Wednesday, October 26, 2022

OREY NAALIL PANAM SAMPATHIPPATHU EPPADI ? - SEMMA DETAIL ARTICLE - :) - [REGULATION 2024 - 00083]


1. முன்னதாக "ஒரே நாளில் பணக்காரன் ஆவது எப்படி ?" - இப்படி ஒரு கட்டுரையை நான் எதுக்கு எழுதணும் ? இப்போ என்ன பண்ணணும்னு நான் சொல்லறேன் பணக்காரன் ஆக முடியலாம் . இல்லைன்னா முடியாமல் கூட போகலாம் ஆனால் கண்டிஷன் போடாம உலகம் சொல்லற எல்லா வேலைகளையும் செய்ய முடியுமா ? அதுதான் என்னோட கேள்வி ?  முடியாதுன்னா இப்பவே பின்னாடி போகனும். முடியும்னா மட்டும் கொஞ்சம் கூட யோசிக்காம இந்த கட்டுரையை கவனிக்கவும் ! இந்த விஷயத்தை நான் எதுக்கு சொல்லறேன்னா  இந்த அட்வைஸ் கொடுக்கறேன் ! இந்த அட்வைஸ் யாருமே ஃப்ரீயாக கொடுக்க மாட்டாங்க !! பணம் சம்பாதிக்கறதுல இருக்கற பெரிய பிரச்சனை DARK PATTERNING

2. என்ன படிச்சு இருக்க ? நீதி  , நேர்மை , நியாயம் ! அப்போ சத்தியம் தர்மம் எல்லாம் அரியர்ஸ் வெச்சு இருக்கியா ? 

"ஃபர்ஸ்ட் பேட்ச் ! படிச்சவங்க , பணக்கார ஆடியன்ஸ் , செகண்ட் பேட்ச் , படிப்பு ஒரு அளவுக்குதான் , ஏழை ஆடியன்ஸ் . நான் இந்த கட்டுரையில் இருக்கும் அட்வைஸ்களை இரண்டு தனித்தனி பாகமாக பிரிக்கிறேன் . இந்த இரண்டு ஆடியன்ஸ்ஸும் என்கிட்ட சண்டைக்கு  வரக்கூடாது. பொதுவாக எக்கனாமிக் பேலன்ஸ்ன்னு ஒரு விஷயம் இருக்கு. எங்கேயோ ஒரு இடத்துல தங்க துகள்களும் , வைர கட்டிகளையும் மண்ணுக்குள்ள இருந்து எடுத்து ஒருவர் பணக்காரனாக மாறிவிட்டால் ஒரு விவசாய அமைப்பின் நூறு வருட விளைச்சலை தனி ஒரு ஆளாக வாங்கிவிடாலாம் , அப்போ பவர் எங்க இருக்கு ? பவர் என்ற விஷயம் பொருட்களில் பெரும்பான்மையாகவும் , அறிவுப்பூர்வமான செயல்பாட்டில் கொஞ்சமும் இருக்கிறது. உன்னிடம் பொருட்கள் இருந்தால் மதிப்பார்கள் , பணமாக இருந்தாலும் மதிப்பார்கள் ! இப்போ நான் உன்கிட்ட ஒரே நாளில் பணக்காரன் ஆவது எப்படின்னு சொல்லறேன்னு இந்த கட்டுரையில் சொல்லி இருக்கிறேன். [முக்கியமான குறிப்பு ! என்னை விட வயதானவர்கள் , இல்லையென்றால் உயர் பதவியில் இருப்பவர்கள் நான் ஒருமையில் பேசுவதை தப்பாக நினைக்க வேண்டாம் !! நான் என்னுடைய வயதை விட சின்னவங்களுக்காகதான் இந்த போஸ்ட் எழுதுகிறேன் ! பெரியவர்கள் இந்த போஸ்ட் படித்து தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். [நான் 30+ வயது உள்ளவன்] 

3. முடியுமா ? முடியாதா ?

