BRUCE WAYNE அவர் வாழ்ந்துகொண்டு இருக்கும் GOTHAM CITY ல் நடக்கும் குற்றங்களை தடுக்க BATMAN என்ற அடையாளத்தை தேர்ந்தெடுக்கிறார் . LEAGUE OF SHADOWS என்ற அமைப்பின் முலமாக பெற்ற பயிற்சியின் உதவியுடனும் BATMAN SUIT, BAT-MOBILE CAR போன்ற நவீன சாதனங்களுடன் குற்றங்களை தடுக்கிறார் , ஆனால் ஒரு கட்டத்தில் அந்த LEAGUE OF SHADOWS அமைப்பு GOTHAM CITY ஐ அழிக்க முயற்சிக்கும்போது பேட்மேனால் GOTHAM நகரத்தை அவர்களிடம் இருந்து காப்பாற்ற முடிந்ததா என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை , இந்த திரைப்படம் நிச்சயம் பார்க்கவேண்டிய திரைப்படம் , 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது. CHRISTOPHER NOLAN அவருடைய வழக்கமான கான்செப்ட்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக இந்த படத்தில் வொர்க் பண்ணியிருப்பார். இந்த படம் பேட்மேன்க்கு எப்படி இவ்வளவு சண்டை பயிற்சிகள் தெரிந்து இருக்கிறது என்பதற்க்கு PROPER ஆன காரணம் சொல்ல மிக மிக ஆரம்பத்தில் இருந்தே BRUCE இன் வாழ்க்கையை காட்டுகிறது. இங்கே மெச்சூரிட்டி என்பது அவனுடைய ஒருவனுடைய சந்தோஷத்துக்காக அப்பா அம்மாவை கொன்றவனை பழிவாங்க கொலை பண்ண செல்லும் BRUCE எப்படி அந்த மொத்த நகரத்தையுமே CORRUPT ஆன கெட்டவர்களின் நெட்வொர்க்கிடம் இருந்து தனி ஒரு ஆளாக காப்பாத்த போராடுகிறான் என்னும் அளவுக்கு DEVOLOP ஆகிறான் என்பதுதான். கண்டிப்பாக TIM BURTON இன் BATMAN படங்களை இன்ஸ்பிரேஷன் பண்ணி இருக்கிறார். மேலும் ஒரு சூப்பர் ஹீரோ படம் என்று பார்த்தாலும் NOLAN நல்ல SCREENPLAY கொடுத்து இருக்கிறார். SCARECROW என்ற வில்லனை காட்டும்போது விஷுவல் EFFECTS க்கும் வேலை கொடுத்து இருக்கிறார்.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Saturday, October 13, 2018
CINIMATIC WORLD - 017 - INCEPTION - TAMIL REVIEW - கனவு கனவு ! கனவு மேல கனவு ! [REGULATION-2024-00033]
DOM COBB மற்றும் அவரது கனவு ஆராய்ச்சி குழுவில் இருக்கும் இந்த புத்திசாலிகள் எல்லோரும் மற்றவர்களின் கனவுகளுக்குள் சென்று அவர்களின் நினைவுகளில் இருந்து குறிப்பிட்ட தனிப்பட்ட தகவல்கள் (பாங்க் பின் , பினாமி அக்கவுண்ட் , ஆதார் கார்ட் ஜெராக்ஸ் , எல் ஐ ஸி பாலிசி மாதிரியான தகவல்கள் ) எல்லாவற்றையும் எடுக்கும் சக்திகள் கொண்டவர்கள் , ஆனால் இதுபோல கனவுகளுக்குள் செல்லும்போது ஒரு முறை அந்த கனவில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்படுகிறது , அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் இன்செப்ஷன் திரைப்படத்தின் திரைக்கதை , இந்த திரைப்படத்தின் விசுவல் எஃபக்ட்ஸ் மற்றும் திரைக்கதை சிறப்பாக இருப்பதால் மிஸ் பண்ணாமல் பார்க்கவேண்டிய திரைப்படம் ..2010 ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் அந்த ஆண்டு நான்கு அகாடமி AWARDS வென்றது. இந்த படத்தில் கனவுக்குள் செல்லும் காட்சிகள், கனவு உலகம் உடைந்துபோகும் காட்சிகள் இந்த காட்சிகள் எல்லாமே மிகவும் சிறப்பாக காட்சியமைப்பு செய்யப்பட்டு இருக்கும். கதைக்களம் மிகவும் தெளிவாக எக்ஸ்பைளைன் செய்யப்பட்டு இருப்பதும் இந்த படத்தில் ஒரு பிளஸ் பாய்ண்ட் எனலாம். கண்டிப்பாக CLIMAX பற்றி சொல்லியே ஆக வேண்டும் இந்த படத்துடைய இறுதி காட்சி ரொம்பவே அருமையாக இருக்கும் கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்க !! எனக்கும் இதே மாதிரி ஒரு கனவு வரும் , பாஸ் நீங்க சர்வீஸ் கொடுத்த ஃபோன் ரெடி ஆயிருச்சு நான் வேணும்னா கூரியர் போட்டு பார்சல் உங்க வீட்டுக்கு அனுப்பட்டுமா என்று ஒருவன் எனக்கு புது போனில் கால் பண்ணி கேட்பான் !! நானும் அந்த போனை அனுப்புங்க ப்ரோ ! என்று சொல்லிவிட்டு ஃபோன்னை வைத்துவிடுவேன் ! டேய்..கனவுல கூட வேலை பார்க்கும் கம்பெனிக்கு விசுவாசமா இருக்கியே ! உன்னை எல்லாம் என்னன்னு சொல்ல !! நீ நல்லா இருப்ப மச்சான் ! உன் நல்ல மனசுக்கு ஒண்ணும் ஆகாது !
இந்த திரைப்படத்தின் ட்ரைலர் :
CINIMATIC WORLD - 016 - THOR - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00032]
கடவுளுக்கே பிரச்சனைன்னா என்னதான் பண்ண முடியும் ? இடி மின்னலை கட்டுப்படுத்தும் சக்தி உள்ள இளவரசர் THOR ODINSON , அவருடைய தந்தை ODIN நிர்வாகத்தில் பிரபஞ்சத்தை கட்டுப்படுத்தி இந்த படத்தில் சொல்வது போல ஒன்பது மண்டலங்களிலும் ஆதிக்கம் நிலைநாட்டி அமைதியை பாதுக்கக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆனால் நம்ம THOR கோபத்துக்கே பிறந்து கோபத்துக்கே வளர்ந்தவர். ஒரு கட்டத்தில் இவர் பூமிக்கு தண்டனைக்காக அனுப்பப்படுகிறார் இங்கே இன்னொரு திருப்பம் இவருடைய மின்னல் சக்தியும் சுத்தியல் பறிக்கப்பட்டதால் போகிறது. செம்ம கடுப்பில் அப்பா ODIN இருப்பதால் வீட்டுக்கு போக சான்ஸ்ஸே இல்லாமல் போகும்போது ஒரு மாஸ்டர் பிளேன் போட்டு நம்ம THOR ன் இளைய சகோதரர் மற்றும் மாயாஜாலங்களில் சிறந்தவராக இருக்கும் LOKI மணிமுடியை எடுத்து அரசராக முயற்சி செய்கிறார். இப்போது காதல் , குடும்பம் , அன்பு என்று பூமியில் நிறைய விஷயத்தை கற்றுக்கொண்ட நம்ம THOR ஆல் LOKI ன் இந்த கொலை முயற்சியை தடுக்க முடிந்ததா ? என்பதுதான் திரைக்கதை , இந்த திரைப்படம் 2011 ல் வெளிவந்தது. இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் THOR THE DARK WORLD - 2013 ல் வெளிவந்ததது. இது ஒரு கமர்ஷியல் படம் ஆனால் பார்க்க நன்றாக இருக்கும். ஒரு சூப்பர் ஹீரோ தன்னை பற்றி மட்டும் நினைத்து ஆணவமாக இருக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய மனது மாறுகிறது. மற்றவர்களுடைய உயிர் அவருடைய உயிரை விட முக்கியம் என்ற முடிவுக்கு வருகிறார். இதுதான் அன்புடைய மாயாஜாலம். இந்த படம் அவெஞ்சர்ஸ் படத்துக்காக THOR கதாப்பாத்திரத்தை INTRO கொடுக்க எடுக்கப்பட்ட படம் என்றாலும் இந்த படத்தின் நல்ல கருத்துதான் இந்த படத்தை திரும்ப திரும்ப பார்க்க வைக்கிறது.
CINIMATIC WORLD 015 - MARVEL : CAPTAIN AMERICA : THE FIRST AVENGER - [REGULATION-2024-00031]
Steve Rogers இரண்டாம் உலகப்போர் நடக்கும் 1942 ம் ஆண்டு Military Recruitment ல் சேர நினைக்கிறார் , ஆனால் சில காரணங்களால் Super Soldier Experiment மூலமாக வலிமையான ஒரு Superhuman ஆக மாறுகிறார் , Johann Schmidt என்பவர் Tesseract என்ற அதிசயமான ஒரு பொருளின் சக்திகளை பயன்படுத்தி அவருடைய Hydra என்ற அமைப்பின் உதவியுடன் உலகை கைப்பற்ற நினைக்கிறார் , அந்த அமைப்பை எதிர்க்கும் Captain America (Steve Rogers )அந்த அமைப்பு மூலமாக ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் போராட்டம்தான் இந்த Captain America திரைப்படத்தின் கதை , இந்த திரைப்படம் 2011 ல் வெளிவந்தது , இந்த திரைப்படத்தை தொடர்ந்து The Avengers திரைப்படம் வெளிவந்தது ..
CINIMATIC WORLD - 014 - MARVEL : IRON MAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - இரும்பில் இருதயம் முளைத்த கதை !! - [REGULATION-2024-00030]
TONY STARK ஒரு தொழில் அதிபர் , கண்டுபிடிப்பாளராக இருப்பவர் . ஒரு கட்டத்தில் இவரது தொழில்நுட்பம் மோசமானவர்களால் பயன்படுத்தப்பட்டு இந்த விஷயம் அவருக்கு தெரியும் முன்பே TEN RINGS என்ற மோசமானவர்களின் அமைப்பை சேர்ந்தவர்களால் கடத்தப்படுகிறார் . ஆனால் ஒரு வழியாக அவர்களிடம் இருந்து YINSEN என்ற நல்ல மனம் உள்ள மருத்துவரின் உதவியுடன் ELECTROMECHANICAL கவசம் தயாரித்து அதன் மூலமாக தப்பிக்கிறார் . மேலும் ELECTROMECHANICAL கவசங்களின் உதவியுடன் Iron Man என்ற அடையாளத்துடன் அந்த மோசமான அமைப்பை எதிர்த்து போராட நினைக்கிறார் .. அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் கதை . இந்த திரைப்படம் 2008 ம் ஆண்டு வெளிவந்தது . MCU என்ற திரைப்பட வரிசையில் (MARVEL CINEMATIC UNIVERSE) - இந்த திரைப்படம் முதல் திரைப்படம் ஆகும் . இந்த படம் வெளிவந்த வருடத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளவும் 2008 , இந்த காலத்தில் இவ்வளவு எக்ஸ்பேன்ஸ் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் இருக்கும் படம் பார்ப்பது அரிது. இந்த படம் மற்ற சூப்பர் ஹீரோ படங்களை போலவே போயிருக்கலாம் , ஆனால் கதையை ரொம்பவுமே அருமையாக கொடுத்து இருப்பார்கள் , டோனி ஸ்டார்க் யாரை பற்றியும் கவலைப்படாமல் தனி ஒரு மனிதனாக வாழும் ஒரு கோடீஸ்வரர், அவருடைய தொழில் நுட்பத்தால் ஆயுதங்களை பாதுகாப்பு துறைகளுக்கு கொடுக்கும்போது பயங்கரவாதிகளால் கடத்தப்படுகிறார், இருந்தாலும் அடைத்து வைக்கப்பட்ட இடத்தில் அவருக்கு கிடைத்த ஒரே ஒரு நண்பரான யின்ஸேன் உதவியுடன் கிடைத்த பொருட்களை எல்லாம் வைத்துக்கொண்டு ஒரு மெட்டல் கவசத்தை செய்து உயிரை பணயம் வைத்து தப்பித்து அமெரிக்கா திரும்புகிறார். ஆயுதங்களை உருவாக்குவதை அடியோடு விட்டுவிட்டு அடுத்தவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு IRON MAN கவசத்தை உருவாக்குகிறார். இந்த படத்தில் ஒரு தனி மனிதனாக பயங்கரவாதிகளோடு சண்டை போடும் அந்த காட்சிதான் எனக்கு பிடித்து இருந்தது. அதாவது நிகழ்கால வன்முறையில் ஹெல்ப் பண்ண யாருமே வரமாட்டார்கள். ஆனால் ஒரு சூப்பர் ஹீரோவாக டோனி ஸ்டார்க் அவருக்கு பிரச்சனைகள் வரும் என்று தெரிந்தும் அங்கே இருக்கும் அப்பாவி குடும்பங்களை காப்பாற்ற களத்தில் குதிக்கிறார். இதுதான் மற்ற சூப்பர் ஹீரோக்களுக்கும் டோனி ஸ்டார்க்குக்கும் இருக்கும் வித்தியாசம். அதுதான் இந்த IRON MAN படங்களை தனித்து காட்டுகிறது. அதனால்தான் ஹிட் அடிக்கிறது.
Wednesday, October 10, 2018
CINIMATIC WORLD - 013 - HOTEL TRANSYLVANIA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! [REGULATION-2024-00029]
COUNT DRACULA ஒரு ஹோட்டல் TRANSYLVANIA என்ற MONSTERS களுக்கான ஹோட்டலை நடத்துபவர் , இப்போது ஒரு புதிய பயணி JONATHAN தவறுதலாக MONSTERS களின் இந்த HOTEL கு வருகை தருகிறார் . இதனால் COUNT DRACULA ஒரு மனிதன் இங்கே வந்திருப்பதை யாருக்கும் சொல்லாமலே எப்படி எப்படியாவது சமாளிக்க முயற்சி செய்கிறார் .. இப்படியே போகும் திரைக்கதையில் அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் HOTEL TRANSYLVANIA ன் கதை . THE MUMMY , FRANKIENSTIEN , WEREWOLF , INVISIBLE MAN என ஒரு MONSTER பட்டாளமே நகைச்சுவையான கதாபாத்திரங்களாக இருப்பது இந்த திரைப்படத்தின் கலகலப்பான திரைக்கதையை அமைக்கிறது . இந்த திரைப்படம் 2012 ம் ஆண்டு வெளிவந்தது . பேஸிக்காக இது ஒரு வித்தியாசமான காதல் கதை. இந்த படம் வெளிவந்த காலத்தில் நல்ல விமரசங்களை பெற்றது என்பதை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் !!
CINIMATIC WORLD - 012 - MINIONS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! [REGULATION-2024-00028]
மினியன்ஸ் ஒரு அசத்தலான நகைச்சுவை திரைப்படம் /DESPECABLE ME திரைப்படங்களில் வரும் குட்டி குட்டி மினியன்ஸ் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா .. ? இந்த விமர்சனத்தில் இந்த படத்தின் கதையை தெரிந்துகொள்வதை விட படமாக பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளுங்களேன் இங்கே அதற்காகவே ஒரு கலகலப்பான திரைப்படம் . KEVIN , BOB , STUART இருக்கும் மினியன்ஸ் குழு தலைவராக இருக்க ஒரு வில்லனை தேடுகிறது .. இந்த தேடலில் லண்டன் செல்லும் இவர்களுக்கு அறிமுகமாகும் கதாபாத்திரம்தான் SCARLETT. நிறைய கலகலப்பான சம்பவங்களுடன் அருமையான திரைக்கதையில் இந்த 3D திரைப்படம் அருமையாக உள்ளது .. நிச்சயம் மிஸ் பண்ணாமல் பார்க்கலாம் ..இன்னும் சொல்லப்போனால் வலைப்பூ கமிட்டியின் சார்பாக இந்த படம் ஒரு சிறப்பு #MOVIE_RECOMMENDATION. இந்த படம் எதனால் பேர்ஸனலாக பிடிக்கும் என்றால் ஒரு ஆரிஜின் ஸ்டோரியில் இருந்து நம்ம காதனாயாகர்களின் வாழ்க்கையை ஃபாலோ பண்ணிக்கொண்டு இருக்கிறோம். இப்படி ஒரு ஸ்மார்ட்டாக உருவாக்கப்பட்ட திரைக்கதையை நான் வேறு எந்த படங்களிலும் பார்த்தது இல்லை. இந்த படத்துக்கு நிறைய பிளஸ் பாயிண்ட்கள் உள்ளது அதுக்காக தனியாக கட்டுரையே போடலாம். இருக்கட்டும் ! இந்த வலைப்பூவை அனைத்து இதழ்களையும் பாருங்கள் !! உங்களுக்கு கண்டிப்பாக இந்த வலைப்பூ பிடிக்கும்.
CINIMATIC WORLD - 011 - SING - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - உங்களில் யார் அடுத்த சூப்பர் சிங்கர் !! - [REGULATION-2024-00027]
இந்த திரைப்படம் 2016 ல் வெளிவந்தது ..இந்த திரைப்படம் Music பிடித்தவர்களுக்கு நிச்சயமாக பிடிக்கும் .. இந்த திரைப்படமும் ஒரு அருமையான அனிமேஷன் திரைப்படம்தான் .இப்போது இந்த திரைப்படத்தின் கதை .. " நஷ்டத்தில் இருந்தாலும் அவருடைய இசை அரங்கத்தை விட்டுக்கொடுக்க மனம் இல்லாமல் KOALA அவருடைய இசை நிகழ்ச்சியை நடத்த முயற்சி செய்கிறார் .. இருந்தாலும் ஒரு தவறுதலால் இசை நிகழிச்சியின் பரிசு தொகை ஆயிரம் டாலர்கள் என்பதற்கு பதிலாக லட்சம் டாலர்கள் என பதியப்பட்டுவிட்டது . இந்த உண்மை தெரியாமலே உரிமையாளர் KOALA இசை நிகழ்ச்சியை நடத்த நினைக்கிறார் .. இன்னும் நிறைய கனவுகளுடன் பங்குபெறும் போட்டியாளர்கள் எல்லோருக்கும் ஒரு கட்டத்தில் இந்த உண்மை தெரியவருகிறது .. இனிமேல் என்ன நடக்கும் என்பதுதான் SING திரைப்படத்தின் கதை .. ZOOTOPIA திரைப்படத்தில் இருப்பது போலவே இந்த திரைப்படத்திலும் Animals அனிமேஷன் கதாபாத்திரங்கள் அருமை .. மாயாஜாலங்களும், அறிவியல் விஷயங்களும் இல்லாமல் எதார்த்தமான திரைக்கதையும் இந்த திரைப்படத்தின் தனித்தன்மையாக . இந்த திரைப்படம் நிச்சயமாக எல்லோரும் பார்க்கலாம் . இல்லூமினேஷனின் மற்ற படங்கள் போல இந்த படம் இல்லை. இது ஒரு முழுக்க முழுக்க மியூசிக்கல் ஜெனர்க்கு அர்ப்பணிப்பு பண்ணப்பட்ட படம். கிளைமாக்ஸ்ல உங்களுக்கு அது புரியும். இந்த TROLLS படம் போல மியூசிக்தான் இந்த படத்தின் கதையின் ஆணிவேர். நம்ம ஊரு முகவரி படம் போல மியூசிக் மற்றும் பாடல் துறையில் சாதிக்க முனைவோருக்கு இந்த படம் இண்டரெஸ்ட்டிங்காக இருக்கலாம் மற்றபடி பொதுவாக ஆடியன்ஸ் பார்த்தாலும் கதை நன்றாகத்தான் இருக்கும். மொக்கை போட்டு இருக்க மாட்டார்கள்.
Tuesday, October 9, 2018
CINIMATIC WORLD - 010 - DESPICABLE ME 2 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00026]
2010 ஆண்டு வெளிவந்த DESPICABLE ME திரைப்படத்தின் அடுத்த பாகம்தான் இந்த DESPICABLE ME 2 . இந்த MOVIE ல GRU ஒரு வில்லனாக இருப்பதால் ANTI VILLAIN LEAGUE வில்லன்களை தடுக்கும் அமைப்பு ல இருக்கும் LUCY உடன் இணைந்து PX 41னு ஒரு பொருளை எப்பவுமே சொன்ன விஷயத்தை தவிர மற்ற எல்லா விஷயத்தையும் செய்யும் MINIONS உடன் சேர்ந்து தேடுறாங்க .. இப்போ புதிதாக உதயமாகும் வில்லன் EL MACHINO இடம் இருந்து GRU எல்லோரையும் காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள்தான் இந்த திரைப்படத்தின் கதை .. படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரைக்கும் MINIONS யின் கலாட்டாவுடன் கலகலப்பாக இருக்கும் இந்த படம் மிஸ் பண்ணாம பார்க்கவேண்டிய ஒரு நல்ல திரைப்படம் இந்த திரைப்படம் 2013 ல் வெளிவந்தது . இந்த படத்தில் GRU LOVES LUCY என்று ஒரு ரொமான்டிக் காமெடி எலிமெண்ட்ஸ் எல்லாம் நிறையவே இருக்கும் கூடவே மினியான்ஸ் காமேடியும் இருக்கும். என்னதான் ஒரு காலத்தில் ஊரையே உள்ளங்கையில் வைத்து இருந்த சூப்பர் வில்லனாக இருந்தாலும் இப்போது GRU வை மூன்று குழந்தைகளின் வளர்ப்பு அப்பாவாக பார்க்கும்பொது நன்றாகத்தான் இருக்கிறது. படம் முழுக்க நல்ல பாசிட்டிவ்வான விஷயங்கள் இருக்கிறது. EL MACHINO வரும் வரைக்கும்தான்.இங்கே MINIONS பற்றி என்ன சொல்ல ? அடுத்து என்ன பண்ணும்ணு கொஞ்சம் கூட கணிக்க முடியாத இந்த மினியான்ஸ் ரொம்பவுமே புத்திசாலித்தனமா செயல்படக்கூடிய இவைகள் அடிப்படையில் ஒரு ஐஸ்கிரீம்க்கு ஆசைப்பட்டுக்கூட பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது. மொத்தத்தில் இல்லுமினேஷன் ஸ்டுடியோவில் இருந்து இன்னொரு தரமான படைப்பு இந்த DESPICABLE ME 2. போன படத்துக்கு நல்ல இம்ப்ரூவ்மெண்ட். மினியான்ஸ்க்கு இன்னும் நிறைய சினிமா படங்கள் கொடுங்கள். கொஞ்சம் கூட யோசிக்காம முடிவுகளை எடுக்கும் நம்பிக்கையான இந்த குட்டி சொல்ஜெர்ஸ் இப்போது மக்களின் மிக விருப்பமான ஹீரோக்களாக மாறிவிட்டார்கள்.
Subscribe to:
Posts (Atom)
MUSIC TALKS - KONJI KONJI ALAIGAL ODA KODAI THENDRAL MALARGAL AADA - KAATRILE PARAVUM OLIGAL - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !
ஒரு கோல கிளி சோடி தனை தேடுது தேடுது மானே அது திக்க விட்டு திசையை விட்டு நிக்குது நிக்குது முன்னே அது இப்போ வருமோ எப்போ வருமோ ஒரு சோள குயில் ...
-
இந்த படம் நேரடியான எக்ஸ் மென் படங்களின் வரிசைக்கு ஒரு முடிவாக இருக்க வேண்டும் என்று முடிவு பண்ணி எடுத்ததாலோ என்னவோ கொஞ்சம் டிஸப்பாயிண்ட்மென்...
-
இந்த படம் கொஞ்சம் வித்தியாசமாக ட்ரை பண்ணிய படம் என்று சொல்லலாம். கடந்த டிஸ்க்கேப்பல் மீ 1 மற்றும் 2 படங்களோடு கம்பெரிஸன் பண்ணினால் கதையை விட...