இதுவரைக்கும் நீங்க நிறைய ஏலியன் படங்களை பார்த்து இருக்கலாம், ஆனால் இந்த ஏலியன் படம் நீங்கள் ஃபேமிலியுடன் பார்க்கும் அளவுக்கு நன்றாக இருக்கும், அதுக்கு நான் பரோமிஸ். கதைக்கு வருவோம் சொந்த உலகத்தில் இவர் ஒரு ஹீரோ ஆனால் இவருடைய இனத்தை எதிர்த்தே பெரிய பிரச்சனை அந்த கிரகத்தில் சென்றுக்கொண்டு இருப்பதால் பூமிக்கு அனுப்பப்படுகிறார் வேகத்தின் சக்திகளை கொண்டு மின்னல் வேகத்தில் செல்லும் நம்ம ஹீரோ SONIC THE HEDGEHOG - அதிசக்திவாய்ந்த மிகவும் அதிவேகத்தில் செல்லக்கூடிய சோனிக் அவருடைய உலகத்தில் இருந்து இந்த பூமியில் வசிக்க தேர்ந்தெடுத்த இடம் இந்த கிரீன்ஹில்ஸ் என்ற அமைதியான கிராமப்புற பகுதி. வாழ்க்கை நல்லாத்தான் போகும் ஆனால் பிரச்சனை இல்லாமல் வாழ்க்கை இருக்குமா ? களம் இறங்குகிறான் ஒரு வில்லன். SONIC பற்றி தெரிந்த உடனே கொஞ்சம் கொஞ்சமாக லொகேஷன் கண்டுபிடித்து அவருடைய சக்திகளை எடுத்துக்கொள்ள மிக மிக புத்திசாலியான பணக்காரனாக இருக்கும் வில்லன் ரோபோட்னிக் மோசமான கொலைவெறியுடன் சோனிக்கை துரத்துகிறார். இப்போது சோனிக் தனி ஆள் இல்லை. டாம் மற்றும் அவருடைய குடும்பம் சோனிக்குக்கு சப்போர்ட் பண்ணுகிறது. இங்கே என்னதான் வில்லனிடம் பயங்கரமான இரும்பு டிரோன் துப்பாக்கிகள் இருந்தாலும் அதிவேகத்தில் செல்லும் சக்தியுடனும் மேலும் நல்ல மனத்துள்ள காவல் துறை அதிகாரியின் குடும்பத்தின் உதவியுடனும் கொடிய வில்லன் ரோபோட்னிக்-ன் முயற்சிகளை கடந்து தப்பிச்செல்கிறாரா ? என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதைக்களம் , சோனிக் என்ற காணொளி விளையாட்டின் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்த இந்த திரைப்படம் 2020 -ல் வெளிவந்தது. பொதுவாக SPEEDSTAR என்று சொல்லும் கதாப்பத்திரங்களுக்கு ஹாலிவுட்டில் வரவேற்பு அதிகம். சூப்பர் ஹீரோ பிளாஷ் எல்லோருக்கும் பிடிக்கும். ஒரு ஒரு முறையும் கிராண்ட் கஸ்டின்னின் THE FLASH டெலிவிஷன் ஷோவின் சீசன்களை பார்க்கும்பொது கண்டிப்பாக ஒரு வேற லெவல் அனுபவம் கிடைக்கும். நான் இந்த படம் பாக்கும்போது அந்த லெவல் அனுபவம் எனக்கு கிடைத்தது. சூப்பர் ஹீரோக்களுக்கு சற்றும் குறைந்தவர் அல்ல நம்ம சோனிக். அதே போல வீடியோகேம்களை அடிப்படையாக கொண்டு படம் எடுத்தால் பாக்ஸ் ஆபீஸ் வராது என்று சொல்லப்படாத ஒரு ஹாலிவுட் சாபத்தை இந்த படம் தூக்கி சாப்பிட்டே விட்டது என்று சொல்லலாம்.இன்னும் நிறைய சொல்லலாம் என்று ஆசைப்படுகிறேன். இன்னொரு நாள் இன்னும் வீடியோ கேம் வகை படங்களை பற்றிய சுவையான கதைகளை சொல்கிறேன். கடைசியாக எப்போதும் போலத்தான் இந்த தமிழ் வலைப்பூவை பயன்படுத்தியதற்க்கு நன்றி, அப்படியே ஃபாலோ பட்டன் கொடுத்துவிடவும் ! தொடர்ந்து சப்போர்ட் பண்ணிக்கொண்டே இருங்கள். முடிந்தால் ஏதாவது கமெண்ட் பண்ணுங்கள். பல வருடமாக என்னுடைய வலைத்தளத்துக்கு கமெண்ட் இல்லை. நானும் பார்க்கிறேன் பார்க்கிறேன் ஒருவரும் கமெண்ட் பண்ணவே மாட்டேன் என்கிறார்கள். யுட்யூப் காலத்தில் பிளாக் வேலை செய்யாது என்ற எழுதப்படாத சட்டத்தை தோற்கடிக்கதான் இந்த முயற்சி. சப்போர்ட் பண்ணுங்கள். இந்த NICE TAMIL BLOG வலைப்பூ நிறைய பேரை சென்றடைய வேண்டும்.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Monday, June 29, 2020
