திங்கள், 11 டிசம்பர், 2023

CINEMA TALKS - VADA CHENNAI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 


 நிறைய க்ரைம் படங்களை நம்ம தமிழ் சினிமாவில் பார்த்து இருக்கலாம். ஆனால் இந்த படம் நீங்கள் முதல் முறையாக பார்ப்பதாக இருந்தால் அவ்வளவு ரியல்லிஸ்டிக் பாயிண்ட் ஆப் வியூவில் இருக்கும். வட சென்னையின் 90- களின் காலகட்டத்தில் நடந்த உண்மையான சம்பவங்களை போலவே இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டு இருக்கும்‌. இயக்குனர் வெற்றிமாறனை பொறுத்தவரைக்கும் நிறைய தரமான‌ படங்களை கொடுத்து இருந்ததால் இந்த படம் வெளிவந்த காலகட்டத்தில் இந்த படத்துக்காக‌ மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இவ்வளவு இன்டென்ஸாக இருக்கும் படத்தை நீங்கள் கண்டிப்பாக பார்த்து இருக்கவே முடியாது. சென்னையில் குறிப்பிட்ட பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தாலும் மக்களுக்கு பிரச்சனை என்றால் சரிசெய்ய முன்வந்து நின்றவர் ராஜன். இவருக்கு நெருக்கமானவர்களாகவே இருந்தாலும் சதிவேலைகள் செய்து இவருடைய உயிரை எடுத்துவிடுகிறார்கள். பின்னணியில் அரசியல், பணம், வன்முறையாளர்கள் என்று நிறைய விஷயங்கள் இருந்தாலும் ஒரு நல்ல மனிதனை கொன்ற பாவம் பின்னாட்களில் எங்கிருந்தோ தன்னுடைய வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை பார்த்துக்கொண்டு இருக்கும் அன்புவின் வாழ்க்கைக்குள் எப்படி வருகிறது என்பதை நான் லைனியர் நேரேஷனில் மிகவுமே பிரமாதமாக சொல்லும் படம்தான் வட சென்னை. இந்த படம் கமெர்ஷியல் ஆடியன்ஸ்ஸாக இருந்தாலும் சினிமாவை ஆர்ட் ஆஃப் ஸ்டோரிடெல்லிங் என்ற வகையில் பார்ப்பவராக இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு நொடியை கொடுக்கக்கூடிய படமாக இருக்கிறது. இந்த படத்தின் கதையின் கன்டினியுவேஷனை வெப்-சிரிஸ்ஸாக பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...