது” அதே போல் தூரத்தில் வேடன் தலை தெரிந்த்து. அவனும் வலையிலே பூனை சிக்கியிருப்பதைப் பார்த்துவிட்டான். நடையிலே வேகம் கூட்டினான், எலியும் தன் கடிக்கும் வேகத்தை அதிகப்படுத்தியது. டக்கென வலை முழுமையாக அறுந்த்து. பூனையும் எலியும் வேடனிடம் பிடிபடாமல் ஓடினர். நெடுந்தூரம் ஓடிக் களைத்தனர். ஓர் ஆற்றங்கரையில் நின்றனர். பூனை எலியினை நன்றிப் பெருக்குடன் பார்த்து, ”தக்க சமயத்தில் என்னைக் காத்தாய். நான் இனி உன் நண்பன். என் பூனை இனமே உன்னை ஒன்றும் செய்யாது. வா இருவரும் இணைந்தே இந்தக் காட்டிலே வாழலாம்” என்றது. ”இதோ பாரப்பா. கீரியிடமிருந்தும் கோட்டானிடமிருந்தும் தப்பிக்கவே உன்னிடம் வந்தேன். நாம் நட்பு கொள்வதென்பது இயற்கையாகாது. காரணம் என் இனம் உன் இனத்தின் உணவு. அது தான் இயற்கை. அதை உன்னால் மாற்ற முடியாது. அது போல உன் பூனை இனமே என்னை நட்பாக ஏற்கும் என்பது சாத்தியமில்லாத விஷயம். அப்படி உன் இனம் சார்பாக ஒரு உத்திரவாத்த்தினை நீ எப்படித் தரமுடியும். நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள உன்னிடம் வந்தேன். நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ள என் உதவியை ஒப்புக் கொண்டாய். இது அவ்வளவு தான். ” எனச் சொல்லி வேகமாக ஓடி மறைந்தது. இதுதான் அளந்து பழகுவது என்று சொல்வார்கள். குறிப்பாக ஆபத்தான மனிதர்களிடம் அளந்துதான் பழகவேண்டும். இவர்களிடம் அளவுக்கு மீறி பழகினால் கண்டிப்பாக நம்பிக்கை துரோகம் செய்வார்கள். 

ARC - 014 - மனதின் ஞானமும் காலத்தின் நுணுக்கமும்

 


ஒரு ஊரில் ஞானம் பெற்ற ஞானி ஒருவர் ஒரு மாலை வேளையில் ஒரு கிராமத்துப் பக்கம் சென்று கொண்டிருந்தார். ஒரு குழந்தை எரிந்து கொண்டிருந்த கை விளக்கோடு கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது. அந்த ஞானி குழந்தையை நிறுத்திக் கேட்டார்,”இந்த விளக்கின் ஒளி எங்கிருந்து வந்தது? நீ தானே விளக்கேற்றினாய்?” குழந்தை பதில் அளித்தது,”நான்தான் விளக்கேற்றினேன். ஆனால் ஒளி எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியாது. ”பின் அந்தக் குழந்தை விளக்கைத் தனது வாயால் ஊதி அணைத்தது. அது ஞானியிடம், ”இப்போது உங்கள் முன்னர் தான் ஒளி மறைந்து விட்டது. இப்போது சொல்லுங்கள், ஒளி எங்கே சென்றது? இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொன்னால் நான் நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்கிறேன். ”என்று கேட்டது. திகைத்துப் போன ஞானி அக்குழந்தையின் காலில் விழுந்தார். இனி யாரிடமும் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்பதில்லை என்று உறுதி அளித்தார். அக்குழந்தையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு ஒளி சென்ற இடம் தனக்குத் தெரியாது என்றார். தான் பதில் அளிக்க முடியாத கேள்வியைப் பிறரிடம் கேட்பது முட்டாள்தனம் என்பதனை உணர்ந்தார். பின் அவர் கூறினார்,”விளக்கை விடு. அதற்கு மேலாக எனக்கு ஒரு நல்ல பாடத்தை சொல்லிக் கொடுத்திருக்கிறாய். என் விளக்கில் (உடல்) ஒளி வருவது எங்கிருந்து என்று எனக்குத் தெரியாது. அது எங்கு மறையும் என்பதும் தெரியாது. என் விளக்கைப் பற்றி முதலில் நான் தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். பின் இந்த மண் விளக்கின் ஒளியைத் தேடுகிறேன் ” - காலத்தை யாராலும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியாது. உங்களுக்கு ஞானமே கிடைத்தாலும் உங்களால் காலத்தையும் காலம் தரும் நுணுக்கமான அனுபவங்களையும் ஜெயிக்க முடியாது. சட்டென்று உங்களுடைய ஆணவம் உங்களுடைய அறிவை தடுக்க முயற்சி செய்யும்போது நீங்கள்தான் ஆணவத்தை அறவே நீக்க வேண்டும். இதுவும் வாழ்க்கையில் முக்கியமான ஒரு கடமை. 

