சனி, 9 டிசம்பர், 2023

GENERAL TALKS - TAMIL LYRIC COPYRIGHT PROBLEM - பிரச்சனை - ஒரு சிறப்புப்பார்வை !!

 


இங்கே நம்ம ஊருல வாழ்க்கையில் முதல் முறையாக "பள்ளிக்கட்டு சபரிமலைக்கு" என்ற வார்த்தையையும் "அமைதியான நதியினிலே ஓடம்" என்ற வார்த்தையையும் பேசினதுக்காக காப்புரிமை மீறல் என்று ஒரு பெரிய கம்பெனி ஸ்டிரைக் கொடுத்து இருக்கிறது. இந்த விஷயத்தை பற்றி அப்போது யாருமே கண்டுகொள்ளவே இல்லை. இப்போது வரைக்குமே இந்த பெரிய நிறுவனங்கள் தங்களிடம் இருக்கும் பணம் போதாது என்ற காரணத்துக்காக சின்ன சின்ன இணைய காணொளி ப்ரொடியூசர்ஸ்களுக்கு ஸ்டிரைக் கொடுத்து அவர்களுடைய பணத்தை பிடுங்க முயற்சி பண்ணுகிறார்கள். தமிழில் வார்த்தைகள் மூன்று இலட்சம் என்று ஊர்வசி ஊர்வசி பாடலில் ஒரு வரி வரும். இங்கே எல்லா வார்த்தைகளுமே இந்த கம்பெனிக்கள் உரிமை வைத்து இருக்கும் பாடல்களில் இருக்கிறது. அப்படியேன்றால் இந்த கம்பெனிகள்தான் தமிழ் மொழிக்கு அரசர்களா ? தமிழ் மொழி இவர்களுக்கு பணிந்து நடக்க வேண்டுமா ? இங்கே இவர்கள் பண்ணிய இந்த விஷயம் ஒரு மன்னிக்க முடியாத குற்றம் ! ஒரு படத்தில் இது உங்கள் சொத்து என்று போர்ட் போட்ட காரணத்துக்காக அரசாங்க பேருந்து என்னுடையது என்று வாக்குவாதம் பண்ணும் காட்சி உங்களுக்கு நினைவு இருக்கிறதா ? இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் ஒரு படி மேலே சென்று தமிழ் மொழியே என்னுடையது என்று சொல்லுகிறார்கள். ஒரு பெரிய கம்பெனி இப்போது தமிழ் மொழியில் ஃபான்ட்களை டிசைன் செய்து தமிழ் மொழி என்னுடையது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறது. இப்போது இந்த கம்பெனிக்கள். நீங்கள் எழுதவும் கூடாது பேசவும் கூடாது எல்லாமே எங்களுக்கு சொந்தம் என்று இந்த மாதிரி தனியார் நிறுவனங்கள் நடந்துகொள்வது சரியானது இல்லை. இது ஒரு மன்னிக்க முடியாத குற்றம் இந்த விஷயத்தை இப்படியே விட்டுவிட வேண்டாம் !!

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...