Monday, June 29, 2020

CINEMATIC WORLD - 027 - SONIC THE HEDGEHOG - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! -


இதுவரைக்கும் நீங்க நிறைய ஏலியன் படங்களை பார்த்து இருக்கலாம், ஆனால் இந்த ஏலியன் படம் நீங்கள் ஃபேமிலியுடன் பார்க்கும் அளவுக்கு நன்றாக இருக்கும், அதுக்கு நான் பரோமிஸ். கதைக்கு வருவோம் சொந்த உலகத்தில் இவர் ஒரு ஹீரோ ஆனால் இவருடைய இனத்தை எதிர்த்தே பெரிய பிரச்சனை அந்த கிரகத்தில் சென்றுக்கொண்டு இருப்பதால் பூமிக்கு அனுப்பப்படுகிறார் வேகத்தின் சக்திகளை கொண்டு மின்னல் வேகத்தில் செல்லும் நம்ம ஹீரோ SONIC THE HEDGEHOG - அதிசக்திவாய்ந்த மிகவும் அதிவேகத்தில் செல்லக்கூடிய சோனிக் அவருடைய உலகத்தில் இருந்து இந்த பூமியில் வசிக்க தேர்ந்தெடுத்த இடம் இந்த கிரீன்ஹில்ஸ் என்ற அமைதியான கிராமப்புற பகுதி. வாழ்க்கை நல்லாத்தான் போகும் ஆனால் பிரச்சனை இல்லாமல் வாழ்க்கை இருக்குமா ? களம் இறங்குகிறான் ஒரு வில்லன். SONIC பற்றி தெரிந்த உடனே கொஞ்சம் கொஞ்சமாக லொகேஷன் கண்டுபிடித்து அவருடைய சக்திகளை எடுத்துக்கொள்ள மிக மிக புத்திசாலியான பணக்காரனாக இருக்கும் வில்லன் ரோபோட்னிக்  மோசமான கொலைவெறியுடன் சோனிக்கை துரத்துகிறார். இப்போது சோனிக் தனி ஆள் இல்லை. டாம் மற்றும் அவருடைய குடும்பம் சோனிக்குக்கு சப்போர்ட் பண்ணுகிறது. இங்கே என்னதான் வில்லனிடம் பயங்கரமான இரும்பு டிரோன் துப்பாக்கிகள் இருந்தாலும் அதிவேகத்தில் செல்லும் சக்தியுடனும் மேலும் நல்ல மனத்துள்ள காவல் துறை அதிகாரியின் குடும்பத்தின் உதவியுடனும் கொடிய வில்லன் ரோபோட்னிக்-ன் முயற்சிகளை கடந்து தப்பிச்செல்கிறாரா ? என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதைக்களம் , சோனிக் என்ற காணொளி விளையாட்டின் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்த இந்த திரைப்படம் 2020 -ல் வெளிவந்தது. பொதுவாக SPEEDSTAR என்று சொல்லும் கதாப்பத்திரங்களுக்கு ஹாலிவுட்டில் வரவேற்பு அதிகம். சூப்பர் ஹீரோ பிளாஷ் எல்லோருக்கும் பிடிக்கும். ஒரு ஒரு முறையும் கிராண்ட் கஸ்டின்னின் THE FLASH டெலிவிஷன் ஷோவின் சீசன்களை பார்க்கும்பொது கண்டிப்பாக ஒரு வேற லெவல் அனுபவம் கிடைக்கும். நான் இந்த படம் பாக்கும்போது அந்த லெவல் அனுபவம் எனக்கு கிடைத்தது. சூப்பர் ஹீரோக்களுக்கு சற்றும் குறைந்தவர் அல்ல நம்ம சோனிக். அதே போல வீடியோகேம்களை அடிப்படையாக கொண்டு படம் எடுத்தால் பாக்ஸ் ஆபீஸ் வராது என்று சொல்லப்படாத ஒரு ஹாலிவுட் சாபத்தை இந்த படம் தூக்கி சாப்பிட்டே விட்டது என்று சொல்லலாம்.இன்னும் நிறைய சொல்லலாம் என்று ஆசைப்படுகிறேன். இன்னொரு நாள் இன்னும் வீடியோ கேம் வகை படங்களை பற்றிய சுவையான கதைகளை சொல்கிறேன். கடைசியாக எப்போதும் போலத்தான் இந்த தமிழ் வலைப்பூவை பயன்படுத்தியதற்க்கு நன்றி, அப்படியே ஃபாலோ பட்டன் கொடுத்துவிடவும் ! தொடர்ந்து சப்போர்ட் பண்ணிக்கொண்டே இருங்கள். முடிந்தால் ஏதாவது கமெண்ட் பண்ணுங்கள். பல வருடமாக என்னுடைய வலைத்தளத்துக்கு கமெண்ட் இல்லை. நானும் பார்க்கிறேன் பார்க்கிறேன் ஒருவரும் கமெண்ட் பண்ணவே மாட்டேன் என்கிறார்கள். யுட்யூப் காலத்தில் பிளாக் வேலை செய்யாது என்ற எழுதப்படாத சட்டத்தை தோற்கடிக்கதான் இந்த முயற்சி. சப்போர்ட் பண்ணுங்கள்.  இந்த NICE TAMIL BLOG வலைப்பூ நிறைய பேரை சென்றடைய வேண்டும். 

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...