ஞாயிறு, 12 அக்டோபர், 2025

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ?
அன்னையா ? தந்தையா ? தெய்வமா ?
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ?
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ?


கற்றோர்க்கு பொருள் இன்றி பசி தீருமா ?
பொருள் பெற்றோர்க்கு அறிவின்றி புகழ் சேருமா ?
கற்றாலும் பெற்றாலும் பலம் ஆகுமா ?
வீரம் காணாத வாள் என்றும் வாழ்வாகுமா ?

ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது
அது ஒன்றினில் ஒன்றாக பொருளானது
ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது 
மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகர் ஏது ?


மூன்று தலை முறைக்கும் நிதி வேண்டுமா ?
காலம் முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா ?
தூங்கும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா ?
இவை மூன்றும் துணை நிற்கும் நலம் வேண்டுமா ?

CINEMA TALKS - 3 BODY PROBLEM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் பின்னணியில் பாதிக்கப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகளோடு அமைக்கப்பட்ட சைண்டிஸ்ட்களின் சொந்த கதை சோக கதைதான் இந்த "மூன்று-பொருட்களின் பிரச்சனை"!

இயற்பியலாளர் யே வென்ஜி மற்றும் நானோ பொருட்கள் ஆராய்ச்சியாளர் வாங் மியாவோவின் தலைவிதியை பின்னிப்பிணைக்கிறது தாறு மாறான வேற்றுகிரக வாசிகளின் சதி வேற லெவல்லில் இருக்கிறது.

ஒரு போலீஸ் ஆபிசர் விஞ்ஞானிகளிடையே தொடர்ச்சியான மர்மமான தற்கொலைகளுக்குப் பிறகு அறியாமலேயே ஒரு வேற்றுகிர போர் காலத்தின் நெருக்கடியில் சிக்குகிறார். 

சம்மந்தம் இல்லாமல் ஒரு மெய்நிகர் ரியாலிட்டி விளையாட்டின் மூலம், வேற்றுகிரகவாசி நாகரிகமான ட்ரைசோலரன்ஸ் - அதன் மூன்று சூரியன்கள் காரணமாக கணிக்க முடியாத மற்றும் பேரழிவு தரும் சகாப்தங்களைத் தாங்கும் சொந்த கிரகம் - பூமியை ஆக்கிரமிக்கத் திட்டமிட்டுள்ளது என்பதை வாங் கண்டுபிடிப்பதாக காட்சிகள்- மெயின் கதையை சொல்ல இப்படியும் ஒரு வழியா ?

மனிதகுலத்தால் ஏமாற்றமடைந்த சீன கலாச்சாரப் புரட்சியின் கொடூரங்களில் இருந்து தப்பித்த யே வென்ஜி, பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வேற்றுகிரகவாசிகளை ரகசியமாகத் தொடர்பு கொண்டார். அப்போது பிளான் பண்ணி பூமிக்கு படையெடுத்த நமது ஏலியன்கள் பூமிக்கு வருகை தரவே 400 வருஷங்கள் ஆகுமாம்.

நமது ஹீரோயின் இந்த ரகசியங்களை வெளிப்படுத்தும்போது, ​​பூமி வரவிருக்கும் வேற்றுகிரகவாசிகளின் அச்சுறுத்தலை நேருக்கு நேராக எதிர்கொள்கிறார் என்பதை அவர் உணர்கிறார், இந்த கதை அறிவியல், ஒழுக்கம் மற்றும் உயிர்வாழ்வு பற்றிய ஆழமான கேள்விகளை எழுப்புகிறது. கிளைமாக்ஸ்ஸில் உலகமே இணைந்து பிளான்களை போட்டு வைப்பதோடு கதை முடிகிறது. 