1-2 வருஷம் , இல்லைன்னா அதுக்கு மேல நீ வேலை பார்க்கணும் , இல்லைன்னா உனக்கு கீழ வேலை செய்யும் மக்கள் உனக்காக சம்பாதித்து போடணும் !!  முடியாது !! ஆமாம் ஒரே நாளில் முடியாது !! ஆனால் வெறும் 100 வருஷம்ன்னு கணக்கு பண்ணா கூட 36500 நாள்தான் வாழப்போறோம் , 50 வயதுக்கு மேல பணம் சேர்த்தும் எந்த பிரயோசனமும் இல்லை. இதனால நான் சொல்ல வரும் பாயிண்ட் என்னவென்றால் நாம் சேர்க்கும் பணத்தை 40 களுக்குள் ஒரு பகுதியை நாம் தரமாக செலவு பண்ணனும், இப்போ ஒரு இயர்க்கு உன்னோட நெட் பிராஃபிட் 36,50,000 என்றால் பேர் டேக்கு 10,000 சம்பளம் பார்த்த மாதிரிதானே !! அதனாலதான் நான் ஆன்லைன்ல மற்றும் ஆஃப்லைன்ல என்னென்ன வேலைகள் கிடைக்குமோ எல்லாத்துக்குமே உனக்கு பிசினஸ் இண்டராடக்ஷன் கட்டுரைகள் போட்டு அதுக்கு இந்த குறிப்பிட்ட போஸ்ட்டில் HYPERLINK கொடுக்கிறேன். இந்த போஸ்ட் 2 வருடத்தில் பணக்காரன் ஆவது எப்படி என்பது பற்றியதுதான் , ஒரே நாளில் பணக்காரன் ஆக முடியாது !! ஆனால் PER DAY வருமானத்தை உன்னால் உயர்த்த முடியும் !! 
 

இங்கே எதனால் நான் மோட்டிவேஷன் புத்தகம் போல எழுதவில்லை என்றால் பின்வரும் மொக்கையான டெக்ஸ்ட் போல கதையாக சொல்லி ஃபில் அப் பண்ண நான் விரும்பவில்லை :


மொக்கையான டெக்ஸ்ட் ஆன்சர்ஸ் இப்படித்தான் இருக்கும் :

