Saturday, June 27, 2020

CINEMATIC WORLD - 025 - GUARDIANS OF THE GALAXY - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00044]




கார்டியன்ஸ் ஆப் தி காலக்ஸி - இந்த திரைப்படம் 2014 ம் ஆண்டு வெளிவந்தது. பூமியில் இருந்து ஸ்பைஸ் க்கு அழைத்து செல்லப்படும் (மன்னிக்கவும் கடத்தி செல்லப்படும்) பீட்டர் குவில் அங்கே கொள்ளைக்கார தலைவராக யாண்டு என்பவருடைய RAVEGERS ராவேஜெர்ஸ் என்ற விண்வெளி கொள்ளையர்களின்  அமைப்பில் ஜூனியர்ராக வேலை பார்த்து அப்படியே ஒரு மெம்பர்ராக இணைகிறார். கஷ்டப்பட்டு சண்டை எல்லாம் போட்டு கடைசியில் சக்திவாய்ந்த தடை செய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட கல்லான பவர் ஸ்டோன் என்ற  ஒரு இன்பினிட்டி ஸ்டோனை எடுக்கும்போது அங்கே ஆரம்பிக்கிறது வம்பு. இந்த ஸ்டோன்னை அடைய ஆசைப்படும் தானோஸ் மகள் கமெரா, குடும்பத்துக்காக பழிவாங்க துடிக்கும் சண்டைக்கார ஸ்பேஸ் சண்டியர் ட்ராக்ஸ், என்ன கிடைத்தாலும் காசாக மாற்றி சந்தோஷமாக இருக்க நினைக்கும் ராக்கெட், கடைசியாக அவருக்கே வாய்த்த அசிஸ்டண்ட் க்ரூட்  என்று அனைத்து காமிக்ஸ் அமைபபின் மெம்பர்களையும் ஸ்பேஸ் ஜெயில்லில்  சந்திக்கிறார். ஆனால் இந்த ஒரு குட்டியூன்டு கல்லுக்கு பிரபஞ்சத்தின் அனைத்து மக்களையும் தரைமட்டமாக மாற்றும் பவர் இருப்பதை தெரிந்துக்கொண்டவுடன்  தனித்தனியான காரணங்களுக்காக ஸ்பெஸில் அலைந்துகொண்டிருந்த இவர்கள் மொத்தமாக GOTG யாக சேர்ந்து இந்த ஸ்டோனை அடைய நினைக்கும் மோசமான ரோனான் தி அக்கியூஸர் என்ற வில்லனிடம் இருந்து எல்லோரையும் காப்பாற்றுவதற்காக கார்டியன்ஸ் ஆப் தி காலக்சி என்ற TEAM ஆக செயல்படுகின்றனர் , இப்போது கையில் எதுவுமே இல்லாமல் கிளைமாக்ஸ் சண்டை போட செல்லும் இவர்களால் எல்லோரையம் காப்பாற்ற முடிந்ததா ? என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை . இந்த திரைப்படம் ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களை  போல அருமையான விசுவல் எபெக்ட்ஸ் மற்றும் ரசிக்கும்படியான திரைக்கதையுடன் கலகலப்பான அமைந்துள்ளது . இந்த படம் செம்ம ஹிட். காரணம் என்னவென்றால் இவ்வளவு பெரிய பட்ஜெட் படம் என்றாலும் அதிகமான ஆடம்பாரம் காட்டி கதையை நோகடிக்காமல் மூழ்காத ஷிப் இந்த ஸ்பேஸ் ஷிப் (ஃபிரண்ட்ஷிப்) என்று சம்மந்தம் இல்லாத 5 பேரை சேர்த்து வைத்து படத்தை முடித்துள்ளார்கள். கிளைமாக்ஸ் கெத்து. சொன்னால் ஸ்பாய்லர் ஆகும். படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் கார்டியன்ஸ் ஆப் த காலக்சி வால்யூம் 2 என்ற திரைப்படம் 2017 ம் ஆண்டு வெளிவந்தது. அதுக்கு தனியாக விமர்சனம் உள்ளது. இன்னும் போஸ்ட் பண்ணவில்லை என்று நினைக்கிறேன். கூடிய விரைவில் போஸ்ட் பண்ணுகிறேன்.

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...