சனி, 11 அக்டோபர், 2025

CINEMA TALKS - ALEX PANDIAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



நிறைய ART பிலிம்மாக பார்த்து பார்த்து இப்பொது எல்லாம் கமேர்சியல் சினிமாக்களை பார்க்கும் யோசனையும் வந்துவிட்டது. அலெக்ஸ் பாண்டியன் - பணத்துக்காக CM மகளை கடத்தும் ஒரு இளைஞர் நம்ம ஹீரோ கார்த்தி  - சம்மந்தமே இல்லாமல் சந்தானத்தின் வீட்டில் கேஸட்டாக இருந்து சந்தானத்தின் தங்கைகளோடு ரொமான்டிக் பேச்சுக்களும் காமேடியும் என்று தனியாக ஒரு காமெடி டிராக் ! - எப்போதும் போல 4 பாட்டு , 4 சண்டை காட்சிகள் , நிறைய காமெடியோடு கூடிய திரைக்கதை என்று கமேர்ஸியல் படங்களுக்கு தேவைப்படும் பொருத்தங்களோடு ஒரு படம், இப்போது எல்லாம் GOOD BAD UGLY போல மொக்கை படங்களை எல்லாம் இந்த வகை படங்கள்தான் இன்ஸ்பெர் பண்ணுகிறது, வெங்கட் பிரபு - பிரியாணி திரைப்படத்தில் இருந்து இந்த படத்தில் இல்லாத ஒரு விஷயம் கதைதான், கதை என்று வெறும் ஒரு வரிதான் இருக்கிறது. தமிழ் ஆடியன்ஸின் ரசனைக்கு ஏற்ப மசாலா ஆக்ஷன் படங்களை எல்லாம் ஒரு அலசு அலசி பெஸ்ட்டாக தோன்றிய காட்சிகளை படமாக கொடுத்து இருக்கிறார்கள் ! கதை ஒரு முக்கியமான பகுப்பாய்வு அல்லது சமூக விமர்சனத்தை நோக்கி இருக்குமானால் இந்த அளவுக்கு கமேர்ஸியல் சாயல் தூக்கலாக வைக்க காரணம் என்ன ? குசேலன் படத்தை விட சிறப்பாக உள்ளது ஆனால் பெட்ட படம் அளவுக்கு இல்லை. கார்த்தி எப்போதும் ஜப்பான் , அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்களை கவனமாக இனிமேல் தேர்ந்தெடுக்காமல் இருந்தால் நல்லது, இந்த படத்தை மேலோட்டமாக கதைக்கும் - ஒரு பழைய ஸ்டைல் காமெடிக்கும் எதிர்பார்த்து பார்த்தால் நீங்கள் கிளைமாக்ஸ் காட்சியின் சராசரியான யூசுவல் வில்லன்களை பறக்கவிடும் சண்டை காட்சிகளை மன்னித்துவிடும் அளவுக்கு பாக்குவப்படலாம், நம்ம ஆட்கள்தான் வலிமை போன்ற படத்துக்கு ஆதரவு கொடுக்காமல் குட் பேட் அக்லி போல சுமாரான படத்துக்கு பேரதரவு ஹிட் கொடுக்கிறார்கள் என்றால் மூளை சுருங்கிவிட்டது என்ற கட்டத்தில் இது போன்ற படங்களுக்கு ரசனை கூடுகிறது. சிறுத்தை படமே என்னை பொறுத்தவரை சுமாரான படம்தான் ! இது அதை விட சுமாராக ஒரு எமோஷனல் ஆர்க் இல்லாமல் இருப்பதாலோ வெற்றியை அடையவில்லை !

புதன், 8 அக்டோபர், 2025

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




ஒரு பொய்யாவது 
சொல் கண்ணே
உன் காதல் 
நான் தான் என்று
அந்த சொல்லில் 
உயிர் வாழ்வேன்

பூக்களில் உன்னால் சத்தம்
அடி மௌனத்தில் 
உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா 
என் நெஞ்சம் ?

பெண்மையும் 
மென்மையும்
பக்கம் பக்கம்தான்
ரொம்பப 
பக்கம் பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும்
வேறுதான்

பாலுக்கும் 
கள்ளுக்கும்
வண்ணம் 
ஒன்றுதான்
பார்க்கும் கண்கள் 
ஒன்றுதான்
உண்டால் 
ரெண்டும் வேறுதான்

இரவினைத் திரட்டி
கண்மணியின் குழல் 
செய்தாரோ ?


நிலவின் ஒளி திரட்டி
கண்கள் செய்தாரோ ?

விண்மீன் விண்மீன் 
கொண்டு
விரலில் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் 
கொண்டு
கைரேகை செய்தானோ ?

வாடைக் காற்று பட்டு
வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டு தங்கம் தங்கம்
பூசித் தோள் செய்தானோ ?
ஆனால் பெண்ணே
உள்ளம் கல்லில் 
செய்து வைத்தானோ !

காதல் கண்ணே
உள்ளம் கல்லில் 
செய்து வைத்தானோ !


நிலவினை எனக்கு 
அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் 
சொன்னதும் நீதானே !

காற்று பூமி வானம்
காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் ? யார் ?
என் அன்பே நீதானே

கங்கை கங்கை 
ஆற்றை
கவிதைகள் கொண்டு தரும்
காவிரி ஊற்றை 
கண்ணில்
கையில் தந்தவன் நீதானே

ஆனால் பெண்ணே 
நெஞ்சை மட்டும் 
மூடி வைத்தாயே
காதல் கண்ணே 
நெஞ்சை மட்டும் 
மூடி வைத்தாயே !

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...