இந்த உலகத்தில் வெற்றியை அடைய வேண்டும் என்றால் நம்முடைய பாதை ஒரு நேரான நேர்க்கோட்டில் செல்லும் அம்பு போல இருக்க வேண்டும். இந்த உலகத்தில் எல்லோருமே நல்லவர்களாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும் ஆனால் இங்கே இருப்பவர்கள் அனைவருமே நல்லவர்கள் என்று சொல்ல முடியாது. மனித வாழ்க்கையின் உண்மை என்னவென்றால் இந்த வாழ்க்கை என்பது துன்பங்களும் துயரங்களும் நிறைந்தது. மனக்கசப்புகளை கடந்து அனைவரிடமும் அன்பை கொடுக்க வேண்டும். தேவைகள் இருப்பவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வாழும் வாழ்க்கையே ஒரு சிறப்பான வாழ்க்கை என்று சொல்லலாம். ஆனால் போதுமான பணம் இல்லாததால்- உடல்நலம் சார்ந்த குறைபாடுகளால்- மோசமான சூழ்நிலைகள் என நிறைய காரணங்கள் இருக்கலாம்‌. இந்த உலகத்தில் வெற்றியாளர்களை மட்டுமே எல்லோருமே கொண்டாடுகிறார்கள்‌. தோல்வி அடைந்த மனிதர்களுக்கு அந்த தோல்விக்கு பின்னால் நிறைய காரணங்கள் இருக்கிறது. ஆனால் அந்த காரணங்களை பற்றி யாருமே கவலைப்படுவது இல்லை. தோல்வி அடைந்தவர்களை கேட்டுப்பாருங்கள். அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கும் குறைகள், பிரச்சனைகள் மற்றும் தனிப்பட்ட நிறைய விஷயங்கள்தான் அந்த தோல்விக்கு காரணமாக இருக்கும். வாழ்க்கை ஒரு போராட்டம்தான் - வாழ்வே ஒரு வியாபரம்தான் என்ற வார்த்தைகளை போல இந்த உலகமே மிகவும் மோசமானது. இதனால் ஒரு ஒரு தனிப்பட்ட மனிதரும் வெற்றியை அடைவதற்காக போராட வேண்டும். ஒரு திரைப்படம் அதனுடைய கதைக்களத்தில் மிகப்பெரிய அளவில் ஒரு கற்பனையான பிரபஞ்சத்தை உருவாக்குகிறது. அதுபோலவே கடவுள் எல்லோருக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை கொடுத்துள்ளார். கடவுள் இருக்கிறார். அவரே எல்லோரையும் காப்பாற்றுவார். இந்த உலகத்தில் எல்லோருமே நல்லவர்கள் கிடையாது. கான்செர் போன்ற உயிரை கொல்லும் நோய்கள் இருக்கும்போது இந்த உலகமே வெறுப்பாக இருக்கும், அடுத்த நாள் காலை கண்கள் விழிக்கும்போது வாழ்க்கை நரகமாக இருக்கும், அடுத்த நாள் உயிரோடு இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம், பணம் இல்லாமல் நோயை குணப்படுத்த முடியாத நிலையில் வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருக்கும். இந்த  கடவுளின் சோதனைக்கூடமா ? எல்லோருமே கடவுளின் சோதனை எலிகளா ? கடவுள் எல்லோருக்கும் இவ்வளவு கஷ்டத்தையும் வலிகளையும் கொடுக்க காரணம் என்ன ? மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது, என்னுடைய மனது பேசக்கூடிய மொழியை இந்த எழுத்துக்களால் மொத்தமாக சொல்லிவிட முடியுமா என்று எனக்கு புரியவில்லை. இல்லை இந்த எழுத்துக்களால் என்னுடைய கடினமான வாழ்க்கையை சொல்ல முடியாது.


இந்த சோதனைகளை எல்லாம் நம்முடைய காலம் எதுக்காக நமக்கு கொடுக்கிறது என்று என்னால் கன்க்ளூஷனுக்கு வரமுடியவில்லை. ஒரு குழந்தை பிறக்கும்போதே அங்க குழந்தைக்கு வாழ்க்கையின் சந்தோஷங்களையும் கஷ்டங்களையும் காலம் கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. சந்தோஷத்தில் வாழ்ந்துகொண்டு இருந்தால் காலத்துக்கு எதிராக போராடவேண்டிய அவசியமே இல்லை. காலத்தின் போக்கில் சென்றுக்கொண்டு சந்தோஷமாக இருந்துவிடலாம் ஆனால் நாம் வாழ்க்கையில் கஷ்டத்தில் வாழ்ந்துகொண்டு இருந்தால் நம்மை ஒரு இயலாமையில் மட்டும் வாழ்க்கை வைத்து இருக்கிறது. நமக்கென்று ஒரு எல்லைக்கொடு போடப்பட்டு நம்முடைய பணவரவு குறைக்கப்பட்டு சக்திகளுமே குறைக்கப்படுகிறது. இப்படி பணவரவு குறைவதால் அடிப்படையில் மூளையின் செயல்திறன் நன்றாக இருந்தாலும் நம்முடைய நல்ல திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சிகளாக நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் கானல் நீராக கரைந்துவிடுகிறது. நம்மிடம் இருக்கும் கொஞ்சம் பணமுமே நம்முடைய வாழ்க்கையில் கரைந்துவிட்டால் நமக்காக எந்த சப்போர்ட்டுமே இல்லாமல் தனித்து மோதவேண்டிய கடினமாக நிலையில் மாட்டிக்கொள்கிறோம். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு பணத்தை கொடுத்தால் பணம் நிறைய விஷயங்களில் அவர்களுடைய வாழ்க்கையை முன்னேற்றம் அடைய வைக்கிறது. 



