ஏப்ரல் மேயிலே
பசுமையே இல்லே
காஞ்சு போச்சுடா
இந்த ஊரும் புடிக்கலே
உலகம் புடிக்கலே
போரு போருடா
இது தேவையா ?
அட போங்கையா
ஜூன் ஜூலையா
பட்டாம் பூச்சிகள்
பறக்குது பறக்குது
கண்ணாமூச்சிகள்
நடக்குது நடக்குது
பச்சைப் பசுமைகள்
தெரியுது தெரியுது
அழகு கிளிகள்
நமது விழியில்
வலம் வருதே
குர்தா மேக்சியும்
சல்வார் கமீசும்
சுமந்த பெண்களே !!
எங்கே என்றுதான்
இங்கே இன்றுதான்
வருந்தும் கண்களே !!
வீட்டில் நிற்குற
காவல் காரரும்
மொறச்சு பாக்குறார்
சோலைக் கொள்ளையின்
பொம்மை போலவே
வெறச்சு போகிறார்
டிரைவ் இன்
ஹோட்டலும்
சாந்தோம் பீச்சும்
டல்லாய் தோன்றுதே
பாருங்கள்
பன்னீர் பூக்களை
பார்க்காதின்று
கண்ணீர்
வார்க்கிறோம்
நாங்கள்
நெஞ்சம் தாங்குமா ?
கண்கள் தூங்குமா ?
துன்பம் நீங்குமா ?
காலேஜ் அழகியும்
கான்வெண்ட் குமரியும்
தியேட்டர் போகுறார்
டாக்சி டிரைவரும்
பார்த்து பார்த்து தான்
மீட்டர் போடுவார்
காலை மாலைதான்
வேலை பார்ப்பவர்
மகிழ்ச்சி கொள்கிறார்
வாலைக் குமரிகள்
சாலை கடக்கையில்
வாயை பிளக்குறார்
ஸ்டெல்லா மேரிசும்
குயின் மேரிசும்
தென்றல் வீசிடும்
பூந்தோட்டம்
வஞ்சி பாவைகள்
தோன்றும்போது
நெஞ்சம் போடுதே
ஆட்டம்
எங்கள் பாடுதான்
சக்கப் போடுதான்
படா ஜோருதான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக