TENET - இந்த படத்தை பற்றிய இண்டரெஸ்ட்டிங் ஆன விஷயம் என்ன தெரியுமா ? இந்த படத்தில் கடைசி வரைக்கும் ஹீரோவின் பெயர் சொல்லப்பட்டு இருக்காது. இந்த படத்தில் ஹீரோ எதிர்காலத்தில் இருந்து காலத்தில் ரேவர்ஸில் பயணிக்க கூடிய ஒரு பரிமாண சக்தியை ஆராய்ச்சி செய்யும் ஒரு குழுவில் சேர்க்கிறார். இந்த சக்தி இந்த உலகத்துக்கு அழிவு உருவாகாமல் தடுக்க எதிர்காலத்தில் இருந்து அனுப்பப்படுவதாக கருதி இந்த சக்திகளை உடைய பொருட்களையும் நடக்கும் சம்பவங்களின் பின்னணியையும் தெரிந்துகொள்ள நிறைய இடங்களுக்கு சென்று கடைசியில் இந்த படத்தின் வில்லனை சந்திக்கிறார்கள். ஹீரோவும் அவருடைய குழுவில் இருப்பவர்களும் இந்த வில்லன் இந்த உலகத்தை அழிப்பதற்கு முன்னால் நடக்கப்போக்கும் சம்பவங்களை தடுக்க முடிந்ததா என்பதுதான் இந்த படத்துடைய கதைக்களம். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக எதிர்பார்த்த இந்த திரைப்படம் கண்டிப்பாக எதிர்பார்த்த அளவுக்கு இருக்கிறது. இந்த படத்துடைய கதை மிகவும் அருமையாக இருக்கும். நிறைய காட்சிகள் கொஞ்சம் புரியவில்லை என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட ஒரு பெரிய சயின்ஸ் ஃபிக்ஷன் வெப் சீரிஸ்ன் SEASON 2 EPISODE 15 ஐ பார்ப்பது போலத்தான் இருந்தது. கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் ஒரே நேரத்தில் பயணம் செய்தால் அந்த காட்சிகள் எப்படி இருக்கும் என்ற இமாஜினேஷன் இந்த படத்துக்கு ஒரு புதிய பரிமாணத்தையே கொடுத்துள்ளது. இனசெப்ஷன் திரைப்படத்தில் கனவுகள் - இன்டர்ஸ்டெல்லார் திரைப்படத்தில் விண்வெளி என்று ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் கான்செப்ட்டாக காலத்தை பயன்படுத்தும் காட்சிகள் மிகவும் அருமையாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். MISS பண்ணாம பாருங்க.. இந்த இயக்குனருக்கு மட்டும் எங்க இருந்து இவ்வளவு கிரியேட்டிவ் ஆன ஐடியாக்கள் கிடைக்கிறது , நான் எல்லாம் பேனாவும் நோட்புக்கும் எடுத்து வைத்துக்கொண்டு கதை எழுதினால் ஒரு பக்கம் கூட எழுத முடிவது இல்லை. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு வசனம் நடந்தது நடந்துடுச்சு இந்த ஒரு வார்த்தை நம்பி தான் இந்த உலகமே உன்னைப் பொறுத்தவரைக்கும் அதுக்கு பேரு என்ன ? அதுக்கு பேர் தான் எதார்த்தம் !!! இது எனக்கு ரொம்ப பிடிச்ச வசனம். இந்த மாதிரியான படங்கள் கண்டிப்பாக உலக சினிமாவுக்கு கிரேயடிவிட்டி எல்லைகளை எல்லாமே கடந்து வெற்றி அடைய சொல்லிக்கொடுத்து இருக்கிறது. இந்த படம் ரொம்பவே பாராட்டப்பட வேண்டிய விஷயம் !!