THIS IS LIFE !! I THINK !!! - இதுதான் வாழ்க்கை !! [REGULATION 2024 - 00082]

ஒரு மாலை நேரம், செப்டெம்பர் மாதத்தின் மழைப்பொழிவு முடிந்து கொஞ்சம் தூறல் விட்டுக்கொண்டு இருந்தது. பேருந்தில் இருந்து இறங்கியதும் ஒரு கடையில் தேநீர் சாப்பிடும்போது கிரிக்கெட்- சாலை நெரிசல்- இன்றைய வானிலை நிலவரம் என்று எக்கச்சக்கமான தகவல்கள் அந்த வானொலியில் கேட்டுக்கொண்டு இருக்கும். அந்த ரேடியோவில் ஒரு பாட்டு கேட்கும். "இரு விழி உனது.. இமைகளும் உனது.. கனவுகள் மட்டும் எனதே எனது.. நாட்கள் நீளுதே.. நீ எங்கோ போனதும். ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்.. ஓஹோ ஹோ ஒரே ஞாபகம்.. ஓஹோ ஹோ.. உந்தன் ஞாபகம்.. காதல் காயம் நேரும்போது தூக்கம் இங்கு ஏது ? ஒரே ஞாபகம்.. ஒரே ஞாபகம். இங்கதான் ஒரு அன்பான கணவர் வேலை விஷயமாக வெளியூர் போக்கும்போதும் அங்கே தங்கும்போதும் மனைவியையும் குடும்பத்தையும் பிரிந்து வாழும் அந்த வாழ்க்கையின் நேசம் புரியும்..போதுமான அளவு பணம் இருந்தால் சொந்த ஊரில் ஒரு மளிகை கடையாவது வைத்து வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கலாம். குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவதை ரசிக்கலாம். தீபாவளியும் பொங்கலும் வரும்போது திரைப்படங்கள் பார்க்கலாம். பலகாரம் செய்து சாப்பிடலாம். இது எல்லாமே கொஞ்சம் அதிக சம்பளத்துக்காக முயற்சி செய்யும்போது உருவாக்கக்கூடிய பிரிவு.. இந்த பிரிவு ஒன்றும் அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல.. தொலை தூரத்தில் வேலை செய்யும்போதுதான் இந்த வாழ்க்கையில் ஒரு இனம் புரியாத உணர்வு உருவாகும்.. மழையில் ரைன் கோர்ட் போட்டுட்டு பைக்ல் இருந்து வீட்டுக்கு வந்தாலும் அந்த குளிரை தாங்கிக்கொள்ள முடியாதது போல ஒரு உணர்வு. இரவும் பகலும் வெயிலும் மழையும் என்னை ஒன்றும் செய்யாது என்ற உணர்வு. உடல் நிலை சரியில்லாதபோதெல்லாம் மாத்திரைகளும் மருந்துகளும் மட்டுமே இருக்கும்போது ஒரு தனிமையான உணர்வு. மனதுக்கு பட்டதை எல்லாம் பேச முடியாத ஒரு இடத்தில் மனம் விட்டு எல்லாமே சொல்லிவிட முடியாத மனிதர்களிடம் ஒரு ஸ்டிரேஞ்சான உணர்வு. பணம் இருந்தால் சிவாஜி படத்தில் இடம்பெற்ற சஹானா பாடல் அளவுக்கு ஒரு வாழ்க்கையை யாருமே விரும்ப மாட்டார்கள். ஒரு எளிமையான வாழ்க்கை.. ஒரு வீடு.. ஒரு பைக்..பக்கத்தில் ஒரு மளிகை கடை..தள்ளுபடி கொடுக்கும் ஒரு துணிக்கடை , கொஞ்சம் தூரத்தில் ஒரு பள்ளிக்கூடம், இன்னும் கொஞ்சம் தூரத்தில் ஒரு நல்ல ஹாஸ்பிடல் , முடிந்தால் ஒரு பஸ் ஸ்டாப் என்று அவ்வளவுதான் வாழ்க்கையில் இது இருந்தால் போதுமே.. இந்த வார்த்தைகளை படிக்கும் யாராக இருந்தாலும் குடும்பத்தை விட்டுவிட்டு வெளியூரில் தங்கியிருந்து வேலை பார்க்கும்போது இருக்கும் நினைவுகள் இருந்தால் அப்படி யாரேனும் இருந்தால் அவர்களுடைய அனுபவங்களை கேட்டுப் பாருங்கள். அனைவரும் நலமாக இருக்க இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள். உங்களால் இந்த உணர்வை புரிந்துகொள்ள முடிகிறதா? நேசிபபவர்களிடம் இருந்து தொலைவில் வாழ்வது கடினமானது மட்டுமல்ல மோசமானது. இங்கே என்னுடைய இத்தனை வருடங்களின் வாழ்க்கையில் இதுபோன்ற சின்ன சின்ன உணர்வுகளும் சம்பவங்களும்  மட்டுமே வாழ்க்கைக்கு ஒரு அருமையான நினைவுகளின் களஞ்சியத்தை கொடுக்கிறது. !!

Thursday, May 5, 2022

WHY SPIDERMAN NO WAY HOME IS SPECIAL ? - CINEMATIC WORLD SPECIAL MENTIONS - திரை விமர்சனம் [REGULATION 2024 - 00081]

ஸ்பைடர் மேன்  நோ வே ஹோம்  : இந்த படம் 2021 இல் வெளிவந்தது. இந்த படத்துடைய கதை , ஸ்பைடர் மேன் பார் பிரேம் ஹோம் படத்தின் சம்பவங்களை தொடர்ந்து ஸ்பைடர் மேன் என்பது பீட்டர் பார்க்கர் என்று உலகத்துக்கே தெரியவர இதனால  பீட்டர் பார்க்கர் மற்றும் அவரை சார்ந்த எல்லோரும்  பிரச்சனைகளில் மாட்டிக்கொள்கிறார்கள். கடைசியாக எல்லோரையும் மறந்து போகச்செய்யும் பிரபஞ்சத்தின் சக்திவாய்ந்த ஒரு மாய நிகழ்வு டாக்டர் ஸ்ட்ரென்ச் உருவாக்கும்போது அந்த மாயஅமைப்பு உடைந்து ஸ்பைடர் மேன் (2002 - 2008) மற்றும் தி அமேசிங் ஸ்பைடர் மேன் (2012 - 2014) யூனிவெர்ஸ் களின் வில்லன்களால் தாக்கப்படும் ஸ்பைடர் மேன் அவர்களை தடுக்க முயற்சிப்பதே இந்த படத்தின் கதை, இந்த படத்தின் நிறைய சிறப்பான விஷயங்கள் என்னவென்றால் ஒரு ஸ்பைடர் மேன் திரைப்படத்தில் கிட்டத்தட்ட ஒரு கனவு ப்ராஜெக்ட் செய்து முடித்து ரசிகர்களுக்கு நிறைய ஆச்சரியங்களை கொடுத்துள்ளது படத்தின் திரைக்கதை, மார்வெல் மற்றும் ஸ்பைடர் மென் ரசிகர்களுக்கு இது ரொம்பவுமே மன நிறைவான படைப்பு எனலாம். சினிமாவின் ஒரு பரிமாணத்தை கடந்து ஒரு புதிய விஷயத்தை சாதித்து காட்டியுள்ளது இந்த படம். கதையை முழுமையாக சொன்னால் ஸ்பாயிலெர் ஆக இருப்பதால் படம் பார்த்தவர்கள் ரெவியூக்களை கமெண்ட் செய்யவும், ONE LINE REVIEW : SPIDERMAN NO WAY HOME - MULTIVERSE OF GREATNESS !இந்த படம் கண்டிப்பாக என்னுடைய ஃபேவரேட் பட்டியல்லில் இருக்கும் !

