Sunday, January 6, 2019

CINEMATIC WORLD : SOMETHING DIFFERENT - TAMIL REVIEW - அனிமேஷன் படங்கள் - [REGULATION-2024-00040]


PORCO ROSSO - இந்த திரைப்படம் 1992 ல் வெளிவந்த ஜப்பானிய மொழி நகைச்சுவை திரைப்படமாகும் . இந்த திரைப்படத்தின் கதைக்களம் : முதலாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில் இத்தாலிய விமானப்படையை சார்ந்த போர்கோ (PORCO) ஒரு சாபத்தால் PIG போன்ற உருவ அமைப்பில் இருக்கிறார். இந்த நிலையில் கர்டிஸ் (CURTIS) என்ற விமானம் ஓட்டுவதில் சிறந்த விமானியாக இருக்கக்கூடிய ஒருவரால் தாக்கபடுகிறார். இதனால் விமானத்தை இழந்த ஒரு புதிய விமானத்தை ஃபியோ (FIO) என்ற இளம் பெண் பொறியாளர் மற்றும் விமானியுடன் உருவாக்கும் PORCO மறுபடியும் CURTIS ஐ போட்டியில் வெற்றி அடைவாரா என்பதை மிகவும் சுவாரஸ்யமாக சொல்கிறது இந்த திரைப்படம். இந்த திரைப்படம் 1915 களின் காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை மிகவும் அருமையாக காட்சிப்படுத்தி கதையை கொஞ்சம் கலகலப்பு கலந்து சொல்லியிருக்கிறது. இந்த திரைப்படத்தின் கதைக்களம் மனதை தொடுகிறது. 



OCEAN WAVES (1993)

டோக்கியோவில் TRAIN க்காக காத்திருக்கும் TAKI அவருடைய கடந்த காலத்தில் கொஞ்சம் வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களை நினைத்து பார்ப்பதில் இருந்து கதை தொடங்குகிறது. பள்ளியில் படிக்கும் காலத்தில் அவருக்கு RIKAKO என்ற சக மாணவி சுற்றுலாவின் போது பணத்தை தொலைத்து விட்டதால் அவருக்கு அவருடைய பார்ட் டைம் வேலையில் சம்பளமாக கிடைத்த பணத்தை கொண்டு பணம் கொடுத்து உதவுகிறார். சில நாட்களுக்கு பிறகு அவளுடைய தொலைவில் இருக்கும் தந்தையை சந்திக்க முயற்சி செய்யும் RIKAKO அதற்காகத்தான் பணம் சேர்க்கிறார் என்பதை விமான நிலையத்தில் அவரை சந்திக்கும்போது புரிந்துகொள்ளும் TAKI அவரோடு பயணித்து அவருடைய தந்தையை சந்திக்க செல்லும் பயணத்தில் உதவுகிறார். பின்னாளில் சின்ன சின்ன சண்டைகளால் பிரிந்துவிடும் TAKI மற்றும் RIKAKO மறுபடியும் எப்படி சந்திக்கிறார்கள்.  இந்த திரைப்படம் ஒரு மென்மையான லவ் ஸ்டோரியாக இடம்பெறுகிறது. இந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் ஜப்பானிய பாரம்பரிய அனிமேஷன் இந்த திரைப்படத்தை இன்னும் சிறப்பாக மாற்றியுள்ளது. 





CINEMATIC WORLD - 023 - THE SECRET LIFE OF PETS - TAMIL REVIEW - உங்கள் செல்லப்பிராணிகளின் வெளியுலக சாகசங்கள் !! [REGULATION-2024-00040]

இந்த திரைப்படம் 2016 ல வெளிவந்தது , இந்த திரைப்படத்தின் கதை மேன்ஹாட்டன் நகரத்தில் இருக்கும் KATIE இன் செல்லப்பிராணியாக இருக்கும் மேக்ஸ் (MAX) ஒரு கட்டத்தில் புதிய நண்பர் டியூக் (DUKE) உடன் தொலைஞ்சு போகிறார் , பொதுவா செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களை வெறுக்கும் ஒரு குட்டி முயலின் கைவிடப்பட்ட செல்லப்பிராணிகள் சங்கத்திலும் வேற வழி இல்லாம சேரவேண்டிய நிலைமையும் வருது , அவங்ககிட்ட இருந்து எப்படியாவது எஸ்கேப் ஆனதுக்கு அப்புறம் டியூக்மற்றும் மாக்ஸ் திரும்பவும் சொந்த  வீட்டுக்கு போனாங்களா ? அப்டிங்கறதுதான் கதை .. இந்த திரைப்படத்தில் நகைச்சுவை வேற லெவல் ல இருக்கும். கலகலப்பான SCREENPLAY , வண்ணமயமான VISUAL EFFECTS அப்படின்னு இந்த MOVIE வேற லெவல் . இல்லூமினேஷன் ஸ்டுடியோ எங்கேயோ இருந்து இப்போ மினியான்ஸ் மூலமாக உலக அளவில் பாராட்டுகளை பெற்று இருக்கிறார்கள் என்றால் அவர்களுடைய தங்க கிரீடத்தில் பதிக்க வேண்டிய வைரம்தான் இந்த படம். இந்த படம் நான் TAMIL DUBBING ல பார்த்தேன். செம்ம என்ஜாய்மெண்ட். படம் உங்களுக்கு ரொம்ப நல்லாவே பொழுது போகும். வீட்டுல இருக்கும் வரைக்கும்தான் சந்தோஷ் இப்படி இருப்பான் ஆனால் வீட்டை விட்டு வெளியே எப்படி இருப்பான் தெரியுமா ? என்று கேட்கும் கேள்வி போல ஒரு ஒரு வீட்டுடைய பேட்டும் தனித்தனி பெர்சனாலிட்டியாக இருக்கும். கிளைமாக்ஸ்ல எப்படி இவ்வளவு அருமையாக அனிமேஷன் டிசைன்களை கொடுத்து இருக்கிறார்கள். கண்ணுக்கு தெரிந்தே நகரக்கூடிய செல்லப்பிராணிகள் நிறைய இருக்கிறதே எல்லா பிராணிகளுக்கும் எப்படி அனிமேஷன் டிசைன் பண்ணியிருப்பார்கள் என்று நினைத்தாலே ரொம்பவுமே அதிசயமாக இருக்கு. பெரிய லெவல் வொர்க் பின்னணியில் பண்ணியிருக்கிறார்கள். நான் முன்னதாக சொன்ன மாதிரி இந்த படம் ஹாலிவுட் அனிமேஷன் சினிமாவில் பதிக்கப்பட வேண்டிய வைரம். அவ்வளவுதான். இன்னைக்கு நம்ம தமிழ் டாக்கீஸ்  !!!  . அடடா.. மைண்ட் வேற பக்கம் போயிருச்சு !! இன்னைக்கு நம்ம தமிழ் வெப்சைட்ல நம்ம நிகழ்ச்சிகள் புடிச்சு இருந்தால் மறக்காமல் ஃபாலோ கொடுங்கள். மேலும் இந்த விளம்பரங்களை கிளிக்கோ கிளிக் என்று கிளிக் பண்ணுங்கள். எனக்கும் கொஞ்சம் சம்பளம் கிடைக்கும். 

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...