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Sunday, September 26, 2021
CINEMATIC WORLD - 042 - THE PRESTIGE - TAMIL REVIEW - தொழில் முறை போட்டி போராக மாறிய கதை - திரை விமர்சனம் !! [REGULATION 2024 - 0061]
THE PRESTIGE - இந்த படம் CHRISTOPER NOLAN இயக்கத்தில் வெளிவந்த ஒரு செம்ம ஹாலிவுட் திரைப்படம் என்று சொல்லாம். உங்களுக்கு ஹாலிவுட் படங்கள் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக நீங்கள் ஒரு முறை பார்க்க வேண்டிய திரைப்படம்தான் தி ப்ரெஸ்டிஜ் - இந்த படத்துடைய கதை. 1950 களில் ஆல்ஃபிரட் ஒரு மாயாஜால வித்தைகளை காட்டும் ஃபேமஸ் மேஜிஷியானாக இருக்கிறார். மேஜிக் நடக்கும்போது ஒரு எதிர்பாராத விபத்தில் அவருடைய மனைவி இறந்த பின்னால் அந்த இறப்புக்கு காரணம் அவரோடு பணிபுரியும் போரான் என்பவர்தான் என்று நினைத்து அவர்மீது கோபமாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் போரானை தாக்க முயற்சிக்கும்போது போரானுக்கு பாதிப்பு உருவாகிறது. இந்த சம்பவத்துக்கு பின்னால் அவரும் ஆல்ஃபிரட்டை எதிர்த்து போட்டி போடுகிறார். ஆல்ஃபிரட் மாயாஜாலம் செய்யும்போது அவருடைய மாயாஜாலங்களை தடுத்து அவரை காயப்படுத்துகிறார். இவர்களுக்குள் நடக்கும் இந்த பிரச்சனைஇன்னும் சீரியஸ் ஆகும்போது ஒரு கட்டத்தில் ஸ்டேஜில் ஒரு இடத்தில் இருந்து மறைந்து இன்னொரு இடத்தில் தோன்றும் ஒரு மிகவும் கடினமான மேஜிக்கை செய்ய இவர்களுக்குள் மிகப்பெரிய போட்டி உருவாகிறது. இதனை அடுத்து நடக்கும் சம்பவங்கள்தான் ப்ரெஸ்டிஜ் திரைப்படத்தின் கதைக்களம். இந்த படம் 2006 ல் வெளிவந்தது. இந்த படம் அவ்வளவு சூப்பராக இருக்கும். கிட்டத்தட்ட மிஸ் பண்ணாமல் பாருங்க.. உங்களால் கண்டிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை கெஸ் பண்ண முடியாது. இவ்வளவு அருமையான திரைப்படம் எப்படி நான் மிஸ் பண்னினேன் என்று எனக்கே தெரியவில்லை.கொஞ்சம் கொஞ்சமாக இந்த இருவருடைய வெறுப்பு DEVOLOP ஆகும்போது ஒருவரை ஒருவர் அழித்தே ஆகவேண்டும் என்று சபதம் எடுக்காத குறையாக சண்டைப்போட்டுக்கொள்வார்கள். ஒரு படம் பார்த்தால் கிளைமாக்ஸ் வரைக்கும் இந்த படம் ஒரு MYSTERY படம் ஆனால் CLIMAX இல் இந்த படம் ஒரு SCIENCE FICTION படம் என்று சொன்னால் உங்களுக்கு எவ்வளவு சர்ப்ரைஸ்ஸாக இருக்குமோ அவ்வளவு சர்ப்ரைஸ்ஸாக எனக்கு இந்த படம் பார்க்கும்போது இருந்தது .
BEST FILM - THE EXTRAORDINARY JOURNEY OF FAKIR - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! [REGULATION 2024 - 0059]
BEST FILM - THE EXTRAORDINARY JOURNEY OF FAKIR - TAMIL - தி எக்ஸ்ட்ராடினரி ஜெரனி ஆப் பகிர் - இந்த படம் 2019 ல் கென் ஸ்காட் இயக்கத்தில் வெளிவந்தது. இந்த படத்தை நான் தமிழ் மொழியில் பார்த்துள்ளேன், ஆங்கில மொழியிலும் பார்த்துள்ளேன். எனக்கு பிடிச்ச வெர்ஷன் என்னவென்று கேட்டால் நான் தமிழ் வெர்ஷன் என்றுதான் சொல்வேன். நம்ம ஊரு மொழியில் இந்த படம் பார்க்கும்போது பின்னணி இசையும் டப்பிங் மொழிபெயர்ப்பும் அவ்வளவு அருமையாக இருந்தது இந்த படத்துக்கு தமிழ் மொழிபெயர்ப்பில் பேக்ரவுண்ட் மியூசிக் சிறப்பாக இருந்தத்து ஆனால் இங்கிலீஷ் வெர்ஷன்ல வேறு ஒரு ஸ்டைலில் இருந்தது. இந்த படத்துடைய கதையை பற்றி சொல்லலாம். இன்னமும் கொஞ்சம் நேரத்தில் சிறை தண்டனைக்காக ஜூவலைன் பள்ளிக்கூடம் அனுப்பப்படும் பாசங்ககிட்ட அவர்களை சந்திக்கும் ராஜகுமரகுரு \ தனுஷ் அவருடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார். பாரிஸ் போனபோது அவருக்கு அங்கே என்னவெல்லாம் நடந்தது. மேலும் ஒரு ஐகியா ஷோரூம்ல ஆரம்பிக்கும் அவருடைய கதை காதல், அட்வென்சர், சேசிங், ஆக்ஷன், அப்படின்னு எப்படி நிறைய கட்டங்களை கடந்து கடைசியில் அவருக்கு உதவி செய்த நண்பர்களுக்கு அவரால முடிந்த வரைக்கும் உதவி செய்வதில் முடிந்தது என்பதை ரொம்பவும் ஸ்வரஸ்யமாக இன்டரேஸ்டிங் ஆக சொல்கிறார். 2019 ல வெளிவந்த திரைப்படங்களில் இந்த படம் ஒரு FEEL GOOD MOVIE. இந்த படத்துடைய கிளைமாக்ஸ் ரொம்ப நல்லா இருக்கும். சொன்னால் SPOILER ஆகிவிடும். படம் பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள். என்னுடைய பெர்சனல் ஃபெவரேட் தமிழ் வெர்ஷன்தான். சும்மா பியானோ பட்டனை 4 தட்டு தட்டிவிட்டு இதுதான் பின்னணி இசை என்று சொன்னால் வேலைக்கு ஆகுமா ?
GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !
ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...
-
ஊதா ஊதா ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் சொல்லடி அவனுக்கு நான் ச...
-
பணமும் நம்பிக்கை துரோகங்களும் - இங்கே மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய பொருட்கள் அவனை எப்போழுதுமே கைவிடுவதில்லை. காரணம் என்னவென்றால் அ...