Thursday, January 27, 2022

WHY MARVEL'S ETERNALS IS SOMETHING DIFFERENT - TAMIL - பூமி தாங்காது !!! [REGULATION 2024 - 00080]

WHY MARVEL'S ETERNALS IS SOMETHING DIFFERENT - TAMIL - பூமி தாங்காது


<iframe width="602" height="427" src="https://www.youtube.com/embed/TENATkDzPeo" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

MARVEL'S ETERNALS இந்த படம் 2021 இல் வெளிவந்தது, இந்த படத்துடைய கதை : இந்த பிரபஞ்சத்தில் மிகப்பெரிய சக்திகளை கொண்டுள்ள பிரம்மாண்ட உருவம் கொண்ட "செலஸ்டியல் அரைசம்" என்பவரால் உருவாக்கப்பட்ட ETERNALS என்ற சாகாவரம் பெற்ற மனிதர்கள், DEVAINTS என்ற மனிதர்களை தாக்கும் உயிரினங்களை அழிக்க போராடும் இந்த ETERNALS இப்போது நிகழ் காலத்தில் ஒரு ஒரு புதிய செலஸ்டியல் உருவாகவும் பூமி போன்ற ஒரு கிரகத்தை தியாகம் செய்ய வேண்டும் என்றும் கடந்த 5000 ஆண்டுகளாக பூமியை காப்பாற்றியது கடைசியில் பூமியை உடைத்து ஒரு செலஸ்டியல் உருவாகத்தான் என்று உண்மையை கடைசியாக கண்டுபிடிக்கும் இந்த படையினர் எப்படியாவது செலஸ்டியலை தடுத்து விடலாம் என்று ஒரு குரூப் ஆக போராடுவதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தில் நிறைய காட்சிகள் ஃபேமிலியாக பார்க்கும் அளவுக்கு இல்லை என்பதுதான் சோகமான விஷயம், MISSION IMPOSSIBLE FALLOUT  , THE DARK KNIGHT RISES படங்களில் இடம் பெற்றுள்ள 16:9 கேமரா இருந்து 2.35:1 கேமரா மாறும் காட்சிகள் இந்த படத்தில் நிறையவே இருந்தாலும் பாராட்டும்படியான விஷயம் NON LINEAR NARRATION எனலாம், கிட்டத்தட்ட 5000 வருடங்களாக ஒரு குழுவின் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக ஃபிளாஷ் பேக் காட்சிகளில் சொல்வது இந்த படம் பார்க்கும்போது புதுமையாக இருந்தது  இந்த படம் வணிக அளவில் வெற்றியை கொடுக்காமல் போக காரணம் என்னவென்றால் மார்வெல் படங்களை இன்னொரு கட்டத்துக்கு எடுத்து செல்ல முயற்சி செய்த இந்த திரைப்படம் மேலும் இன்னமும் மற்ற படங்களின் கதைக்களத்தை சிக்கலாகவே மாற்றுகிறது என்பதை மறுக்க முடியாது , இருந்தாலும் இந்த படம் ஒரு புதுமையான படைப்பு - AVENGERS : இன்பினிட்டி WAR என்ற படம் போல ETERNALS : ENDLESS WAR என்று டைடல் போட்டு இன்னும் இரண்டு மூன்று பாகங்களை எடுத்து படம் வரிசையாக வெளியிடும் அளவுக்கு ஒரு தரமான திரைக்கதை இந்த படத்தில் துல்லியமான முறையில் காட்சிகளை காட்டியுள்ளது. TOO MUCH OF ANYTHING BECOMES NOTHING என்பதுதான் இந்த ETERNALS : BEGINS படத்தின் கருத்து. இருப்பினும் ஒரு படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை மற்றும் கட்டுப்பாடுகளை உடைக்க முயற்சி செய்த படம் என்றும் இந்த படத்தை கருதலாம். அடுத்து அடுத்த பாகங்களில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக படம் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். மார்வெல் சினிமா யுனிவர்ஸ் படங்களின் வரிசையில் 24 வது படமாக வெளிவந்து இருக்கும் இந்த திரைப்படம் அனைவரும் பார்க்கும் படியாக இல்லை எனலாம். ONE LINE REIVEW : CHOLE ZHAO'S - JUSTICE LEAGUE : PART ONE OF POSSIBLY INFINITY  :]


