Monday, June 3, 2019

CINEMATIC WORLD - 024 - TANGLED - TAMIL REVIEW - கலகலப்பான காதல் கதை



 


இந்த திரைப்படம் 2010 ல் வெளிவந்த ஒரு கலகலப்பான காதல் கதை , ராபென்சைல் என்ற கதையின் கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருந்தாலும் அனிமேஷன் எல்லாமே இந்த திரைப்படத்தில் ஒரு அருமையான மாயாஜாலங்கள் நிறைந்த கதையை சொல்லக்கூடிய பாணியில் சிறப்பாக இருக்கும் , ராபென்சைல் சிறுவயதில் ஒரு இளவரசியாக இருந்து கடத்தப்பட்டு பின்னாளில் நிறைய வருடங்கள் அடைத்து வைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறாள் , ஒரு முறை லின் என்ற ஒரு நல்ல மனதுள்ள கொள்ளையனை சந்திக்கும்போது அவனுடைய உதவியுடன் இந்த உலகத்தை சுற்றிப்பார்க்க புறப்படும்போது நடக்கும் சம்பவங்களும் சாகச பயணங்களும் இந்த திரைப்படத்தின் கதை. இந்த படம் ஒரு அளவுக்கு பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டுதான் ஆனால் இன்னும் பெரிய ஹிட் கொடுத்து இருக்கலாம் இந்த திரைப்படத்தின் அனிமேஷன் கதைக்களத்துக்கு பொருந்தக்கூடிய வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டு இருக்கும். ஸ்டோரி எளிமையாக இருந்தாலும் ஸ்டோரி டெல்லிங் அருமையாக இருப்பதுதான் இந்த திரைப்படத்தின் ப்ளஸ் பாய்ண்ட் . நீங்கள் பார்க்கவேண்டிய திரைப்படங்களின் பட்டியலில் நிச்சயமாக இந்த திரைப்படத்தை சேர்த்துக்கொள்ளலாம் . மேலும் பிரின்ஸ் லின் - ராபன்ஸல் காதல் கதை இந்த படத்தில் பார்க்க ஜோடிப்பொருத்தம் கியூட்டாக இருக்கும். CGI கண்டிப்பாக ரொம்ப பெரிய பொருட்செலவில் எடுத்து இருக்கிறார்கள் அது உங்களுக்கு படம் பார்த்தாலே புரியும். ஃபேண்டஸி கதைகள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் இந்த கதையும் உங்களுக்கு பிடிக்கும். கொஞ்சம் மியூசிக்கல் படங்களின் டச் இருக்காதான் செய்கிறது. டைட்டானிக் மாதிரி கப்பல் கவுந்து போகும் கதை மட்டும் காதல் கதை இல்லைங்க இந்த மாதிரி கிளைமாக்ஸ்ல ஹீரோவும் ஹீரோயினும் சேர்ந்தாலும் அதுவும் நல்ல காதல் கதைதான். சுபம் போட்டு கதையை முடிப்போம். இந்த வலைப்பூவுக்கு தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க. நல்ல படமா பார்த்து நான் உங்களுக்கு ரெகமண்ட் பண்ணுறேன். அதுவரைக்கும் வணக்கம் !




JUST TALKS - ஆஸ்கார் அவார்டு வாங்கிய ஷார்ட் பிலிம்கள் !

2000 : My Mother Dreams the Satan's Disciples in New York 2001 : Quiero Ser (I Want to Be) 2002 : The Accountant 2003 : This Charming Ma...