ARC - 013 - கஞ்சத்தனம் பிடித்த பெரிய மனிதர்கள் !

 


ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங்கே போன பிறகுதான் தெரிந்தது. சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது. மூடிய கதவின் முன்னால் போய் நின்றான். “இங்கே யாருமே இல்லையா?” என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை. “நான் ஒரு பெரிய மனிதன் வந்தி ருக்கிறேன். கதவைத் திறந்து விடு! ” சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான். உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான். “இந்தா. இதை வெச்சுக்கோ. சீக்கிரம் கதவைத் திற. நான் உள்ளே போகணும்! ” சித்ரகுப்தன் சிரித்தான். “இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறை கள் & லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது. அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது! ” “அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?” “சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனு மதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?” “அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானா லும் பரவாயில்லை. வாங்கிக்கலாம். ” “அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது! ” “வேறே எப்படி வாங்கறது?” “அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும். ” “என்ன சொல்றே நீ?” “பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள்தான் சொர்க்கத்துலே நுழையறதுக் கான அனுமதிச் சீட்டு! ” “இப்ப நான் உள்ளே வர என்ன வழி?” “பூலோகத்துலே நீ யாருக்காவது. ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?” பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித் தான். பிறகு சொன்னான்: “ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன். அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன். ” “கொஞ்சம் பொறு! ” என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான். கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான். “உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட் டார்! ” “என்ன உத்தரவு?” “அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்! ” “அப்புறம்?” “உன்னை நரகத்துக்கே அனுப்பி வெச்சுடச் சொன்னார்! ” பெரிய மனிதன் மயங்கி விழுந்தான். இந்த மாதிரியான கஞ்சத்தனத்தை கண்டிப்பாக நம்ப வேண்டாம். நிஜமாவே கஷ்டப்படும் மக்கள் இயலாமையால் பண்ணினால் மன்னிக்கலாம் இருந்தாலும் ஆணவத்துக்கு முக்கியம் கொடுக்கும் இந்த நபர்கள் பெரிய மனிதர்களாக இருந்தாலும் மன நிறைவு இல்லாமல்தான் வாழ்வார்கள். இதுக்காக இவர்கள் குற்றவாளிகள் என்று ஆகாது. போதுமான அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்களுடைய தலைக்கனமே இவர்களுக்கு பாரமாக அமைகிறது. 

ARC - 012 - ஒரு போதும் அப்பாவி வாழக்கை வேண்டாம் !




காட்டில் பயங்கரமான நோய் பரவியது நிறைய விலங்குகள் இறந்தன. பல சாகும் தருவாயில் இருந்தன. விலங்குகளின் அரசனான சிங்கம் எல்லா விலங்குகளையும் அழைத்தது. "காட்டில் பாவம் அதிகரித்து விட்டது. இந்தக் காட்டில் யார் அதிகப் பாவம் செய்தார்களோ, அவரைக் கண்டுபிடித்துப் பலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்” என்று சொன்னது சிங்கம். ஒருவரும் பேசவில்லை. சிங்கம், தான் நிறைய ஆடுகளைக் கொன்று பாவம் செய்ததாகவும், தான் பலியாவதற்குத் தயார் என்றும் சொன்னது. உடனே நரி, “மாண்பு மிகு அரசே, நீங்கள் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறீர்கள். கேவலம், இந்த ஆடுகளை நீங்கள் சாப்பிட்டதெல்லாம் ஒரு பாவமா?” என்றது. எல்லா விலங்குகளும் கைதட்டி நரியின் பேச்சை ஆமோதித்தன. அதன்பின் புலி, கரடி, யானை போன்ற பெரிய விலங்குகளைக் குற்றம் சாட்ட எந்த விலங்குக்கும் தைரியமில்லை. அப்போது ஒரு கழுதை சொன்னது, “என்னுடைய பேராசையால் எனக்கு உரிமை இல்லாத இடத்தில் புல்லைத் திருடிச் சாப்பிட்டு விட்டேன்” உடனே எல்லா விலங்குகளும், “கழுதை செய்தது மிகப் பெரிய பாவம். எனவே அதைப் பலி கொடுத்துவிடலாம்” என்று ஒருமித்த குரலில் சொல்லின. எங்கும் அப்பாவிகளே பலியாகின்றனர். இன்றைக்கு தேதிக்கு அப்பாவி என்று யாராவது கிடைத்தால் தயங்காமல் இவர்களை பாதிக்கப்படவைத்து தாங்கள் சந்தோஷமாக இருக்க அப்பாவியை காலி பண்ணிவிடுவார்கள். உஷாராக இருங்கள். கவனமாக இருங்கள்.எதுக்கு நீங்களாகவே வாயை கொடுத்து வம்பை விலைக்கு வாங்க வேண்டும். பேசுவது என்பது ஒரு கலை. உங்களுடைய வாழ்க்கையில் சரியாக பேச முடியவில்லை என்றால் பேச கற்றுக்கொள்ளுங்கள். உங்களின் அப்பாவித்தனத்தை அடுத்தவர்கள் பயன்படுத்தி உங்களை சாய்க்க நினைத்தால் கண்டிப்பாக புத்திசாலித்தனம் இல்லாமல் நடந்துகொள்ள வேண்டாம். 

 

ARC - 011 - கம்யூனிக்கேஷன் என்பது அடிப்படையானது !

 




அவனுக்கு இது ஏழாவது இன்டர்வியூ! ஏற்கெனவே காது கேட்காத, வாய்பேச முடியாத நிலையில் இருக்கும் அவனுக்கு வேலையில்லாதது கூடுதல் வேதனை.
இத்தனைக்கும் ஒவ்வொருமுறையும் எழுத்துத் தேர்வில் தன் முழுத் திறமையையும் காட்டுவான். கூடவே, இன்டர்வியூவில் தன்னால் பேச முடியாது என்பதையும் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளை காதால் கேட்க முடியாது என்பதையும் எழுதிக் காட்டுகிறான். அவர்கள் திருப்தி அடையாமல், நிராகரித்து அனுப்பிவிடுகிறார்கள். அவனின் வெறுப்பெல்லாம், “விண்ணப்பிக்கும்போதே நம்முடைய குறைகளைச் சொல்லித்தானே விண்ணப்பிக்கிறோம். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று நம்பிக்கையோடு இருக்கும்போது இப்படிச் சொல்கிறார்களே” என்பதுதான். இந்த முறை இன்டர்வியூவில் தேர்வு செய்யப்படாவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்ற முடிவோடு இருந்தான். அவனுடைய முறை வந்தது. இன்டர்வியூ செய்பவர், ஃபைலை வாங்கிப் பார்த்தார். சர்டிஃபிகேட்டுகளுக்கு நடுவே இருந்த, “என்னால் பேச முடியாது, மற்றவர்கள் சொல்வதைக் காதால் கேட்க முடியாது” என்று எழுதியிருந்த காகிதமும் இருந்தது. அதைப் படித்துவிட்டு, நாலாக எட்டாக கிழித்துப் போட்டார் அந்த மனிதர். கோபத்தோடு அவரைப் பார்த்தான். அந்த அதிகாரி சலனமே இல்லாமல் ஒரு வெள்ளைத் தாளை எடுத்து ஏதோ எழுதினார். இவனிடம் நீட்டினார். “என்னைப் பணியில் சேர்த்துக்கொண்டால் வீண் அரட்டை அடிக்க மாட்டேன். ஏனென்றால், எனக்குப் பேச முடியாது. எனக்குக் கேட்கும் திறன் இல்லாததால், மற்ற சத்தங்களால் கவனம் சிதறும் வாய்ப்பு இல்லை. எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் மனதை ஒருமுகப்படுத்தி என்னால் செய்ய முடியும். உங்கள் கேள்விகளுக்கு நான் தயார்! ” என்று அவர் எழுதிக் கொடுத்தார். அதைப் பார்த்தவுடன் ஒரு உண்மையை எப்படிச் சொல்ல வேண்டும் என்ற வழி புரிந்தது அவனுக்கு! கண்களில் நீர் கசிய அவரை நன்றியோடு பார்த்தான். “யூ ஆர் அப்பாயின்டட்! ” என்று அவர் உதடு முணுமுணுப்பது புரிந்தது.நாம் எவ்வளவு கஷ்டங்களை தனிப்பட்ட முறையில் அனுபவித்தாலும் கம்யூனிக்கேஷன் என்பது மிகவும் அவசியமானது. கம்யூனிக்கேஷன் இல்லை என்றால் வெற்றி நிச்சயமாக கிடைக்காது. கம்யூனிக்கேஷன் ஒரு அடிப்படை !

ARC - 010 - இன்னொருவரை ஏழையாக்கி பணத்தை சம்பாதிக்க முயற்சித்தால் ?

 



ஒரு பிச்சைக்காரன். கோவில் வாசலில் பிச்சையெடுப்பது அவனது வழக்கம். இருந்தாலும் நல்ல குரல் வளத்துடன் பாடுவான். ஒரு நாள். பக்திப் பாடல்களை உருக்கமாக பாடிக்கொண்டிருந்தான். மகிழ்ந்துபோன கடவுள் அவன் முன் தோன்றினார். பிச்சைக்காரன் மகிழ்ந்துபோனான். வணங்கினான். கடவுள் பேசினார். “பக்தா! உன் பக்தி என்னை கவர்ந்தது. உனக்கு ஏதாவது வரம் தர விரும்புகிறேன். என்ன வேண்டும் என்று கேள்! ” என்றார் கடவுள் பிச்சைக்காரனுக்கு மகிழ்ச்சி. “கடவுளே மிக்க நன்றி. என்னுடைய வேண்டுதல் இன்றுதான் பலித்திருக்கிறது. நீங்கள் இரண்டு வரங்கள் அளிக்க வேண்டும் என்று வேண்டினான் பிச்சைக்காரன். “சரி. தருகிறேன்” என்றார் கடவுள். “எனக்கு இந்த பிச்சைக்கார வாழ்க்கை வெறுத்துப் போய்விட்டது. அதனால், முதலாவது வரத்தினால் என்னை இந்த நாட்டிலேயே பெரிய பணக்காரனாக மாற்றிவிடுங்கள்” என்று கேட்டான். “அப்படியே ஆகட்டும். இரண்டாவது வரத்தை கேள்” என்றார் கடவுள். “கடவுளே! இத்தனை காலம் எல்லோரும் பணக்காரர்களாக இருந்தார்கள். நான் ஏழையாக இருந்தேன். அதனால், இரண்டாவது வரத்தினால், இந்த நாட்டு மக்கள் அனைவரையும் ஏழையாக்கிவிடுங்கள்” என்று கேட்டான். கடவுள் சிரித்துக்கொண்டே, “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார். பிச்சைக்காரனுக்கு மகிழ்ச்சி. கடவுளுக்கு நன்றி தெரிவித்தான். “பக்தா! நீ கேட்ட வரங்களை வழங்கிவிட்டேன். ஆனால் ஒரு நிபந்தனை. இந்த வரங்கள் பத்து நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். நாளை காலை விடியும்போது நீதான் இந்த நாட்டின் பெரிய பணக்காரன்” என்று சொல்லிவிட்டு மறைந்தார் கடவுள். “பத்து நாட்களுக்கு மட்டும் வரம் கொடுக்கும் இவரெல்லாம் ஒரு கடவுளா” என்று வருத்தப்பட்டுக்கொண்டே நகர்ந்தான். இருந்தாலும் அவனுக்கு மகிழ்ச்சி. அன்று இரவு முழுவதும் தூங்கவேயில்லை. சில்லறைக் காசுகளை சேமித்துவைக்கும் பெட்டியை திறந்து பார்த்தான். பத்து செப்புக்காசுகளே இருந்தது. “இன்றோடு நம் பிரச்சனைகள் தீர்ந்தது. விடிந்ததும் பெட்டி நிறைய தங்கக் காசுகள் நிரம்பி வழியப்போகிறது. வசதியான வீடு ஒன்று வாங்க வேண்டும். குதிரையும், தேரும் வாங்க வேண்டும்” என்றெல்லாம் கணக்குப் போட்டான். எப்பொழுது விடியும் என்று காத்திருந்தான். பொழுது விடிந்தது. வேகமாக எழுந்து பெட்டியை திறந்து பார்த்தான். அதிர்ந்துபோனான். இவ்வளவு வருடங்களாக சேர்த்து வைத்த பெட்டியில் முதல் நாள் இருந்த அதே  இருநூறு செப்புக்காசுகளே இருந்தது. “கடவுள் நம்மை ஏமாற்றிவிட்டாரா?” என்று யோசித்தவாறு வீட்டுக்கு வெளியே வந்தான். நாடெங்கும் ஒரே பரபரப்பு. காரணம், ஒரே நேரத்தில் நாட்டில் இருந்த அனைவரின் பணம், ஆபரணங்கள் ஆகியவை காணாமல் போயிருந்தன. பிச்சைக்காரனுக்கு விஷயம் புரிந்தது. “நாட்டில் இருப்பவர்களிடம் ஒரு பைசாகூட இல்லை. அதனால், பத்து செப்புக்காசுகள் வைத்திருக்கும் தானே பணக்காரன்”. ஆம், பிச்சைக்காரன் பணக்காரன் ஆனான். விடிந்ததும் வீட்டில் பணமழை பெய்யும் என்று நினைத்த பிச்சைகாரனுக்கு வருத்தமே மிஞ்சியது. தற்போது கிடைத்திருக்கும் இந்த பணக்கார பட்டத்தால் அவனுக்கு எந்த உபயோகமும் இல்லை. கோவில் வாசலுக்கு சென்று பிச்சை எடுக்கவும் வழியில்லை. காரணம் மக்களிடம் பணம் இல்லை. அவன் யோசிக்கத் தொடங்கினான். “நல்ல வேளை பத்து நாட்களில் மக்களிடம் பணம் வந்துவிடும். பிறகு நமக்கு பிச்சை கிடைக்கும். ஒருவேளை இதுவே நிரந்தரமாக இருந்தால் நம் நிலை என்னவாகும்? தப்பித்தேன். கடவுளுக்கு நன்றி” என்றவாறு பத்து நாட்கள் முடியட்டும் என்று காத்திருந்தான். இதுபோலத்தான் மக்களிடம் இருந்து கார்ப்பரேட் சதியால் வருமானத்தில் இவ்வளவு என்று கொள்ளை அடிக்கப்படுகிறது. மக்களை ஏழையாக மாற்றி இவர்களால் வருங்காலத்தில் சந்தோஷமாக இருக்க முடியாது. கொள்ளை அடிப்பவர்கள் வெகு நாட்களுக்கு நன்றாக இருக்க முடியாது. பேராசையால் அடுத்தவர்களின் வருமானத்தினை பறிக்க நினைப்பவர்களும் நன்றாக இருக்க முடியாது. 

ARC - 009 - கஷ்டத்தில் இருக்கும்போதும் உடன் இருக்க வேண்டும் !



ஒரு தந்தை தன் மகனுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்க வேண்டும் என விரும்பினர். அதற்காக ஒரு திட்டம் தீட்டினார். " சிறுவனான தன் மகனை அழைத்துக் கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார்". அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், தைரியம் மிக்க எதற்கும் அஞ்சாத பெரிய வீரனாகி விடுவாய்!” என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான். அவனிடம் சில நிபந்தனைகள் விதித்தார். அதன்படி, இன்று இரவு முழுவதும், நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். அவன் இரவு முழுவதும் கண்கட்டை தவிர்க்காமல் அவிழ்க்காமல் இருக்க வேண்டும். மறுநாள் சூரியன் உதிக்கும் வரை அங்கிருந்த அடி மரக்கட்டையின் மேலேயே அமர்ந்திருக்க வேண்டும். வீட்டிற்கு ஓடி வந்து விடவும் கூடாது. வெளியில் யாரிடமும் இதைப் பற்றி சொல்லக்கூடாது. அந்த சிறுவன் அரை மனதோடு ஒத்துக் கொண்டான். அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அந்த மரக்கட்டையின் மேல் கண்ணை கட்டிக் கொண்டே நிலையிலேயே உட்கார்ந்தான். அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும், நரி ஊளையிடுவதும், நடுக்கத்தைக் கொடுத்தது. அவனுக்குப் பல விதமான சத்தங்கள் கேட்டன. கொடிய மிருகங்கள் தன்னைச் சுற்றி இருப்பதாக அவன் நினைத்துக் கொண்டான். யாராவது வந்து தன்னை துன்புறுத்துவார்களோ என்ற பயத்துடன் அவன் இருந்தான். காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ, என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது. நேரம் செல்ல செல்ல அவனுடைய பயம் இன்னும் அதிகரித்தது. பலத்த காற்றினால் மரங்கள் பேயாட்டம் ஆடின,கிளைகள் முறிந்து விழும் சத்தம் கேட்டது. மழை வேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. மிகவும் பயந்து போய்விட்டான். ‘அய்யோ! இப்படி அனாதையாக தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்." என்று பலமுறை கத்திப் பார்த்தான், சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. ஆனாலும் கண்கட்டை அவிழ்க்கவில்லை. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல், என்ன தான் நடக்கும், பார்ப்போமே. என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். தன் தந்தை சொன்னபடி தைரியத்தை வரவழைத்துக் கொண்டான். கடவுளிடம் பிரார்த்தனை செய்தான். இப்பொழுது மெல்ல மெல்ல டைம் போயிருந்தது, பயம் போயிருந்தது கொஞ்சம் கொஞ்சமாக தைரியம் அவனுக்குள் வந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். இருளும் மெல்ல மெல்ல விலக தொடங்கியது. பொழுது புலர ஆரம்பித்து விட்டது. சூரியன் உதிக்க மெல்ல மெல்ல வெளிச்சம் வந்தது. மறுநாள் சூரியன் உடம்பைச் சுட்டபோது உணர்ந்த சிறுவன், தன் கண் கட்டை அவிழ்த்தான். கண்ணைக் கசக்கிக் கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம். ஆனந்தம். அழுகையே வந்துவிட்டது. தந்தை இரவு முழுவதும் தன் மகன் அருகிலேயே அமர்ந்துக் கொண்டு, அவனுக்கு எந்த விதமான தீங்கும் வராமல் பார்த்துக் கொண்டுஇருப்பதை அப்போது தான் அவன் அறிந்தான். பொதுவாக ஒருவர வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தால் நாமும் எப்படியாவது சப்போர்ட்டுக்கு இருக்க வேண்டும். இந்த மாதிரி சப்போர்ட்டில் இருக்கும்போது நமக்கு அது பெரிய விஷயமாக இருக்கலாம் இதுபோல நாம் யாரை சப்போர்ட் பண்ணினாலும் சப்போர்ட் கிடைப்பவர்களுக்கு இது மிகவும் பெரிய விஷயம். குறிப்பிட்ட அந்த நாளில் அந்த விஷயம் அவர்களுக்கு கண்டிப்பாக தேவையான விஷயமாக இருக்கலாம். ‘’அப்பா’’ என்று கூவி, அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான். ‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும், மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, '' நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார். “இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் கண்டு கொள்ளவில்லை.? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?” என்று கேட்டான். ‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும், என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால், அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை.மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.





ARC - 008 - கோபமும் கொஞ்சம் தேவைதான்


ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது. சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள் " என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது. தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான். பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான். பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான். பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான். பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார். கோபம் மனுஷனுடைய வாழ்க்கையின் அடிப்படை ! நம்முடைய கோபத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். இதனை கற்றுக்கொள்வது கஷ்டம்தான். இருந்தாலும் மிகவும் பயனுள்ள ஒரு திறன் இதுவாகும். 



ARC - 007 - உதவும் கரங்கள்




ஒருவன் தன் தோட்டத்தில் நன்கு விளைந்திருந்த காய்கறிகளை மார்க்கெட்டில் கொண்டுபோய் விற்க புறப்பட்டான். அதனால் காய்கறிகளை தன் வண்டியில் கட்டிக் கொண்டு சென்றான். அப்படி போகும் போது, வழியில் அவனது வண்டியின் சக்கரம் பள்ளத்தில் மாட்டிக் கொண்டு, காய்கறிகள் கீழே விழந்துவிட்டன. அப்போது அவன் கடவுனே எனக்கு உதவி செய் என்று வேண்டினான். இப்போது கடவுள் வரவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்தான். இருப்பினும் வரவில்லை. அருகில் யாரும் இல்லை. ஆகவே அவனே அந்த வண்டிச் சக்கரத்தை தூக்கி மேட்டில் வைத்தான். இப்போது சுலபமாக அவனால் தூக்க முடிந்தது. அந்த நேரத்தில் அவன் "தன்னால் தூக்க முடியாது என்று நினைத்த வண்டியின் சக்கரத்தை தூக்கிவிட்டேனே! " என்று நினைத்து ஆச்சரியப்பட்டான். அப்போது பின்னால் திரும்பி பார்த்தான். அந்த வழியில் வந்த ஒரு துறவி அவனுக்கு உதவினார். அந்த துறவிக்கு அவன் தன் நன்றியைக் கூறி, "அத்தனை முறை கடவுளை அழைத்தும். அவர் வந்து உதவவில்லை, ஆனால் நீங்கள் வந்து எனக்கு உதவியதற்கு நான் மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்" என்று கூறினான். அப்போது அந்த துறவி, "எதற்கு கடவுள் மீது கோபம் கொள்கிறாய்? அவர் உனக்கு உதவி செய்யவில்லை என்று சொல்லாதே. நீ ஏதேனும் முயற்சி செய்தால் தானே. அவரால் உனக்கு உதவ முடியும்" என்று சொன்னார். பின் "நீ முயற்சி செய்ததால் தானே. நானே வந்து உதவினேன். ஆகவே அவர் உனக்கு உதவ வேண்டும் என்றால் அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடு" என்று கூறி சென்று விட்டார்.

ARC-006 - கொஞ்சம் அசால்ட்டு / எப்போதும் அலார்ட்டு



ஒரு கிராமத்தில் ஒரு குருவும் அவருடைய சீடர்களுடம் ஆற்றங்கரையோரம் கலகலப்பாகப் பேசிக்கொண்டே சென்றனர். ஒரு சீடன் கேட்டான், “குருவே, இளமை காலத்தில் நீங்கள் ஒரு பெரிய போர் வீரராக இருந்ததாகவும். பல நாடுகளுக்குப் பயணம் செய்து வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்ததாகவும் மூத்த சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார் களே! நிஜம்தானா?” “நிஜம்தான். ஆனால் அதெல்லாம் அந்தக் காலம். இப்போது நான் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டேன்!” என்றார் குரு. “ஏன் குருவே? போர் தவறா ஆயுதங்களே வேண்டாமா?” “சரி தவறு என்பதல்ல என் வாதம் ஒரு கட்டத்துக்குமேல் புத்திக் கூர்மையும் அமைதியையும் விட சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை என்று புரிந்துவிட்டது எனக்கு! " குருவின் வார்த்தைகளில் சீடர்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. அவரை சோதித்துப் பார்த்துவிட முடிவு செய்து. ஒரு திட்டம் போட்டனர். “நாளை குரு தியானத்தில் இருக்கும்போது. நாம் இருவரும் மறைந்திருந்து அவரைத் தாக்குவோம். அப்போது அவர் ஆயுதங்களை எடுக்காமல் நம்மை எப்படிச் சமாளிக்கிறார் என்று பார்ப்போம். ” என்று முடிவு செய்தனர். மறுநாள் வகுப்புகள் முடிந்ததும், குரு வழக்கம் போல தியானத்தில் ஆழந்துவிட இந்த இரு சீடர்கள் மட்டும் ஓலை தட்டிகளுக்கு அப்பால் மறைந்து கொண்டனர். சில நிமிடங்கள் கழித்து இருவரும் மெல்ல வெளியில் வந்தனர். பேசி வைத்தபடி இருவரும் குருவின் மீது ஏக காலத்தில் இரு பக்கமிருந்தும் பாய்ந்தனர். குரு முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவர்கள் பக்கத்தில் நெருங்கும்வரை கண்மூடி அமைதியாக இருந்த குரு. கடைசி விநாடியில் சற்று முன்னே வந்து குனிந்துகொண்டார். சீடர்கள் இருவரும் மடேர் என்று மோதிக் கொண்டு தரையில் விழுந்து உருண்டனர். எதுவும் நடக்காதது போல் தியானத்தைத் தொடர்ந்தார் குரு! குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன் இல்லை என்பதையும் அறிவுக்கு மிஞ்சிய ஆயுதம் இல்லை என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டார்கள்.கொஞ்சம் அசால்ட்டாக இருந்தாலும் எப்போதும் அலார்ட்டாக இருக்க வேண்டும் ! 


ARC-005 - எனது கண்ணை நேற்றோடு காணவில்லை !



ஒரு மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஃபெயில், தலைமை ஆசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது. “இந்தப் பள்ளியில் பத்துவருஷமாப் படிச்சிருக்கே; ஒரு பாடத்துல கூட பாஸாகலை. வகுப்புல பாடம் நடத்தும் போது நீ என்ன காதுல பஞ்சு வெச்சு அடைச்சுகிட்டிருந்தியா?”ன்னு கோபமாக திட்டினார்.. அந்தப் பையன் அமைதியாக நின்றிருந்தான். “இனி நீ படிக்க லாயக்கே இல்லை” என்று டி.ஸி. கொடுத்து அனுப்பி விட்டார். அந்தப் பையன் தெருவில் இறங்கி நடந்தான். “உன் காதில் என்ன பஞ்சா அடைத்து வெச்சிருக்கே?” என்ற அந்த வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. உடனே தன் காதுகள் இரண்டையும் நன்றாக முடினான். அமைதியான அந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. ஒரு புதிய சிந்தனை உருவானது. தலைமையாசிரியர் சொன்னது போல் பஞ்சு வைத்து காதை அடைத்துப் பார்த்தான். ஒரு புது சாதனத்தை வடிவமைத்தான். அதன் பெயர் இயர் மஃப். பரீட்சைக்குப் படிக்கிறவர்கள் தொந்தரவின்றிப் படிக்க வாங்கினார்கள். இரைச்சலான இடங்களில் வேலை செய்பவர்கள் வாங்கினார்கள். ஓரளவுக்கு வியாபாரம் நடந்தது. அந்தச் சமயம் முதல் உலகப் போர் ஆரம்பமானது. பீரங்கிச் சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க இயர் மஃப் கட்டாயம் அணிய வேணடும் என அதிகாரி உத்தரவிட்டார். போர்வீரர்களுக்கு வசதியாக ஹெல்மட்டில் அமைத்து கொடுத்தான். கோடீஸ்வரனானான். இது உண்மையா நடந்த விஷயமா என்று தெரியவில்லை. இருந்தாலும் ஒரு கஷ்டமான விஷயத்தில் இருந்து மேலே வருவதற்கு உங்களுடைய திறமைகளை பயன்படுத்த எப்போதுமே தயங்கவே கூடாது. இந்த திறமைதான் உங்களுடைய மதிப்பை கொடுக்கும். 




ARC - 023 - மலிவாக நடந்துகொள்ளும் மனிதர்கள் !

  ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி என்று ஒருவர் சென்று இருந்தார்! கணவன் மனைவியிடம் காபி போட்டு கொண்டுவருமாறு சொன்னான். இங்கே காபி பொடியும்...