Monday, January 24, 2022

CINEMATIC WORLD - 056 - WE BARE BEARS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION 2024 - 00079]

 

 WE BARE BEARS - THE MOVIE இந்த படம் 2020 இல் வெளிவந்தது. இந்த படத்துடைய கதை , கரடிகள் பாண்டா, பிரவுன் மற்றும் கோலா காடுகளை விட்டு நகர்ப்புறத்தில் தங்கி வாழ்கின்றனர். மனிதர்களோடு வாழ்ந்துகொண்டு இருப்பதால் மனிதர்கள் போலவே சோஷியல் மீடியா அக்கவுண்ட் செய்து வியூ, கமெண்ட்ஸ், மற்றும் ஃபாலோவேர்ஸ் வாங்க இவர்கள் செய்த முயற்சியில் மின் தடை உருவாகவே இதனை காரணமாக வைத்து ஒரு வனவிலங்கு கட்டுப்பாடு துறை அதிகாரி இந்த கரடிகளை சிறையில் அடைக்க முயற்சி செய்கிறார், இவரிடம் இருந்து எஸ்கேப் ஆகிய இந்த நட்பு வட்டாரம் கடைசியில் கனடா நாட்டின் காடுகளுக்கு செல்ல பயணிப்பதுதான் இந்த படத்துடைய கதை யின் பிளஸ் பாய்ண்ட் இந்த படத்தின் நகைச்சுவை கலந்த வேகமான திரைக்கதை நகர்த்தல் எனலாம் தொடக்க காட்சியில் இருந்து கடைசி காட்சி வரைக்கும் படம் ரொம்பவுமே சுவாரஸ்யமாக ஆனால் சோஷியல் மீடியா தாக்கம், காடுகள் அழிப்பு, வனவிலங்கு பாதுகாப்பு என நிறைய யோசிக்க வேண்டிய கருத்துகளையும் முன்வைத்து நகர்த்தி படத்தை ஒரு நல்ல படைப்பாக கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுகள். ஒரு அனிமேஷன் நெடுந்தொடருக்கு கதைக்களத்தில் ஒரு பகுதியாக வெளிவந்து இருக்கும் இந்த படம் இந்த அனிமேஷன் நெடுந்தொடருக்கு ஒரு நல்ல மதிப்பை கொடுத்துள்ளது. ONE LINE REVIEW : " BEST ONE TIME WATCH " நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 

CINEMATIC WORLD - 055 - TOM AND JERRY - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! [REGULATION 2024 - 00078]

 


 டாம் அண்ட் ஜெர்ரி - பிலாஸ்ட் ஆஃப் மார்ஸ் , மேஜிக் ரிங் , ஷிவர் மி விஸ்க்கர்ஸ் என்று நிறைய படங்கள் நம்முடைய டாம் அண்ட் ஜெர்ரி ரசிகர்களுக்காக இருக்கிறது. இந்த காலத்து டாம் அண்ட் ஜெர்ரி என்பது சோர்ஸ் மேட்டிரியல் கொடுத்த மேஜிக்கை மறுபடியும் கிரியேட் பண்ணுவது கஷ்டம் என்பதால் இந்த படத்தின் திரைக்கதைக்காக ரொம்பவே மெனக்கெட்டு வொர்க் பண்ணி ரொம்ப ரொம்ப கிரியேட்டிவ்வாக கதையை எழுதி இருப்பதை உண்மையிலேயே ரொம்ப பாராட்டியாக வேண்டும் !! டாம் கேட் மென்ஹேட்டென் நகரத்தில் ஒரு பியானோ வாசிப்பாளராக உருவாக முயற்சி செய்யும்போது ஜெர்ரி தடுத்து விடுகிறது இதனால் டாம் ஜெர்ரியை துரத்துகிறது. இந்த நிலையில் ராயல் கேட் ஹோட்டல்லில் ஒரு நல்ல வேலையை எதிர்பார்த்து அங்கே வேலைக்கு சேரும் கெயிலா அங்கே நடக்கும் ஒரு திருமண நிகழ்ச்சியை சிறப் பாக நடத்தி கொடுக்கும் பொறுப்புகளை பெறுகிறார். இந்த நிலையில் டாம் மற்றும் ஜெர்ரி செய்யும் விஷயங்களால் அந்த திருமண நிகழ்ச்சி எப்படி பாதிக்கப்படுகிறது மெள் மேலும் எப்படி அவர்கள் செய்த பிரச்சனைகளை அவர்களாகவே சரி செய்ய டாம் மற்றும் ஜெர்ரி முயற்சிகளை எடுக்கின்றனர் என்பதுதான் இந்த படத்துடைய கதை. தமிழ் மொழி டப்பிங் படத்துக்கு சிறப்பாக அமைந்துள்ளது. டாம் அண்ட் ஜெர்ரி அனிமேஷன் தொடரின் ரசிகர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்கும் என்பதில் மறுப்பு இல்லை. வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் ரொம்ப வருடங்களாக எதிர்பார்த்து வெளிவந்து இருக்கும் இந்த திரைப்படம் வில்லியம் ஹனா மற்றும் ஜோசப் பார்பரா அவர்களின் காலத்தில் வெளிவந்த டாம் அண்ட் ஜெர்ரி படங்களின் காலங்களை நினைவுபடுத்துகிறது. ONE LINE REVIEW : TOM AND JERRY - SPECIAL EDITION நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 

CINEMATIC WORLD - 054 - SPIES IN DISGUISE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION 2024 - 00077]

 



ஸ்பைஸ் இன் டிஸ்கஸ் - இந்த படம் 2020 ஆம் ஆண்டு வெளிவந்தது , இந்த படத்துடைய கதை WILL SMITH இந்த உலகத்திலேயே மிகவும் சிறப்பான தரமான ஸ்பையாக இருக்கிறார், வில்லன்களின் இடத்துக்கே சென்று ஆக்ஷன் செய்து யாராலும் தோற்கடிக்க முடியாத ஒரு ஸ்மார்ட் ஆன ஹீரோவாக இருக்கும் இவருக்கு ஹாப்ஸ் அண்ட் ஷா படம் போலவே தேடப்படும் குற்றம் செய்தவர் என ஃபிரேம் செய்து விடுகின்றனர். இதனால் தப்பித்து செல்லும் வில் ஸ்மித் அவருடைய உருவத்தை மாற்றிக்கொள்ள டேக்னாலஜி ஜீனியஸ் ஆன டாம் ஹாலண்ட் இன் உதவியை கேட்க டாம்இன் சோதனை முயற்சியில் ஒரு பறவையாக நம்முடைய கதாநாயகர் மாற்றப்படுகிறார். ஆனால் இந்த பறவை உருவத்தில் இருந்தே வில்லனை தோற்கடிக்க முடியுமா ? அதுதான் இந்த படத்தின் கதை, ஒரு அனிமேஷன் படம் என்றாலும் நிறைய ஸ்பை திரைப்படங்களின் அந்த ஸ்டைல்ஐ கொண்டுவந்து சண்டை காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுக்கிறது காட்சியமைப்பு, தொடக்கம் முதல் கடைசி வரைக்கும் ஃபைட் காட்சிகள் மற்றும் சேஸின்க் காட்சிகள் படத்துக்கு விறுவிறுப்பை கொடுக்கிறது, கதையின் கான்ஸெப்ட் கொஞ்சம் சொதப்பல்தான் நான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் கண்டிப்பாக இந்த படத்தை கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். ONE LINE REVIEW : SPY PADAM IN ANIMATION !!! நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...