Sunday, June 28, 2020
CINEMATIC WORLD - 026 - ANT MAN (2015) - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00045]
இந்த திரைப்படம் 2015 ல் வெளிவந்தது , சிறையில் இருந்து வெளியே வரும் ஸ்காட் லாங் இனிமேல் கொள்ளையடிக்க போவதில்லை என்று முடிவு செய்தாலும் தவிர்க்க முடியாத காரணங்களால் அறிவியல் ஆராய்ச்சியாளர் ஹாங்க் பிம் என்பவருக்கு சொந்தமான சிறப்பு தொழில் நுட்பத்தால் உருவான ANT MAN - SUIT ஐ எடுக்கிறார். ஆனால் அவருடைய திறன்கள் மற்றும் ஆராய்ச்சியாளர் ஹாங்க் பிம் ன் தொழில்நுட்ப அறிவியலின் உதவியுடன் ஒரு மிகப்பெரிய நிறுவன அதிபராக இருக்கும் டேரனிடம் இருந்து இந்த தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது, ANT MAN இந்த உலகத்தை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளே இந்த திரைப்படத்தின் கதைக்களம், இந்த திரைப்படத்தின் அடுத்தபாகம் ANT MAN & THE WASP 2019 ல் வெளிவந்தது. இந்த படம் பார்க்கும்போது எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால் மின்னணு பொறியியல் படிச்சாலும் வெளிநாட்டில் கூட வேலை கிடைக்காமல் போகும் என்று இந்த படம் கொடுக்கும் லாஜீக்தான். இந்த உலகமே ஒரு CORRUPTION ல் இருக்கிறது. இங்கே FIR ஃபைல் பண்ணினால் வாழ்க்கையே போய்விடும் போல இருக்கிறது. இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் BACKGROUND ஆக வைத்துக்கொண்டு ஒரு சூப்பர் ஹீரோவாகவும் இருக்க அவரால் முடிந்த அனைத்து விஷயங்களையும் பண்ணி உயிரை கொடுத்து RISK எடுப்பதால்தான் ANT MAN சிறப்பானவர். இந்த படத்துடைய HERO வாக இருக்கும் PAUL RUDD அவருடைய கதாப்பாத்திரத்துக்கு நல்ல மரியாதையை கொடுத்துள்ளார். இவருடைய கதாப்பாத்திரத்துக்கு இப்போது இவரை விட பெஸ்ட் சாய்ஸ் யாருமே இல்லை என்ற அளவுக்கு ஒரு அமேஸிங் பெர்ஃபார்மன்ஸ் கொடுத்து இருக்கிறார். நண்பர்களோடு கொள்ளையடிப்பதில் இருந்து விவகாரத்தால் பிரிந்த பின்னாலும் சொந்த மகளிடம் நிறைய பாசம் காட்டும் அப்பாவாகவும் அதே சமயம் இந்த ANT MAN டெக்னாலஜியை கற்றுக்கொண்டு உயிரை பணயம் வைத்து கிளைமாக்ஸ்ஸில் சண்டையிடும் காட்சிகளாக இருந்தாலும் ஒரு கதையை விஷுவல்லாக எவ்வளவு தெளிவாக ப்ரெசெண்ட் பண்ண முடியுமோ அவ்வளவு தெளிவான முறையில் இந்த படத்தில் ப்ரெசெண்ட் பண்ணி இருப்பார்கள். LUIS கதாப்பாத்திரம் கிளைமாக்ஸ்ல நல்ல ஒரு கெஸ்ட் APPEARANCE கொடுத்து CIVIL WAR படத்துக்கு ஒரு LEAD கொடுத்து உள்ளது.
Saturday, June 27, 2020
CINEMATIC WORLD - 025 - GUARDIANS OF THE GALAXY - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00044]
கார்டியன்ஸ் ஆப் தி காலக்ஸி - இந்த திரைப்படம் 2014 ம் ஆண்டு வெளிவந்தது. பூமியில் இருந்து ஸ்பைஸ் க்கு அழைத்து செல்லப்படும் (மன்னிக்கவும் கடத்தி செல்லப்படும்) பீட்டர் குவில் அங்கே கொள்ளைக்கார தலைவராக யாண்டு என்பவருடைய RAVEGERS ராவேஜெர்ஸ் என்ற விண்வெளி கொள்ளையர்களின் அமைப்பில் ஜூனியர்ராக வேலை பார்த்து அப்படியே ஒரு மெம்பர்ராக இணைகிறார். கஷ்டப்பட்டு சண்டை எல்லாம் போட்டு கடைசியில் சக்திவாய்ந்த தடை செய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட கல்லான பவர் ஸ்டோன் என்ற ஒரு இன்பினிட்டி ஸ்டோனை எடுக்கும்போது அங்கே ஆரம்பிக்கிறது வம்பு. இந்த ஸ்டோன்னை அடைய ஆசைப்படும் தானோஸ் மகள் கமெரா, குடும்பத்துக்காக பழிவாங்க துடிக்கும் சண்டைக்கார ஸ்பேஸ் சண்டியர் ட்ராக்ஸ், என்ன கிடைத்தாலும் காசாக மாற்றி சந்தோஷமாக இருக்க நினைக்கும் ராக்கெட், கடைசியாக அவருக்கே வாய்த்த அசிஸ்டண்ட் க்ரூட் என்று அனைத்து காமிக்ஸ் அமைபபின் மெம்பர்களையும் ஸ்பேஸ் ஜெயில்லில் சந்திக்கிறார். ஆனால் இந்த ஒரு குட்டியூன்டு கல்லுக்கு பிரபஞ்சத்தின் அனைத்து மக்களையும் தரைமட்டமாக மாற்றும் பவர் இருப்பதை தெரிந்துக்கொண்டவுடன் தனித்தனியான காரணங்களுக்காக ஸ்பெஸில் அலைந்துகொண்டிருந்த இவர்கள் மொத்தமாக GOTG யாக சேர்ந்து இந்த ஸ்டோனை அடைய நினைக்கும் மோசமான ரோனான் தி அக்கியூஸர் என்ற வில்லனிடம் இருந்து எல்லோரையும் காப்பாற்றுவதற்காக கார்டியன்ஸ் ஆப் தி காலக்சி என்ற TEAM ஆக செயல்படுகின்றனர் , இப்போது கையில் எதுவுமே இல்லாமல் கிளைமாக்ஸ் சண்டை போட செல்லும் இவர்களால் எல்லோரையம் காப்பாற்ற முடிந்ததா ? என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை . இந்த திரைப்படம் ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களை போல அருமையான விசுவல் எபெக்ட்ஸ் மற்றும் ரசிக்கும்படியான திரைக்கதையுடன் கலகலப்பான அமைந்துள்ளது . இந்த படம் செம்ம ஹிட். காரணம் என்னவென்றால் இவ்வளவு பெரிய பட்ஜெட் படம் என்றாலும் அதிகமான ஆடம்பாரம் காட்டி கதையை நோகடிக்காமல் மூழ்காத ஷிப் இந்த ஸ்பேஸ் ஷிப் (ஃபிரண்ட்ஷிப்) என்று சம்மந்தம் இல்லாத 5 பேரை சேர்த்து வைத்து படத்தை முடித்துள்ளார்கள். கிளைமாக்ஸ் கெத்து. சொன்னால் ஸ்பாய்லர் ஆகும். படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் கார்டியன்ஸ் ஆப் த காலக்சி வால்யூம் 2 என்ற திரைப்படம் 2017 ம் ஆண்டு வெளிவந்தது. அதுக்கு தனியாக விமர்சனம் உள்ளது. இன்னும் போஸ்ட் பண்ணவில்லை என்று நினைக்கிறேன். கூடிய விரைவில் போஸ்ட் பண்ணுகிறேன்.
Subscribe to:
Posts (Atom)
MUSIC TALKS - MALAI KOVIL VAASALIL KAARTHIGAI DEEPAM MINNUTHEY ! VILAKETHUM VELAIYIL ANANDHA RAAGAM SOLLUTHEY ! - TAMIL SONG LYRICS !
மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே முத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்...
-
ஹே உமையாள் ஹே உமையாள் என்னை விட்டு செல்லாதே உன் கண் இமையால் என் நெஞ்சத்தை கொல்லாதே ஒரே ஒரு தேநீர் சந்திப்பில் என்னை இழுத்துவிட்டாய் அடி ...
-
இது எல்லாமே உங்களுக்கு சொல்லும்போது அப்படியே உற்சாகமாக இருக்கும் இந்த புலிகேசி படத்தில் வருவது போல என்னமோ ஒரு நம்பிக்கையில் வல்லவராயன் மீது...